Patta Appliction, Tamil Nadu government : தமிழ்நாடு அரசு பட்டா குறித்த சேவைகளுக்கு விண்ணிப்பிப்பதை டிஜிட்டல் மயமாக்கியுள்ளது. இதுதவிர பெயர் மாற்றம் மற்றும் நீக்கம் குறித்த சேவைகள், புதிய பட்டா விண்ணப்பம் உள்ளிட்ட சேவைகளையும் ஆன்லைன் படுத்தப்பட்டுள்ளது. மேலும் பட்டா கோரி விண்ணிப்பத்த நாளில் இருந்து 30 நாட்களுக்குள் பட்டா வழங்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம், பட்டா தொடர்பான விண்ணப்பங்களும், புகார்களும் மலைபோல் குவிந்து கிடப்பது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக பிரச்சனைகளை தீர்க்க அடுக்கடுக்காக அதிகாரிகள் இருக்கும்போது இப்பிரச்சனைகள் குவிந்து கிடப்பது அரசு துறையில் நிலவி வரும் அவலம் என காட்டமாக கூறியுள்ளார். காமிரா பொருத்தப்பட்ட அறைகளில் மக்கள் முன்னிலையில் இந்த பிரச்சனைகள் குறித்து அதிகாரிகள் முடிவெடுத்தால் மூன்று முதல் ஆறு மாதங்களில் பட்டா தொடர்பான அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கண்டுவிட முடியும் என்றும் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
பட்டா பிரச்சனைகள் குறித்து ப.சிதம்பரம் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் எழுதியிருக்கும் பதிவில், விண்ணப்பித்த நாளில் இருந்து 30 நாட்களுக்குள் பட்டா வழங்க வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் ஆணையை நான் வரவேற்கிறேன். பட்டா கோருவது மட்டுமல்ல, பட்டா மாறுதல், பட்டாவில் பெயரைச் சேர்ப்பது நீக்குவது போன்ற விண்ணப்பங்களும் இருக்கின்றன. மாவட்ட வருவாய் அதிகாரி (DRO), கோட்ட வருவாய் அதிகாரி (RDO), வட்டாட்சியர் (Tahsildar), வருவாய் ஆய்வாளர் (Revenue Inspector) என்று அடுக்கடுக்காக அதிகாரிகள் இருக்கும் போது பட்டா தொடர்பான விண்ணப்பங்களும் குறைகளும் ஏன் மலைபோல் தேங்கிக் குவிந்திருக்கின்றன என்பது புரியாத புதிர்.
இந்த நிலை பல ஆண்டுகளாகப் பல அரசுகளில் நிலவி வரும் அவலம். கண்காணிப்புக் காமிராக்கள் பொருத்தப்பட்ட பொது அறையில் மக்கள் முன்னிலையில் ஒவ்வொரு விண்ணப்பமாக எடுத்து அதிகாரிகள் முடிவெடுத்தால் இந்தப் பணியை 3-6 மாதங்களில் முடிக்க முடியும் என்று கருதுகிறேன். ஒரு விண்ணப்பதாரர் மீண்டும் மீண்டும் குறை தீர்க்கும் நாட்களில் படையெடுப்பதைப் பல அதிகாரிகளிடம் நான் சுட்டிக் காட்டியிருக்கிறேன். முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்களின் புதிய ஆணை இந்த அவலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று நம்புகிறேன்." என்று தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் - மின்சார வாரியம் அறிவிப்பு!
மேலும் படிக்க | சென்னையில் நாளை இந்த 7 பள்ளிகளுக்கு விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









