)
குமாரபாளையம்: குமாரபாளையத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் நடைபெற்ற பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்ட நிலையில், நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் பயன்படுத்திய பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்களை ஆங்காங்கே வீசிச் சென்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் மாசு கட்டுப்பாட்டு வாரிய சார்பில் நெகிழி இல்லா நாமக்கல் என்ற தலைப்பில் நெகிழி தவிர்ப்பு விழிர்ப்புணர்வு மற்றும் நெகிழி கழிவு சேகரிப்பு இயக்கம் எனும் நிகழ்ச்சி குமாரபாளையம் நகராட்சி வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி கலந்து கொண்டு நிகழ்ச்சிகளை துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி பொதுமக்களுக்கு மஞ்சள் பைகளையும் வழங்கினார். மேலும் நெகிழி ஒழிப்பு குறித்து தனியார் மற்றும் அரசு கல்லூரிகளில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். பின்னர் நெகிழி இல்லா நாமக்கல் தலைப்பில் கல்லூரி மாணவ மாணவிகள் மகளிர் குழுவினர் உள்ளிட்டோர் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார்.
மேலும் காவிரி ஆற்றில் உள்ள குப்பைகளை அகற்றும் பணிகளையும், குமாரபாளையம் நகராட்சி தூய்மை பணியாளர்களுடன் இணைந்து துவக்கி வைத்தார். காலை 10 மணியளவில் இந்த நிகழ்ச்சி தொடங்கும் என கூறப்பட்டிருந்த நிலையில் ஆட்சியர் துர்கா மூர்த்தி 11:30 மணிக்கு மேல் நிகழ்ச்சி நடைபெறும் குமாரபாளையம் நகராட்சி வளாகத்திற்கு வருகை தந்தார். இந்நிலையில் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை தந்திருந்த மாணவ மாணவிகள் மற்றும் மகளிர் குழுவினருக்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் சிற்றுண்டி மற்றும் குடிநீர் வழங்கப்பட்டது.
இந்த குடிநீரானது பிளாஸ்டிக் பாட்டிலில் வழங்கப்பட்டதால் அதனை பெற்றவர்கள் குடிநீர் குடித்துவிட்டு ஆங்காங்கே பிளாஸ்டிக் பாட்டிலை வீசிச் சென்றனர். இதனைக் கண்ட சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்தனர் மேலும் இதனால் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி குறித்த பயன் ஏதும் இல்லை என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இந்த வகையில், மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்கிய நெகிழி இல்லா நாமக்கல் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களே பிளாஸ்டிக் பாட்டில்கள் வீசி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ