)
Omni Bus Fare Hike Scam: அதிகப்படியான கட்டணம் வசூல் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதாவது பண்டிகை கால விடுமுறைக் காரணமாக சொந்த ஊருக்கும் பொதுமக்கள் பயணம் செய்யும் போது ஆம்னி பேருந்துகள் அதிகப்படியான கட்டணம் வசூல் செய்தால், அவர்களுக்கு அபராதம் மற்றும் வாகனங்கள் சிறைபிடிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஆம்னி பேருந்துகள் அதிக கட்டண வசூல் குறித்து, "ஆயுதபூஜை, விஜயதசமி மற்றும் தொடர் வார விடுமுறையை முன்னிட்டு (01.10.2025 முதல் 05.10.2025 வரை) பொதுமக்கள் வெளியூர் பயணம் மேற்கொள்வதைப் பயன்படுத்தி தனியார் ஆம்னி பேருந்துகள் அதிகப்படியான கட்டணம் வசூல் செய்தால், அதனைத் தடுக்க தமிழ்நாடு முழுவதும் வட்டாரப்போக்குவரத்து அலுவலர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மற்றும் போக்குவரத்து சோதனைச்சாவடி ஆய்வாளர்கள் ஆகியோரைக் கொண்டு சிறப்புக்குழு அமைக்கப்பட்டு அதிகப்படியான கட்டணம் வசூல் செய்யும் மற்றும் அனுமதிக்குப்புறம்பாக இயங்கும் ஆம்னி பேருந்துகளை தீவிரமாக சோதனை செய்து அபராதம் விதித்தும், வாகனங்களை சிறைபிடித்தும் வரி வசூல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் தெரிவித்துள்ளார்.
விடுமுறை நாட்களையொட்டி சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு 2,430 பேருந்துகளும், கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய மாவட்டங்களுக்கு 400 பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து 250 பேருந்துகளும் இயக்கப்படும்.மேலும் பல்வேறு இடங்களுக்கு 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. எனவே தமிழகம் முழுவதும் மொத்தம் 3,380 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
அதுமட்டுமில்லாமல் சொந்த ஊருக்கு சென்றவர்கள் திரும்பி சென்னை மற்றும் பெங்களூரு திரும்பி வர அக்டோபர் 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில், ஆயுதபூஜை, விஜயதசமி மற்றும் தொடர் வார விடுமுறையை முன்னிட்டு, தனியார் ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூல் செய்தால், அபராதம் விதித்தும், அந்த வாகனங்களை சிறைபிடித்தும் வரி வசூல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் கூடுதல் கட்டண வசூலை தடுக்க தமிழகம் முழுவதும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மற்றும் போக்குவரத்து சோதனைச்சாவடி ஆய்வாளர்கள் ஆகியோரைக் கொண்டு சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

- அதிக கட்டண வசூல் செய்தால் கடும் நடவடிக்கை: அபராதம் விதித்தல் மற்றும் வாகன சிறைபிடிப்பு.
- சிறப்புக்குழு அமைப்பு: முழு தமிழகத்திலும் விரிந்து செயல்படும்.
- பேருந்து இயக்கம்: விடுமுறை காலத்தில் பெரும் பயணத்தை சமாளிக்க 3,380 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
- பெரும்பாலான நகரங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகள்: சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, திருநெல்வேலி, நாகை, பெங்களூரு, கன்னியாகுமரி மற்றும் பல இடங்களுக்கு.
- திரும்பிச் செல்லும் பயணிகளுக்கான சிறப்பு பேருந்து சேவை: அக்டோபர் 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் அனைத்து இடங்களிலிருந்தும் சென்னை மற்றும் பெங்களூருக்கு.
- தமிழக அரசு பொதுமக்கள் பயணச் சிக்கல்களை குறைக்கும் முயற்சி.
- பொதுமக்கள் நலனுக்காக அதிக கட்டண வசூலை தடுக்கும் கடுமையான நடவடிக்கைகள்.
- பெரும் அளவில் சிறப்பு பேருந்து சேவை மூலம் பயணிகளுக்கு விரைவான மற்றும் சௌகரியமான போக்குவரத்து ஏற்பாடு.
- அரசின் கட்டுப்பாட்டை வலுப்படுத்தும் சிறப்புக்குழு மூலம் சேவை தரம் மேம்படுத்தல்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ