திமுகவுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது - பிரதமர் மோடி!

PM Modi Tamil Nadu Visit: பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழகம் வருகை தரும் நிலையில், திமுகவுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது என எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.   

Written by - R Balaji | Last Updated : Jan 23, 2026, 11:11 AM IST
  • பிரதமர் நரேந்திர மோடி
  • இன்று தமிழகம் வருகிறார்
  • செங்கல்பட்டில் பொதுக்கூட்டம்
திமுகவுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது - பிரதமர் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜனவரி 23) தமிழகம் வருகை தர இருக்கிறார். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் இன்று மாலை நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். 

Add Zee News as a Preferred Source

4 திட்டங்களை தொடங்கி வைக்கும் பிரதமர் 

டெல்லியின் இருந்து விமானம் மூலம் புறப்படும் மோடி முதலில் திருவனந்தபுரம் செல்கிறார். அங்கு இன்று காலை 10.45 மணிக்கு தொடங்கும் ரயில்வே துறை சார்பில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கிறார். கிழக்கு கோட்டை மைதானத்தில் நடக்கும் இந்த விழாவில் நாகர்கோவில் - மங்களூரு அம்ருத் பாரத் ரயில் உள்ளிட்ட 4 திட்டங்களை தொடங்கி வைக்கிறார். 

தமிழக வரும் பிரதமர் மோடி 

இதையடுத்து பிற்பகல் 12.30 மணியளவில் விமானப் படை விமானம் மூலம் திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை வருகிறார். பின்னர் ஹெலிகாப்டர் மூலம் மதுராந்தகம் வருகை தந்து பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார். இந்த கூட்டத்தில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கட்சி தலைவர்களும் பங்கேற்க இருக்கின்றனர். 

கூட்டணி கட்சிகள் 

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக அதிமுகவும் பாஜகவும் கூட்டணியை உறுதி செய்தன. மேலும், கூட்டணியில் அன்புமணி பாமக, தமாகா, புதிய நீதி கட்சி, புதிய பாரதம், இந்திய ஜனநாயக கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றம் கழகம், அமமுக ஆகிய கட்சிகள் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

திமுகவுக்கு விடை கொடுப்போம்

இந்த நிலையில், பிரதமர் மோடி அவரது எக்ஸ் பக்கத்தில், மதுராந்தகத்தில் இன்று பிற்பகலில் நடைபெறும் பேரணியில் நான் தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்களுடன் கலந்துகொள்ளவிருக்கிறேன். ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது என்று தமிழ்நாடு  முடிவு செய்துவிட்டது. தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின்  சாதனையும்  பிராந்திய பெருவிருப்பங்கள் மீதான அதன் அர்ப்பணிப்பும் மாநில மக்கள் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க: திமுகவில் SVSP மாணிக்கராஜா... உடைந்து சிதறும் அமமுக - மோடி வரும் நாளில் ஸ்டாலின் வைத்த செக்!

மேலும் படிக்க: மாத ஓய்வூதியம் 1200 ரூபாய் தரும் தமிழ்நாடு அரசு! விண்ணப்பிப்பது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

 

About the Author

Trending News