தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில், திமுக அமோக வெற்றி பெற்றது. திமுக-வின் பல துறை அமைச்சர்களும் தங்கள் துறைகளில் பல புதிய முன்னெடுப்புகளையும், சீர்திருத்தங்களையும் மேற்கொண்டு வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நிலையில், பல திட்டங்கள் ஏற்கனவே அதிமுக ஆட்சியில் துவக்கப்பட்டவை என்றும், அவற்றை திமுக தங்கள் சாதனைகளாக மார் தட்டிக்கொள்வதாகவும் அதிமுக தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றது. இதன் உச்சகட்டமாக இன்று முன்னாள் தமிழக முதல்வரும், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி (Edappadi K Palaniswami) ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.


இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாண்புமிகு அம்மாவின் ஆட்சிகாலத்தில் "விஷன் 2023" என்ற தொழிற்கொள்கை அறிவிக்கப்பட்டு,பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தொழில்வளர்சிக்காக போடப்பட்டன. மேலும் "மின்சார கொள்கை 2019" உருவாக்கப்பட்டு, பல்வேறு நிறுவனங்களுடன் தொழில் துவங்க புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.” என்று கூறியுள்ளார்.  



கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் 14 ஆம் தேதியன்று உலகிலேயே மிகப்பெரிய மின்சார வாகன தொழிற்சாலையை 2,354 கோடி முதலீட்டில் 500 ஏக்கர் பரப்பளவில் ஓலா நிறுவனம் துவக்கியது என்று கூறியுள்ள அவர், தங்கள் ஆட்சிக்காலத்தில் துவக்கபட்ட ஒரு நிறுவனத்தை தாங்கள் ஆட்சிக்கு வந்த 50 நாட்களுக்குள் கொண்டு வந்ததுபோல் திமுக பேசுவது ஏற்புடையதல்ல என்று தெரிவித்துள்ளார். 




ALSO READ: சிக்னல் பிரச்னை; சென்னை கடற்கரை - தாம்பரம் புறநகர் ரயில் சேவை பாதிப்பு


மேலும், தமிழ்நாட்டை தொழில்துறையில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக்க தொடர்ந்து செயலாற்றுமாறு அவர் தற்போதைய ஆட்சியாளர்களை கேட்டுக்கொண்டுள்ளார். 



இதற்கிடையில், பார்குருவில் 500 ஏக்கர் பரப்பளவில் வரும் 2,400 கோடி ரூபாய் மதிப்பிலான ஓலா எலக்ட்ரிக் ஃப்யூச்சர் ஃபாக்டரி குறித்த தகவல்களை தெரிவிக்க, அகர்வால் கடந்த வராம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் இணை நிறுவனருமான பவிஷ் அகர்வால் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை (MK Stalin) சந்தித்தார்.



அடுத்த ஆண்டு இந்த ஓலா எலக்ட்ரிக் (Ola Electric) தொழிற்சாலை முழுமையாக கட்டிமுடிக்கப்பட்ட பிறகு, இங்கு, ஒரு ஆண்டுக்கு 10 மில்லியன் இ-ஸ்கூட்டர்களை தயாரிப்பதற்கான வசதி ஏற்படுத்தப்படும். இந்த நிலையில், இது உலகின் மிகப்பெரிய இரு சக்கர வாகன தொழிற்சாலையாக இருக்கும். இத்திட்டத்தால் 10,000 பேருக்கு வேலைவாய்ப்புகளும் உருவாகும்.


ALSO READ: ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்ட வழக்கு: பப்ஜி மதனின் ஜாமீன் மனு தள்ளுபடி


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR