)
Tamil Nadu Farmers Crop Insurance 2025: விவசாயிகளின் நலனுக்காக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, மழைக்காலங்கள், வறட்சி போன்ற காரணங்களால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்காக பிரதம மந்திரி ஃபசல் பீமா யோஜனா திட்டம். இந்த திட்டம் மூலம் விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு வழங்கப்படுகிறது.
இயற்கை சீற்றத்தில் பயிர்கள் பாதிக்கப்படும் போது, காப்பீடு மூலம் அவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வது அவசியம். விவசாயிகள் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.432 பிரிமீயம் செலுத்தினால், அவர்களுக்கு ரூ.32,160 வரை கிடைக்கும். பயிர் காப்பீடு செய்ய முதலில் நவம்பர் 15ஆம் தேதி கடைசி நாளாக இருந்த நிலையில், அதனை தமிழக அரசு நீடித்து நவம்பர் 30ஆம் தேதி கடைசி நாளாக அறிவித்தது.
ஆனால், இன்னும் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யாததால், அவர்களை நலனை கருத்தில் கொண்டு டிசம்பர் 1ஆம் தேதி வரை பயிர் காப்பீடு செய்ய அவகாசத்தை நீடித்து தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வெளியிட்ட அறிவிப்பில், தேசிய பயிர் காப்பீட்டு வலைதளத்தில், சம்பா நெற்பயிர் காப்பீடு செய்ய 2025, செப்டம்பர் மாதம் முதல் நவம்பர் 15 ஆம் தேதிவரை காலநிர்ணயம் செய்யப்பட்டு பதிவு நடைபெற்று வந்தது.
எனினும் தொடர் மழை, வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் போன்றவற்றால் சம்பா நெற்பயிர் காப்பீடு தாமதமான காரணத்தால், விவசாயிகளின் கோரிக்கைக்கிணங்க தமிழ்நாடு அரசு எடுத்த தொடர் முயற்சிகளால் 2025 நவம்பர் 30 ஆம் தேதி வரை மத்திய அரசால் கால நீட்டிப்பு செய்யப்பட்டது.
எனவே, 2025 நவம்பர் 30ஆம் தேதி வரை காப்பீடு செய்ய காலநிர்ணயம் செய்யப்பட்ட பயிர்களை இதுவரை காப்பீடு செய்யாத விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் 2025 டிசம்பர் 1 ஆம் தேதிக்குள் பதிவு செய்து பயனடைய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2025-26ஆம் ஆண்டில், பிரதமந்திரி பயிர்க்காப்பீட்டுத் திட்டம் தமிழ்நாட்டில் குறுவை, சம்பா, நவரை பருவத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு கேட்டுக்கொண்டதற்கிணங்க, நடப்பாண்டு குறுவைப்பருவத்தில் இத்திட்டத்தில் காப்பீடு செய்ய விவசாயி பதிவு (Farmer Registry) மூலம் வழங்கப்படும் விவசாயிகள் அடையாள அட்டை (Farmer ID) கட்டாயம் என்பதிலிருந்து ஒன்றிய அரசால் விலக்களிக்கப்பட்டது என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேலும், நில உரிமையுள்ள அனைத்து விவசாயிகளும் உடனடியாக இ-சேவை மையத்தில் விவசாயி பதிவு (Farmer Registry) மூலம் வழங்கப்படும் விவசாயிகள் அடையாள எண் (Farmer ID) பெற்றுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுவரை பயிர் காப்பீடு செய்யாத விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் பொது சேவை மையம் அல்லது வேளாண் கடன் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசியமயமாக்கல் வங்கிகள் முலம் டிசம்பர் 1ஆம் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்ய வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ