)
Tamil Nadu Latest News: தமிழ்நாடு முழுவதும் 12,000 பகுதிநேர ஆசிரியர்கள் பணிபுரிந்து வரக்கூடிய நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக தேர்தல் அறிக்கையில் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்வோம் என வாக்குறுதி அளித்திருந்தது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி கடந்த நான்கு ஆண்டுகளாகவே பல்வேறு போராட்டங்களை பகுதிநேர ஆசிரியர்கள் நடத்தி வருகின்றனர். இதன் அடுத்த கட்டமாக வந்து தற்பொழுது மிகவும் ஒரு வலிமையான போராட்டத்தை நடத்த திட்டமிட்டு உள்ளனர்.
சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், இதுவரை எந்தவித நடவடிக்கையும் தங்களுடைய பணி நிரந்தரம் குறித்து திமுக அரசு எடுக்கவில்லை என வலியுறுத்தி பகுதி ஆசிரியர்கள் கடந்த ஜூலை எட்டாம் தேதி முதல் சென்னையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகம் முன்பாக இந்த போராட்டமானது தினம்தோறும் நடைபெற்று வருகிறது.
கடந்த ஜூலை எட்டாம் தேதி தொடங்கி 11 வது நாளாக இன்றுவரை தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி பகுதிநேர ஆசிரியர்கள் 300க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். போலீசார் கடந்த நாட்களில் போராட்டத்தில் பங்கேற்க வந்த ஆசிரியர்களை கைது செய்து அருகிலுள்ள மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர். ஆனாலும், ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகள் நிறைவேற முடியாதவரை போராட்டத்தை தொடரும் உறுதியளித்துள்ளனர்.
அரசியல் மற்றும் துறை சார்ந்த அமைச்சர்களுடன் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டபோதும், எந்தவித தீர்வும் இன்னும் எட்டப்படவில்லை. தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால், வாக்குறுதி நிறைவேற்றப்பட வேண்டுமெனவும், இல்லையெனில் போராட்டம் அதிகரிக்கும் என்றும் பகுதிநேர ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
- 12,000 பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரத்தை கோரி தொடர்ந்து 11 நாட்களாக போராட்டம்.
- 2021 தேர்தல் அறிக்கையில் பணிநிரந்தரம் செய்வது தொடர்பான திமுக வாக்குறுதி
- கடந்த 4 ஆண்டுகளாக கோரிக்கைக்காக பல்வேறு போராட்டங்கள் நடந்தன
- ஜூலை 8 முதல் சென்னை நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகம் முன்பு தொடர்ச்சியான போராட்டம்
- போலீசார் போராட்டத்தில் பங்கேற்கும் ஆசிரியர்களை கைது செய்து மண்டபத்தில் அடைப்பு
- அமைச்சருடன் பேச்சுவார்த்தைகள் நடந்தும் தீர்வு கிடைக்காமல் தொடரும் போராட்டம்
- தேர்தல் முன்னதாக கோரிக்கைகள் நிறைவேற வேண்டும்; இல்லையெனில் போராட்டம் அதிகரிக்கும்
2021 சட்டமன்றத் தேர்தல்களில் திமுக தனது தேர்தல் அறிக்கையில் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று வாக்குறுதி அளித்திருந்தது. அந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியதும், பகுதிநேர ஆசிரியர்களுக்கான மாதம் தொகுப்பூதியமாக ரூ.10,000-ல் இருந்து ரூ.12,500 ஆக உயர்த்தப்பட்டது. அதாவது மாத ஊதியம் ரூ.2500 கூடுதலாக வழங்கப்பட்டது. மேலும், பகுதிநேர ஆசிரியர்களுக்கான வயது வரம்பும் உயர்த்தப்பட்டது.
இந்த போராட்டம் தமிழக அரசியல் சூழலில் ஒரு முக்கியமான சமூக மற்றும் வேலை வாய்ப்பு உரிமை பிரச்சினையாக மாறியுள்ளது. அதனை அரசாங்கம் விரைவில் கவனித்து, பகுதி ஆசிரியர்களின் பணிநிரந்தர கோரிக்கையை நிறைவேற்ற வேண்டிய அவசியம் உள்ளது. இல்லாவிட்டால், இந்த போராட்டம் மேலும் தீவிரமாகி, அரசியல் சூழலை பாதிக்கும் என்று தெரிகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ