சம்பா சிறப்பு தொகுப்பு நிதி: பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல் - விவசாயிகள் எதிர்பார்ப்பு

சம்பா சிறப்பு தொகுப்பு நிதி திட்டத்தை உடனடியாக அறிவித்து தொகையை உயர்த்தி விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மற்றும் தலைவர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Nov 16, 2025, 06:33 PM IST
  • 2025 ஆம் ஆண்டு குறுவை பருவத்திற்கும் சிறப்பு தொகுப்பு.
  • நிதி வழங்கப்படவில்லை என விவசாயிகள் கூறுகின்றனர்.
சம்பா சிறப்பு தொகுப்பு நிதி: பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல் - விவசாயிகள் எதிர்பார்ப்பு

சம்பா சிறப்பு தொகுப்பு நிதி திட்டத்தை உடனடியாக அறிவித்து தொகையை உயர்த்தி விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மற்றும் தலைவர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பான முழு விவரத்தை இங்கே காணலாம்.

Add Zee News as a Preferred Source

நெல் உற்பத்தியை பெருக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களில் தமிழக அரசு 2023 வரை குறுவை, சம்பா என சாகுபடி பருவத்தின் அடிப்படையில் சிறப்பு தொகுப்பு நிதி திட்டத்தை செயல்படுத்தி வந்தது. இதன் மூலம் ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு சுமார் 1,000 ஹெக்டேர் அளவிலான சாகுபடிக்காக, இடுபொருட்கள் மற்றும் நடவு செலவு போன்றவற்றுக்கு உதவும் வகையில் ஒரு விவசாயிக்கு 4,000 ரூபாய் என ஒன்றியத்துக்கு சுமார் 5,000 விவசாயிகள் பயனடைந்து வந்தனர். 2024 ஆம் ஆண்டு குறுவை பருவத்தில் இந்த திட்டம் தமிழ்நாடு முழுமைக்கும் விரிவு படுத்தப்பட்டது.

ஆனால் தமிழ்நாடு முழுமைக்கும் விரிவு படுத்தப்பட்டதால் நிதி நெருக்கடியை காரணம் காட்டியும், அதிகப்படியான நெல் உற்பத்தியானதாக காரணம் காட்டியும் அதே ஆண்டில் சம்பா பருவத்திற்கும், இந்த 2025 ஆம் ஆண்டு குறுவை பருவத்திற்கும் சிறப்பு தொகுப்பு நிதி வழங்கப்படவில்லை என விவசாயிகள் கூறுகின்றனர்.

நடப்பு பருவ ஆண்டில் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவை எட்டி 7 முறை நிரம்பியுள்ளது. தொடர்ந்து ஓராண்டு காலமாக முழு கொள்ளளவான 100 அடி நீர் நிரம்பியுள்ளது. இதனால் தேவையான தண்ணீர் இருப்பு உள்ளதாலும், வடகிழக்கு பருவமழையும் அவ்வப்போது பொழிந்து வருவதாலும் விவசாயிகள் முழு நம்பிக்கையுடன் சம்பா சாகுபடி செய்து வருகின்றனர். இந்த நிலையில் உரம் உள்ளிட்ட இடுபொருட்கள் விலை உயர்வு, ஆட்கள் கூலி உயர்வு, உழவு இயந்திர செலவு உயர்வு போன்றவற்றால் நெல் நடவு செய்வதில் சுணக்கம் காட்டும் விவசாயிகளுக்கு சம்பா சிறப்பு தொகுப்பு நிதி வழங்கினால் பேருதவியாகவும், ஊக்கமளிப்பதாகவும் இருக்கும்.

எனவே, விவசாயப் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக தமிழக அரசு சம்பா சிறப்பு தொகுப்பு நிதியை உடனடியாக அறிவிப்பதுடன், இயந்திர நடவு, விவசாய தொழிலாளர்கள் கை நடவு என பாரபட்சம் இல்லாமல் ஏக்கர் ஒன்றுக்கு ரூபாய் 7,000 வழங்க வேண்டும்.அதேபோல் ஒரு விவசாயிக்கு ஒரு ஏக்கருக்கு மட்டும் என இல்லாமல் குறைந்தபட்சம் 3 ஏக்கருக்கு இந்த நிதி உதவியை வழங்க வேண்டும். மேலும் குத்தகை விவசாயிகளுகம் பலனடையும் வகையில் சம்பா சிறப்பு திட்டத்தை குத்தகை விவசாயிகளுக்கும் விரிவு படுத்தி வழங்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் படிக்க: ஓசூர் சர்வதேச விமான நிலையம்... தமிழ்நாடு அரசின் எடுத்த வைத்த அடுத்த ஸ்டெப் - புது அப்டேட்

மேலும் படிக்க: விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்! ஏக்கருக்கு ரூ.37,000 பெறுவது ஈஸி.. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News