)
Old Pension Scheme: கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச்சங்கத்தினர், மத்திய அரசு கொண்டு வந்துள்ள நிதி திருத்த மசோதாவை கண்டித்து நாடாளுமன்றத்தினை முற்றுக்கையிடும் வகையில் ஓய்வூதியர்கள் பேரணி நடைபெற இருக்கிறது என அறிவித்தனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள காந்திமண்டபத்தில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச்சங்கத்தின் வட்ட கிளை மாநாடு நடைபெற்றது. இதில் மாநில பொதுச்செயலாளர் பர்வதராஜன் சிறப்புரையாற்றினார். பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமுல்படுத்த வேண்டும், புதிய மருத்துவக்காப்பீட்டு திட்டத்தில் அனைவருக்கும் கட்டணமில்ல சிகிச்சை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதனை தொடர்ந்து மாநில பொதுச்செயலாளர் பர்வதராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில், மத்தியரசு மார்ச் மாதம் நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த நிதி திருத்த மசோதாவை தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச்சங்கம் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம், இது ஓய்வூதியர்களின் உரிமையை பறிக்க கூடிய விதத்தில் இருக்கிறது. இதனை கண்டித்து நாடு முழுவதும் ஓய்வு பெற்ற ஓய்வூதியர்கள் சார்பில் மாபெரும் போராட்டங்களை நடத்தி உள்ளோம், அடுத்து டெல்லியை நோக்கி டெல்லி சாலோ என்று நாடாளுமன்றத்தினை முற்றுக்கையிடும் வகையில் ஓய்வூதியர்கள் பேரணி நடைபெற இருக்கிறது.திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிபடி 70வயது நிறைவடைந்த ஓய்வூதியர் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு 10சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தினை நிறைவேற்ற வேண்டும் என்றார்.
இதேபோல், புதுக்கோட்டையில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. இதில், பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. புதுக்கோட்டையில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் புதுக்கோட்டை தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தின் மாநில தலைவர் திருமலைவாசன் மற்றும் மாநிலச் செயலாளர் ஜெயச்சந்திரன் ஆகியோர் தலைமை வகித்தனர். இந்த மாநில செயற்குழு கூட்டத்தில் தமிழக முழுவதும் இருந்து தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக, வாழ்வாதார கோரிக்கைகள் என வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் அல்லது அரசு ஊழியர் D பிரிவு பட்டியலில் நம்மை இணைக்க வேண்டும் என்கின்ற கோரிக்கை வைக்கப்பட்டது. தாங்கள் அனுபவித்து வந்த நம்மிடம் இருந்து பறிக்கப்பட்ட சலுகைகளை திரும்ப வழங்க வேண்டும், கருணை அடிப்படையில் பணி நியமனம் வேண்டும்உள்ளிட்ட பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ