)
Palani Temple Rope Car Services Stalled : பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் ரோப் கார் சேவை மாதாந்திர பராமரிப்பு பணிக்காக 31.10.25நாளை ஒரு நாள் மட்டும் நிறுத்தப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவிப்பு.
பழனி கோவில்:
திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் திருவிழா மட்டும் விசேஷ காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். பக்தர்கள் படிப்பாதை யானை பாதை மின் இழுவை ரயில், ரோப் கார் சேவை மூலமாக மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
ரோப் கார் சேவை மாதத்திற்கு ஒரு நாளும், வருடத்திற்கு 45 நாட்களும் பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்படுவது வழக்கம், அதேபோல 31.10.25நாளை ஒரு நாள் ரோப் கார் சேவை மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது, மேலும் ரோப்காரில் உள்ள சாப்ட்டுகள், பெட்டிகள்,கம்பி வடம் , உருளைகள் உள்ளிட்ட பணிகள் பராமரிப்பு மேற்கொள்ளப்படுகிறது. மீண்டும் நாளை மறுநாள்வழக்கம்போல் ரோப் கார் சேவை இயங்கப்படும் எனவும் பக்தர்கள் படிப்பாதை, யானை பாதை, மின் இழுவை ரயில் மூலமாக மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து கொள்ளுமாறு கோவில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
திருக்கல்யாணம்:
முன்னதாக, கடந்த செவ்வாய்க்கிழமையன்று பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கந்தர சஷ்டி நிறைவுநாள் நிகழ்ச்சியாக சண்முகர் திருக்கல்யாணம் விமரிசையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி கோயிலில் கந்த சஷ்டி விழா கடந்த 22தேதி காப்புக்கட்டுடன் துவங்கியது.
ஒருவார காலம் நடைபெற்ற விழாவின் போது நாள்தோறும் அருள்மிகு சின்னக்குமாரருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது. ஆறாம் நாள் நிகழ்ச்சியாக அடிவாரம் கிரிவீதியில் சூரசம்ஹாரம் நடைபெற்றது. நிறைவுநாள் நிகழ்ச்சியாக திருக்கல்யாணம் நடைபெற்றது.
மலைக்கோயில் தெற்கு வெளிப்பிரகாரத்தில் சிறப்பாக அமைக்கப்பட்ட மணமேடைக்கு எழுந்தருளிய அருள்மிகு வள்ளி, தெய்வானை சமேதர் சண்முகருக்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம், விபூதி உள்ளிட்ட 16 வகை பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. அபிஷேகத்தைத் தொடர்ந்து தம்பதி சமேதர் சண்முகருக்கு பட்டாடை, நறுமணமிக்க வண்ணமலர்கள், ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரமும், அதைத் தொடர்ந்து சோடஷ உபச்சாரமும் நடைபெற்றது. மேளதாளம் முழங்க சிவாச்சார்யார்கள் மந்திரம் ஓத மங்கலநாண் அணிவிக்கப்பட்டது.
பின்னர் மஹா தீபாராதனை நடத்தப்பட்டது. திருக்கல்யாண நிகழ்ச்சியில் கோவில் இணையானையர் மாரிமுத்து கோவில் அதிகாரிகள் ,உள்ளூர் பிரமுகர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு மங்கல பிரசாதங்களும், திருமண விருந்தும் வழங்கப்பட்டது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ