பிஎம் கிசான் திட்டம் : விவசாயி இறந்துவிட்டால் அவரது வாரிசு கிசான் தொகையை பெறுவது எப்படி?

Tamilnadu Government : பிஎம் கிசான் தொகை திட்டத்தில் பயனாளியாக உள்ள விவசாயி இறந்துவிட்டால் அவரது வாரிசு அந்த திட்டத்தில் சேருவது எப்படி? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்

Written by - S.Karthikeyan | Last Updated : May 18, 2025, 09:49 AM IST
  • பிஎம் கிசான் திட்டம் முக்கிய அறிவிப்பு
  • விவசாயி இறந்துவிட்டால் வாரிசு சேருவது எப்படி?
  • கரூர் மாவட்ட ஆட்சியர் கொடுத்த முக்கிய அப்டேட்
பிஎம் கிசான் திட்டம் : விவசாயி இறந்துவிட்டால் அவரது வாரிசு கிசான் தொகையை பெறுவது எப்படி?

PM KISAN scheme 2025, Tamilnadu Government : பிஎம் கிசான் திட்டம் குறித்த முக்கிய அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. பிஎம் கிசான் தொகை திட்டத்தில் பயனாளியாக உள்ள விவசாயி இறந்துவிட்டால் அவரது வாரிசு அந்த திட்டத்தில் சேருவது எப்படி? என்பதை விவசாயிகள் தெரிந்து கொள்ளுங்கள். இதுதொடர்பாக கரூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டிருக்கும் அறவிப்பில், விவசாயிகளுக்கான கௌரவ நிதித்திட்டம் கூட்டம் நடைபெறவுள்ளது. பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கான கௌரவ நிதி திட்டத்தின் கீழ், கரூர் மாவட்டத்தில் உள்ள தகுதியுடைய அனைத்து விவசாயிகள் விடுபாடின்றி பயன்பெற சிறப்பு முகாம் கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்கள் அலுவலகம்.

இந்திய அஞ்சல் கட்டண வங்கி மற்றும் பொது சேவை மையங்களில் 02.05.2025 முதல் நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து, பி.எம். கிசான் 20வது தவணைத் தொகை எதிர்வரும் ஜுன் 2025 மாதத்தில் ஒன்றிய அரசினால் விடுவிக்க உள்ளதால், இந்த முகாமில் தகுதியுடைய விவசாயிகளின் நில தொடர்பான விபரங்கள். வங்கிக் கணக்குடன் ஆதார் இணைப்பது, e-kyc பதிவு போன்ற அனைத்து முழுமையற்ற விபரங்களை சரி செய்து விவசாயிகள் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இத்திட்டத்தில் சேர விடுபட்ட தகுதியான விவசாயிகள் ஏற்கனவே கிராம அளவில் நடைபெற்று வரும் சிறப்பு முகாமில் நில உடமைகளை பதிவேற்றம் செய்த அடையாள எண்ணுடன் பதிவு செய்து பயன்பெறலாம். மேலும், நமது மாவட்டத்தில் ஏற்கனவே பி.எம். கிசான் திட்டத்தில் 19-வது தவணைத்தொகை பெற்று வந்த விவசாயிகளில் 11,384 விவசாயிகள் நில உடைமை பதிவுகளை இதுவரை மேற்கொள்ளவில்லை. எனவே, எதிர்வரும் 20-வது தவணைத் தொகை தடையின்றி பெற நில உடைமை பதிவுகளை பதிவு செய்து பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், இறந்த பயனாளிகளின் இறப்பு சான்றினை சமர்ப்பித்து, அவர் பெற்று வரும் நிதியை நிறுத்தவும் மற்றும் வாரிசுதாரர்கள் இத்திட்டத்தில் பயன்பெற தேவையான நில ஆவணங்களை பி.எம். கிசான் திட்ட முகாமில் சமர்ப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதேபோல், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், வேளாண் அடுக்ககம் பெரும் பதிவேட்டில் தங்கள் நில ஆவணங்களை பதிவு செய்தால் மட்டுமே பிளம்கிசான் திட்டத்தின்கீழ் தொடர்ந்து தவணை தொகையினை பெற இயலும் என ஒன்றிய அரசு உறுதி செய்துள்ளது என்பதை தெரிவித்துள்ளார். எனவே, விவசாயிகள் பட்டா நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் ஆதாருடன் இணைக்கப்பட்ட கைபேசியுடன் அருகில் உள்ள பொதுசேவை மையம் அல்லது தங்கள் பகுதியில் நடைபெறும் முகாம்களில் கலந்து கொண்டு தங்கள் நில ஆவணங்களை வேளாண் அடுக்ககம் பெரும் பதிவேட்டில் பதிவு செய்து தொடர்ந்து பி.எம்கிசான் திட்டத்தில் பயன்பெறவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இது தொடர்பாக சந்தேகம் ஏதும் இருப்பின், தங்கள் பகுதியிலுள்ள வேளாண்மை உதவி இயக்குநரை அணுகிடுமாறும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் படிக்க | பிஎம் கிசான் தொகை வேண்டுமா? விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு போட்ட முக்கிய உத்தரவு

மேலும் படிக்க | நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை! நேற்று மத்திய பிரதேசம், இன்று தமிழ்நாடு - என்ன மேட்டர்?

மேலும் படிக்க | ஜீ தமிழ் நியூஸ் எதிரொலி: 'ரூ.150 கோடி நிலம்' போலி பத்திரப்பதிவு ரத்து; அரசு அதிகாரியும் சஸ்பெண்ட்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News