மதுரை - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை திட்டத்தில் பரமக்குடி - ராமநாதபுரம் இடையே ரூ. 1853 கோடியில் சுமார் 46.7 கி.மீ தூரம் நான்கு வழிச்சாலை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லியில் நேற்று முன்தினம் (ஜூலை 01) மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அந்த வகையில் தமிழ்நாட்டில் பரமக்குடி - ராமநாதபுரம் இடையே நான்கு வழிச்சாலை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
தற்போது இரு வழி தேசிய நெடுஞ்சாலை 87 மற்றும் அதனுடன் தொடர்புடைய மாநில நெடுஞ்சாலைகளை சார்ந்துள்ளது. பரமக்குடி - ராமநாதபுரம் இடையே முக்கிய நகரங்கள் உள்ளதால் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. இந்த நிலையில், இந்த 4 வழிச்சாலை திட்டம் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் மற்றும் பாதுக்கப்பை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக பரமக்குடி, சத்திரக்குடி, அச்சுந்தன்வயல் மற்றும் ராமநாதபுரம் போன்ற நகரங்களின் போக்குவ்ரத்து தேவைகளை பூர்த்தி செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தேசிய நெடுஞ்சாலை திட்டம் NH-38, NH-85, NH-36, NH-536, மற்றும் NH-32 போன்ற ஐந்து முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளுடனும், SH-47, SH-29, மற்றும் SH-34 ஆகிய மூன்று மாநில நெடுஞ்சாலைகளுடனும் ஒருங்கிணைப்பை மேம்படுத்தும். இந்த வழித்தடம், இரண்டு முக்கிய ரயில் நிலையங்கள் (மதுரை மற்றும் ராமேஸ்வரம்), மதுரை விமான நிலையம் மற்றும் இரண்டு சிறிய துறைமுகங்கள் (பாம்பன் மற்றும் ராமேஸ்வரம்) ஆகியவற்றுடன் இணைக்கும் வகையில், பல்வகை போக்குவரத்து இணைப்பை மேம்படுத்தும். பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்தை மேம்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்தத் திட்டம் சுமார் 8.4 லட்சம் நேரடி வேலைவாய்ப்பையும், 10.45 லட்சம் மறைமுக வேலைவாய்ப்பையும் உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திட்டத்தின் முக்கிய விவரங்கள்:
- திட்டத்தின் பெயர்: 4-லேன் பரமக்குடி - ராமநாதபுரம் பிரிவு
- வழித்தடம்: மதுரை - தனுஷ்கோடி வழித்தடம் (NH-87)
- மொத்த கட்டுமான செலவு: ரூ.997.63 கோடி
- நிலம் கையகப்படுத்துதல் செலவு: ரூ.340.94 கோடி
- மொத்த மூலதனச் செலவு: ரூ.1,853.16 கோடி
- கட்டுமான முறை: கலப்பின ஆண்டுத்தொகை முறை (HAM)
- இணைக்கப்பட்ட முக்கிய நகரங்கள்: மதுரை, பரமக்குடி, ராமநாதபுரம் மற்றும் ராமேஸ்வரம்
- நிதியாண்டு-25 இல் ஆண்டு சராசரி தினசரி போக்குவரத்து (AADT): 12,700 பயணிகள் கார் அலகுகள் (PCU) என மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிங்க: சென்னையில் அரசு அலுவலகத்தில் வேலை! உடனே விண்ணப்பிக்கவும்..!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









