PM Modi Rameshwaram Visit: இலங்கையில் இருந்து பிரதமர் மோடி இன்று ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் வந்தடைந்தார். மண்டபம் கேம்ப் ஹெலிபேட் தளத்திற்கு வந்த பிரதமர் மோடியை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி சால்வை அணிவித்து மரியாதை செய்து வரவேற்றார்.
PM Modi Rameshwaram Visit: புதிய பாம்பன் பாலம் திறப்பு
ராமேஸ்வரம் பாம்பன் பகுதியில் 550 கோடி ரூபாயில் புதியதாக கட்டப்பட்டுள்ள தூக்குப் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி பாம்பன் சாலையில் இருந்து கொடியசைத்து திறந்துவைத்தார். ஒரு ரயிலையும், ஒரு கப்பலையும் கொடியசைத்து தொடங்கிவைத்த பிரதமர் மோடி, ராமேஸ்வரம் - தாம்பரம் வரை செல்லும் புதிய பாம்பன் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையையும் தொடங்கிவைத்தார்.
PM Modi Rameshwaram Visit: ராமநாதசுவாமி கோயிலில் பிரதமர் தரிசனம்
பாம்பன் பாலத்தை திறந்துவைத்த பின்னர், ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோயிலுக்குச் சென்று தரிசனம் மேற்கொண்டார். இன்று நாடு முழுவதும் ராம நவமி கொண்டாடப்படுகிறது. ராமநாதசுவாமி கோயிலில், பிரதமருக்கு கோயில் சார்பாக பூரண கும்பம் மரியாதை கொடுக்கப்பட்டது. ராமநாதசுவாமி கோயிலில் முக்கியமாக பார்க்கக்கூடிய 22 தீர்த்த நீர்களும் பிரதமருக்கு கொடுக்கப்பட்டது.
இந்தியாவில் உள்ள 12 ஜோதிர் லிங்கங்களில் முக்கியமானது இராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் ஆகும். அனைத்து பாவங்களையும் போக்கக்கூடிய அக்னி தீர்த்தம் உள்ள கோயிலாக பார்க்கப்படுகிறது. ராமநாதசுவாமி கோவிலில் அனுமன் வழிபட்ட லிங்கம், சீதை வழிபட்ட லிங்கம் ஆகியவற்றை பிரதமர் தரிசித்தார். ராமநாதசாமி கருவறை வாசலில் பிரதமர் அமர்ந்து பூஜை செய்யவும் சிறிய நேரம் தியானம் செய்தார்.
PM Modi Rameshwaram Visit: பிரதமர் மோடியின் தெய்வீக பதிவு
இந்நிலையில், பிரமதர் மோடி இன்று அவரது X தளத்தில் பதிவிட்டிருந்தபோது, "இன்று, ராம நவமியின் புனித நாளில், இலங்கையில் இருந்து திரும்பும் போது, வானத்தில் இருந்து ராமர் பாலத்தின் தெய்வீகக் காட்சி எனக்குக் கிடைத்தது.
On the way back from Sri Lanka a short while ago, was blessed to have a Darshan of the Ram Setu. And, as a divine coincidence, it happened at the same time as the Surya Tilak was taking place in Ayodhya. Blessed to have the Darshan of both. Prabhu Shri Ram is a uniting force for… pic.twitter.com/W9lK1UgpmA
— Narendra Modi (@narendramodi) April 6, 2025
தெய்வீக மனநிலையில் தற்செயலாக, நான் ராமர் பாலத்தை பார்த்துக் கொண்டிருந்தபோது, அயோத்தியில் ராம் லல்லாவின் சூரிய திலகத்தைக் காணும் பாக்கியமும் எனக்குக் கிடைத்தது. பகவான் ஸ்ரீ ராமரின் ஆசீர்வாதம் நம் அனைவருக்கும் கிடைக்கட்டும் என்று பிரார்த்திக்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.
PM Modi Rameshwaram Visit: அரசு விழாவில் பிரதமர் மோடி
தரிசனத்தை முடித்து கோயிலில் இருந்து நலத் திட்டங்கள் நிகழ்ச்சியில் பங்கேற்க புறப்பட்டார் பிரதமர் மோடி. பிரதமர் மோடி பங்கேற்கும் அரசு விழாவில் தமிழ்நாடு அமைச்சர் ராஜகண்ணபன், அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் தர்மர், பாஜக சட்டமன்ற குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்க உள்ளனர். ராமநாதபுரம் மக்களவை உறுப்பினர் நவாஸ் கனி, தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, மத்திய அமைச்சர்கள் எல்.முருகன், அஸ்வினி வைஷ்ணவ், ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் விழா மேடையில் அமர்ந்துள்ளனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









