தம்பியை தொடர்ந்து அண்ணனும்.. தேவர் குருபூஜையில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்?
Thevar Jayanthi 2022: வரும் 30 ஆம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடி தேவர் குருபூஜையில் பங்கேற்கிறார் எனத் தகவல்.
PM Modi Visit Tamil Nadu: தமிழகத்துக்கு வரும் 30 ஆம் தேதி வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடி, ராமநாதபுரத்தில் நடைபெறும் தேவர் குரு பூஜை நிகழ்ச்சியில் பங்கேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது. பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குரு பூஜை வரும் 30 ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் நடக்கிறது. இந்த நிலையில், தமிழ்நாடு வரும் பிரதமர் நரேந்திர மோடி சில நிகழ்ச்சிகளில் பங்கேற்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில் 30 ஆம் தேதி அன்று ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்துக்கு சென்று, தேவர் குரு பூஜை நிகழ்ச்சியில் பங்கேற்க அவர் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு தமிழக உயர் அதிகாரிகளுக்கு, புதுடில்லியில் இருந்து உத்தரவு வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் இதுக்குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
இதற்கிடையில், முன்னதாக ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்திற்கு சென்ற பிரதமர் மோடியின் சகோதரர் பங்கஜ் மோடி, தேவர் சிலைக்கு மாலை அணிவித்து வணங்கினார்.
மேலும் படிக்க: Mozhipor vs MK Stalin: இந்தியை திணிக்க வேண்டாம்! மற்றுமொரு மொழிப்போர் எதற்கு?
பிரதமர் மோடியின் இளைய சகோதரர் பங்கஜ் மோடி, கடந்த 5 ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில் கட்சி பிரமுகர்கள் உள்ளிட்டவர்களை சந்தித்தார். அதனைத்தொடர்ந்து அவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்திற்கு சென்றார். அங்கு தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியது குறிப்பிடத்தக்கது.
எனவே இந்து மதத்தில் மிக பற்று கொண்டுள்ள மோடி குடும்பத்தினர், இந்து மதத்தில் சிறந்த ஆன்மீகவாதியாக வாழ்ந்து மறைந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்திற்கு வருவதில் எந்த ஒரு ஆச்சரியமும் இருக்கப் போவதில்லை என சொல்லப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ