பள்ளி பேருந்து சக்கரத்தில் சிக்கி ஒன்றரை வயது குழந்தை பலி.. வேலூரில் சோகம்!

Child dies after being trapped in school bus: வேலூர் குடியாத்தம் அருகே விளையாடிக் கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தை பள்ளி வாகனத்தின் முன் சக்கர டயரில் சிக்கி நசுங்கி உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.  

Written by - R Balaji | Last Updated : Nov 11, 2025, 01:26 PM IST
பள்ளி பேருந்து சக்கரத்தில் சிக்கி ஒன்றரை வயது குழந்தை பலி.. வேலூரில் சோகம்!

Child dies after being trapped in school bus: வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மேல் பட்டி பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஸ்ரீ விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது இந்தப் பள்ளியில் 1000 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் இருந்து நாள்தோறும் ஏராளமான மாணவர்களை அந்த பள்ளி பேருந்து மூலம் காலை பள்ளிக்கு அழைத்து சென்றும் மாலை பள்ளி முடிந்து மீண்டும் வீட்டுக்கு அழைத்துச் சென்று விட்டு வருவது வழக்கம். 

Add Zee News as a Preferred Source

இந்த நிலையில், நேற்று மாலை (நவம்பர் 10) செட்டிகுப்பம் வன்னியர் வீதி  பகுதியில் தனியார் பள்ளி பேருந்து செல்லும்போது எதிர்பாராத விதமாக வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த  கட்டிட மேஸ்திரி மோகன் என்பவருடைய ஒரு வயது பெண் குழந்தை துர்கா ஸ்ரீ தனியார் பள்ளி பேருந்து முன் சக்கர டயரில் சிக்கி உடல் நசுங்கி  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  

இது குறித்த தகவல் அறிந்து வந்த குடியாத்தம் காவல் துறையினர் குழந்தையின் உடலை மீட்டு உடல் கூர் ஆய்வுக்கு எடுத்துச் சென்றனர். அப்போது உறவினர்களும் பொதுமக்களும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தப்பி ஓடிய  ஓட்டுனரை கைது செய்ய வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வைத்து காவல்துறையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சில நிமிடங்கள் பரபரப்பாக காணப்பட்டது. 

பின்னர் காவல் துறையினர் உறவினர்களிடமும் பொதுமக்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த பின் உடல் கூறு ஆய்வுக்காக குழந்தையின் உடலை அனுப்பி வைத்தனர். வேலூரில் ஒன்றரை வயது பெண் குழந்தை தனியார் பள்ளி வாகன சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 

மேலும் படிக்க: அடிச்சு பெய்யும் கனமழை.. வெதர்மேன் கொடுத்த முக்கிய வார்னிங் - சென்னையிலும் மழைக்கு சான்ஸ்!

மேலும் படிக்க: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ; தகுதியான பெண்கள் யார்? முதலமைச்சர் சொன்ன முக்கிய தகவல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

About the Author

Trending News