PM Modi Speech In Maduranthakam: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பரப்புரை பொதுக்கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், பாமக தலைவர் அன்புமணி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பலரும் இதில் கலந்துகொண்டனர்.
PM Modi Speech: தமிழில் பேச்சை தொடங்கிய பிரதமர் மோடி
மதுராந்தகம் பொதுக்கூட்டத்தில். சகோதர, சகோதிரிதகளுக்கு வணக்கம் என்ற கூறி பிரதமர் மோடி தனது பேச்சை தொடங்கினார். அந்த உரையில் அவர், "ஏரி காத்த ராமரை வணங்கி போற்றுகிறேன். 2026ஆண்டிலே தமிழ்நாட்டிற்கு முதல் பயணம் இது. இந்த வேளையிலே பொங்கல் பண்டிகைக்கு பிறகு சிறப்பான ஒரு ஆனந்தம் தமிழகம் முழுவதும் நிறைந்திருக்கிறது. சில நாட்கள் முன்பதாக தமிழ்நாட்டில் வளர்ச்சி மனிதன் பாரத் ரத்னா விருது பெற்ற எம்ஜிஆரின் பிறந்தநாளை நாம் கொண்டாடினோம். அனைவரின் நலன் மற்றும் தமிழ்நாட்டில் நலனுக்காக நான் வேண்டிக்கொள்கிறேன்.
இன்று நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்தநாளும் கூட... நாடு முழுவதும் இந்நாளை பராக்கிரம திருநாளாக என்று கொண்டாடி மகிழ்கிறார்கள். தமிழ்நாட்டில் பராக்கிரமம் நிறைந்த பல சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றார்கள். வீரம், நாட்டுப்பற்று, தமிழ்நாட்டு மக்களின் நாடி நரம்பில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த புனிதமான மண்ணில் இருந்து நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்-ககு நமது நினைவு அஞ்சலிகளை காணிக்கையாக்குகிறேன்" என்றார்.
PM Modi Speech: திமுக அரசின் முடிவுக்கு கவுன்டவுன் தொடங்கிவிட்டது...
இங்கு அலை கடல் என்று மக்கள் வெள்ளம் திரண்டு இருக்கிறது. இது மொத்த தமிழ்நாட்டிற்கும், தேசம் அனைத்திற்கும் கூட ஒரு செய்தியை அளிக்கிறது. அது என்ன தகவல் தெரியுமா...? தமிழ்நாடு இப்பொழுது மாற்றத்திற்கு தயாராக இருக்கிறது என்பதுதான்... தமிழ்நாடு இப்போது திமுகவின் மோசமான ஆட்சியில் இருந்து விடுபட துடிக்கிறது. தமிழ்நாடு இப்போது பாஜக என்டிஏ அரசினை விரும்புகிறது.
என்டிஏ கூட்டணியின் நமது மூத்த தலைவர்கள் தமிழ்நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்க இங்கு கூடியிருக்கிறார்கள். நாம் அனைவரும் ஒரே முடிவோடு ஒரே உறுதிப்பாட்டோடு இங்கே இருந்திருக்கிறோம. அது என்ன உறுதிப்பாடு தெரியுமா...? தமிழ்நாட்டு திமுக அரசு இடம் இருந்து விடுவிக்க வேண்டும் என்பதே அந்த உறுதிப்பாடு. நாம் தமிழ்நாட்டினை வளர்ச்சி அடைந்த பாதுகாப்பான ஊழலற்ற மாநிலமாக மாற்ற வேண்டும். இதை என்னால் தெளிவாக காண முடிகிறது. திமுக அரசாங்கத்தின் முடிவுரைக்கான கவுன்டவுன் தொடங்கி இருக்கிறது" என்றார்.
PM Modi: சிறுமிக்கு நன்றி சொன்ன பிரதமர்
உடனே கூட்டத்தில் இருந்த சிறுமியை உற்றுப்பார்த்த பிரதமர் மோடி, "நான் அடுத்து பேச்சை தொடர்வதற்கு முன், நெடு நேரமாக அங்கு ஒரு சிறுமி எனது அம்மாவுடன் நான் இருப்பது போன்ற படத்தை கையில் வைத்திருக்கிறார் என்று நினைக்கிறேன். என்னிடம் தர வேண்டும் என்ற துடித்துக் கொண்டிருக்கிறது, அந்த குழந்தை. உன்னுடைய பெயர் மட்டும் அதில் இருந்தால் போதும். அதனை பெற்றுக்கொண்டு என்னோடு நல்லாசி கடிதத்தை உனக்காக கண்டிப்பாக அனுப்புகிறேன். நன்றி பெண்ணே" என்றார். அந்த சிறுமியின் அருகில் இருந்த பெண் ஒருவர், அந்த படத்துடன் சிறுமியின் பெயரையும், புகைப்படத்தையும் எழுதி கொடுத்து அனுப்பினார். அதன்பின், அந்த சிறுமி தலைக்கு மேல் கைகளை கூப்பி பிரதமர் மோடியை நோக்கி வணங்கினார். பிரதமர் மோடியும் மேடையில் நன்றி தெரிவித்தார்.
PM Modi Speech: திமுக அரசு - ஊழல், மாஃபியா, குற்றம்
அடுத்து பேச்சை தொடர்ந்த பிரதமர் மோடி, "ஆட்சி செய்ய நீங்கள் திமுகவுக்கு இரண்டு முறை வாய்ப்பளித்தீர்கள். தெளிவாக அதிகாரம் அளித்தீர்கள். ஆனால் அவர்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்திருக்கிறார்கள். வாக்குறுதிகளை அள்ளித் தெளித்தது திமுக. ஆனால் ஆற்றிய பணிகள் என்னவோ பூஜ்ஜியம்தான். திமுக அரசை CMC அரசு என்று அழைக்கிறார்கள் தெரியுமா...? CMC என்றால் Corruption (ஊழல்), Mafia (மாஃபியா), Crime (குற்றம்) அதாவது ஊழல், குற்றவாளி குழுக்கள், குற்றங்கள் ஆகியவற்றை ஆதரிக்கும் அரசு. தமிழ்நாட்டு மக்கள் இப்போது திமுக மற்றும் CMC இரண்டையுமே மண்ணோடு மண்ணாக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டார்கள். திமுக அரசு ஒரே ஒரு குடும்பத்திற்காக மட்டுமே இயங்கி வருகிறது. தமிழ்நாட்டில் பாஜக, என்டிஏ அரசாங்கம் அமைவது உறுதியாகிவிட்டது. திமுக - காங்கிரஸ் ஆட்சியில் தமிழகத்திற்கு குறைவான நிதி, காங்கிரஸ் ஆட்சியை விட மும்மடங்கு அதிகமாக நிதியை கொடுத்துள்ளோம். தமிழ்நாட்டிற்கு ரூ.3 லட்சம் கோடியை அளித்துள்ளோம். காங்கிரஸ் ஆட்சியில் அளித்த பட்ஜெட்டை விட, தற்போதைய ரயில்வே பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு 7 மடங்கு அதிகம் நிதி ஒதுக்கி உள்ளோம்." என்றார்.
PM Modi Speech: தமிழ் கலாச்சாரத்திற்கு எதிரி திமுக
மேலும், தமிழ் மொழி, தமிழ் கலாசாரத்தை நேசிக்கிறேன் என்றும் தமிழர்கள், தமிழ் கலாசாரத்தின் எதிரி திமுக என்றும் பிரதமர் மோடி பேசியிருந்தார். மேலும், வணக்கம் சொல்லி தனது உரையை பிரதமர் மோடி நிறைவு செய்தார். முன்னதாக, மதுராந்தகம் பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடிக்கு திருப்பரங்குன்றம் முருகனின் வெள்ளியிலான உருவம் பதித்த நினைவுப் பரிசை கூட்டணிக் கட்சி தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து வழங்கினார்கள்.
மேலும் படிக்க | பிரதமர் vs முதல்வர் | NDA-வின் துரோகங்கள் - மோடிக்கு ஸ்டாலின் நறுக் கேள்விகள்!
மேலும் படிக்க | பாஜக அரசியல் நகர்வு! பிரதமர் மோடியின் முக்கியத்துவம் வாய்ந்த தமிழ்நாடு - கேரளா பயணம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









