புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி வடக்கு தெருவில் சுமார் 600கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பகுதியில் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் செயல்பட்டு வந்தது.
புதிய அங்கன்வாடி மையம் கட்ட கோரிக்கை
இந்த அங்கன்வாடி மையத்தில் 25கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வந்த நிலையில் சிதிலமடைந்து இடிந்து விழுந்து வந்த நிலையில் சிதிலமடைந்த அங்கன்வாடியை அகற்றி புதிய அங்கன்வாடி மையம் கட்டித்தர பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். அதன் அடிப்படையில் சிதிலமடைந்த அங்கன்வாடி மையம் அகற்றப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்
ஆனால் தற்பொழுது சிதிலமடைந்த அங்கன்வாடி மையம் அகற்றப்பட்ட இடத்தில் அங்கன்வாடி மையம் கட்டப்படாமல் சமுதாயக்கூடம் கட்டப்பட்டு வருவதால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் அங்கன்வாடி மையம் இல்லாமல் இரண்டாவது வார்டில் உள்ள தனியார் கட்டிடத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருவதாகவும் அந்த கட்டிடத்தில் குழந்தைகளுக்கு பாதுகாப்பு குறைபாடு உள்ளதாகவும் ஏற்கனவே இருந்த அங்கன்வாடி மையம் உள்ள இடத்தில் அங்கன்வாடி மையம் கட்டிடம் அமைக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் சமுதாய கூடம் அமைக்கும் அதே இடத்தில் தமிழக அரசின் நியாய விலை கட்டிடம் செயல்பட்டு வருகிறது. சமூதாய கூடம் கட்டுவதால் இந்த நியாய விலை கட்டிடத்திற்கு செல்வதற்கு வழி இல்லாமல் பொதுமக்கள் அவதியுற்று வருகிறனர்.
பேரூராட்சி தலைவரிடம் மனு
பொதுமக்கள் பொங்கல் விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகள் நடத்தி வரும் பொது இடத்தில் ஆக்கிரமிப்பு செய்து சமுதாயக்கூடம் கட்டப்பட்டு வருவதாகவும் உடனடியாக சமுதாயக்கூடத்தை வேறு இடத்திற்கு மாற்ற கோரியும் தற்பொழுது கட்டப்பட்டு வரும் சமுதாயக்கூடத்தை தடுத்து நிறுத்தி அங்கன்வாடி மையம் கட்டித் தர கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு பேரூராட்சி தலைவர் முருகேசனை சந்தித்து மனு அளித்தனர்.
மேலும் தங்களது கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் பொதுமக்கள் ஒன்று திரண்டு மாபெரும் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்தனர்.
மேலும் படிக்க | கரூர் சம்பவம்.. விஜய் ஒரு தலைவராக செய்ய வேண்டியதை செய்ய வேண்டும் - கமல்ஹாசன்!
மேலும் படிக்க | 60 படுக்கை வசதியுடன் திறக்கப்பட்ட புதிய அரசு மருத்துவமனை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









