பட்டாவில் உடனே பெயர் மாற்ற வேண்டுமா? தமிழ்நாடு அரசு பிறப்பித்த முக்கிய உத்தரவு

Tamil Nadu Government : பட்டாவில் பெயர் மாற்றுவது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கும் முக்கிய உத்தரவு குறித்து கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்.  

Written by - Karthikeyan Sekar | Last Updated : Aug 3, 2025, 12:05 PM IST
  • பட்டா பெயர் மாற்றம் குறித்த அப்டேட்
  • தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிவிப்பு
  • பட்டாவில் பெயர் மாற்ற நடக்கும் சிறப்பு முகாம்
பட்டாவில் உடனே பெயர்  மாற்ற வேண்டுமா? தமிழ்நாடு அரசு பிறப்பித்த முக்கிய உத்தரவு

Tamil Nadu Government, Patta Name Change : தமிழ்நாடு அரசு சொத்துக்களுக்கான பட்டாவில் பெயர் மாற்றம் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், தமிழ்நாடு முழுவதுமுள்ள கிராமப்புறம் மற்றும் நகர்ப் புறங்களில் உள்ள நிலங்களின் நில ஆவணங்கள் கணினிமயமாக்கப்பட்டு, இணைய வழியில் பொது மக்கள் அனைவரும் எளிதில் பார்வையிடும் வகையிலும், அச்சிட்டு பயன்படுத்தும் வகையிலும். https://eservices.tn.gov.in/ என்ற இணையதளத்தின் வாயிலாக பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டன. இருப்பினும், பல சிட்டாவிலுள்ள பட்டாதாரர்களுள் இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்படாமலும் அவர்களின் பெயர்களுக்கு பதிலாக வாரிசுதாரர்களின் தற்போதைய பெயர்கள் அல்லது உரிமையாளர்களின் பெயர்கள் சேர்க்கப்படாமலும் உள்ளன.

Add Zee News as a Preferred Source

திருவள்ளூர் மாவட்டம், அனைத்து வட்டங்களிலும் பட்டாவிலுள்ள இறந்த நில உடமைதாரர்களின் பெயர்களை நீக்கி, அவர்களது வாரிசுதாரர்கள் அல்லது பதிவு செய்யப்பட்ட ஆவணம் வாயிலாக உரிமை பெற்றவர்களின் பெயர்களை சேர்க்க பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் இ-சேவை மையங்களின் வாயிலாகவோ அல்லது Citizen Portal வாயிலாகவோ விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. மேற்படி விண்ணப்பங்கள், ஆவணங்களின் அடிப்படையில் எதிர்வரும் ஜமாபந்தியில் பரிசீலனை செய்யப்பட்டு. பட்டாதாரர்கள் பெயர் மாற்றம் தொடர்பாக உரிய ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு. நில ஆவணங்களில் உரிய மாற்றங்கள் செய்யப்படும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்அவர்கள் தெரிவித்துள்ளார்.

இதேபோல் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் விடுத்திருக்கும் அறிவிப்பில், திருப்பத்தூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கான நில உடைமை சரிபார்த்தல் முகாம்கள் வேளாண்மைத்துறை மற்றும் வருவாய்த்துறையின் மூலம் நடைபெற்று வருகின்றது. இம்முகாம்களில் விவசாயிகள் தங்களது நில உடைமை குறித்த விவரங்களை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் இறந்துபோன பட்டாதாரர்கள் விவரங்களை பதிவு செய்ய இயலாத நிலை உள்ளதால் இறந்துபோன பட்டாதாரர்களின் வாரிசு சான்றுகள் சமர்ப்பித்து பௌத்திமாற்றம் மூலம் பட்டாமாற்றம் செய்துகொள்ள வருகின்ற 14.05.2025 முதல் 22.05.2025 வரை நடைபெறும் 1434 ஆம் பசலி ஆண்டிற்கான வருவாய்த் தீர்வாயத்தில் (ஜமாபந்தி) சம்மந்தப்பட்ட வட்ட அலுவலகத்தில் நேரடியாக மனு அளித்து தங்களின் நில உடைமை விவரங்களை வாரிசு அடிப்படையில் பௌத்தி
மாற்றம் செய்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதேபோல் கரூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், கரூர் மாவட்டத்தில் 2205.2025 முதல் 30.05.2025 வரை வருவாய்த் தீர்வாயம் நடைபெறவுள்ளது. கரூர் மாவட்டத்தில் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் 1434 – ஆம் பசலி ஆண்டிற்கான வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) கீழ்க்காணும் நாட்களில் காலை 10.00 மணி முதல் நடைபெறவுள்ளது. மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் 22.05.2025, 23.05.2025, மற்றும் 27.06.2025 ஆகிய நாட்களில் மண்மங்கலம் வட்டத்திலும். மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் தலைமையில் 22.05.2025, 23.05.2025, 27.05.2025 மற்றும் 29.05.2025 ஆகிய நாட்களில் கிருஷ்ணராயபுரம் வட்டத்திலும் நடைபெறும்.

குளித்தலை சார்ஆட்சியர் அவர்கள் தலைமையில் 2205.2025, 23.05.2025, 27.06.2025, 29.06.2025 மற்றும் 30.06.2025 ஆகிய நாட்களில் குளித்தலை வட்டத்திலும், கரூர் வருவாய்க் கோட்டாட்சியர் அவர்கள் தலைமையில் 22.05.2025,23.05.2025, 27.05.2025. 29.05.2025 மற்றும் 30.05.2025 ஆகிய நாட்களில் அரவக்குறிச்சி வட்டத்திலும், உதவி ஆணையர் (கலால்) அவர்கள் தலைமையில் 22.05.2025, 23.05.2025, 27.05.2025 மற்றும் 29.05.2025 ஆகிய நாட்களில் கரூர் வட்டத்திலும், கரூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அவர்கள் தலைமையில் 22.05.2025. 23.05.2025, மற்றும் 27.05.2025 ஆகிய நாட்களில் புகளூர் வட்டத்திலும் நடைபெறும்.

கரூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரி அவர்கள் தலைமையில் 22.05.2025. 23.05.2025 மற்றும் 27.05.2025 ஆகிய நாட்களில் கடவூர் வட்டத்திலும் அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் வருவாய்த் தீர்வாயம் நடைபெறுகிறது. பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்களது கோரிக்கை தொடர்பான மனுக்களை சம்மந்தப்பட்ட வருவாய்த் தீர்வாய் அலுவலர்களிடம் விண்ணப்பித்து தீர்வு கண்டுகொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதேபோல், தூத்துக்குடி உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் ஜம்பந்தி நடக்கிறது.

மேலும் படிக்க | ஏழை குடும்பங்களுக்கு இலவச ஏசி வழங்கும் மத்திய அரசு? வெளியான தகவல்!

மேலும் படிக்க | 10 ஆம் வகுப்பு SSLC ரிசல்டை முன்கூட்டியே தெரிந்து கொள்வது எப்படி?

மேலும் படிக்க | கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : ரேஷன் கார்டு இல்லாதவர்கள் விண்ணப்பிக்க முடியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

...Read More

Trending News