Pollachi Girl Student News: பொள்ளாச்சி அருகே உள்ள செங்குட்டைபாளையம் கிராமத்தில் செயல்பட்டு வரும் சுவாமி சித்பவானந்தா மெட்ரிகுலேஷன் தனியார் பள்ளியில் 8ஆம் வகுப்பு பயின்று வரும் பட்டியலின மாணவி கடந்த 5ஆம் தேதி பூப்படைந்துள்ளார்.
Pollachi Girl Student: தரையில் அமர்ந்து தேர்வெழுதிய மாணவி
இந்த நிலையில் முழு ஆண்டு தேர்வு நடைபெற்று வருவதால், பள்ளிக்கு சென்ற மாணவியை தீட்டாக கருதி பள்ளி அறையின் வெளியே தனியாக படியில் அமர வைத்து 7ஆம் தேதி அறிவியல் தேர்வு, 9ஆம் தேதி சமூக அறிவியல் தேர்வுகளை பள்ளி நிர்வாகம் எழுத வைத்துள்ளனர்.
Pollachi Girl Student: பள்ளி நிர்வாகம் அலட்சியமா?
இச்சம்பவம் அறிந்து பள்ளிக்கு சென்ற பெற்றோர் தனியாக தேர்வை எழுதிய மகளை கண்டு தனது தாய் பதறி துடித்து கேள்வி எழுப்பியுள்ளார். இங்கு அப்படி தான் நடக்கும், வேண்டுமென்றால் வேறு பள்ளியில் சேர்த்துக்கொள் எனக் கூறியதாக கூறப்படுகிறது. எனவே பள்ளி நிர்வாகம் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Pollachi Girl Student: பெற்றோர் அளித்த புகார்
இந்த நிலையில் மாணவியை வெளியே அமர வைத்து தேர்வு எழுத வைத்த பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த பாதிக்கப்பட்ட மாணவியின் உறவினர்கள் மற்றும் சமூக அமைப்பினர் சார் ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர். கிணத்துக்கிடவு தாளாளர் கல்பனா தேவி, பள்ளியின் முதல்வர் ஆனந்தி ஆகியோர் கைது செய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
8ஆம் வகுப்பு மாணவியை பள்ளி நிர்வாகம் மாதவிடாய் காரணமாக பள்ளி வகுப்பறை படியில் அமரவைத்து தேர்வு எழுதவைத்த விவகாரத்தில் பள்ளி மாணவியின் பெற்றோரிடம் பொள்ளாச்சி (ASP) காவல் உதவி கண்காணிப்பாளர் சிருஷ்டிசிங் விசாரணை நடத்தினார்.
Pollachi Girl Student: பெற்றோர் தரப்பு கூறியது என்ன?
தன் பெண்பிள்ளை பூப்பு எய்திருப்பதகவும் தேர்வு எழுதும்போது வகுப்பறையில் தனியாக அமரவைத்து எழுத சொன்னதாகவும், ஆனால் ஆசிரியர் என் மகளை வகுப்பறைக்கு வெளியில் அமரவைத்து தேர்வு எழுத வைத்ததாகவும் விசாரணையில் தெரிவித்ததாக காவல்துறை வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.
Pollachi Girl Student: பள்ளி நிர்வாகத்தினர் விளக்கம்
பின்னர் பள்ளி நிர்வாகத்தினரிடம் நடத்திய விசாரணையில் மாணவியின் பெற்றோர் தான் மகளுக்கு எதும் தொற்று ஏற்படும், தனியாக அமர வையுங்கள் என கேட்டதால் தான் மாணவியை தனியாக அமரவைத்து தேர்வு எழுத வைத்தோம் என்றும் எங்களுக்கு வேறு எந்த விதமான உள்நோக்கமும் இல்லை என்றும் தெரிவித்ததாக போலீசார் தெரிவித்தனர்.
Pollachi Girl Student: வீடியோவை பரப்பியவர்கள் மீது நடவடிக்கை
தற்போது பள்ளி தலைமை ஆசிரியர் ஆனந்தி மற்றும் பள்ளி நிர்வாகத்தினரிடம் கோவை மாவட்ட பள்ளி கல்வித்துறை அதிகாரி வடிவேல்(உதவி இயக்குநர்) விசாரணை நடத்தி வருகிறார். மேலும் இந்த பள்ளி மாணவியின் வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொள்ளாச்சி (ASP) காவல் உதவி கண்காணிப்பாளர் சிருஷ்டிசிங் தகவல் தெரிவித்துள்ளார்.
Pollachi Girl Student: அன்பில் மகேஷ் X பதிவு
பள்ளி மாணவி வெளியில் அமர வைத்து தேர்வு எழுத வைத்த விவகாரத்தில் பள்ளி முதல்வர் ஆனந்தியை பள்ளி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவரது X பக்கத்தில்,"தனியார் பள்ளி மீது துறை ரீதியான விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பள்ளி முதல்வர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். குழந்தைகள் மீதான ஒடுக்குமுறை எவ்வகையாயினும் பொறுத்துக்கொள்ள முடியாது. அன்பு மாணவி தனியாக அமரவில்லை! நாங்கள் இருக்கிறோம், இருப்போம்" என பதிவிட்டுள்ளார்.
மேலும் படிக்க | அமித்ஷா சென்னை வருகை ஏன்? தலைவர் மாற்றம் இருக்குமா? - அண்ணாமலை பதில்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









