பொள்ளாச்சி பாலியல் வழக்கு: 9 குற்றவாளிகளில் யார் யாருக்கு என்னென்ன தண்டனை?

Pollachi Sexual Assault Case: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளான 9 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Written by - Sudharsan G | Last Updated : May 13, 2025, 01:43 PM IST
  • மொத்தம் 8 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • இந்த வழக்கில் 48 சாட்சியங்கள் இருந்துள்ளது.
  • ஒரு பிறழ் சாட்சிக் கூட இல்லை.
பொள்ளாச்சி பாலியல் வழக்கு: 9 குற்றவாளிகளில் யார் யாருக்கு என்னென்ன தண்டனை?

Pollachi Sexual Assault Case: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என கோவை மகளிர் நீதிமன்றம் இன்று அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.

Pollachi Sexual Assault Case: 9 பேரும் குற்றவாளிகள்

சபரிராஜன் (A1), திருநாவுக்கரசு (A2), சதீஷ் (A3), வசந்தகுமார் (A4), மணிவண்ணன் (A5), பாபு (A6), ஹேரன்பால் (A7), அருளானந்தம் (A8), அருண்குமார் (A9) ஆகிய 9 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில், கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி தற்போது தண்டனை விவரங்களையும் அறிவித்தார். இந்த வழக்கில், குற்றவாளிகளான 9 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். பாதிக்கப்பட்ட 8 பெண்களுக்கு மொத்தம் ரூ.85 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டது.

Pollachi Sexual Assault Case: யார் யாருக்கு என்னென்ன தண்டனை?

குற்றவாளிகளான திருநாவுக்கரசு (A2), மணிவண்ணனுக்கு (A5) தலா 5 ஆயுள் தண்டனையும், சபரி ராஜனுக்கு (A1) 4 ஆயுள் தண்டனையும், சதீஷ் (A3), ஹேரன் பாலுக்கு (A7) 3 ஆயுள் தண்டனை, வசந்தகுமாருக்கு (A4) 2 ஆயுள் தண்டனை, பாபு (A6), அருளானந்தம் (A8), அருண்குமார் (A9) ஆகியோருக்கு ஒரு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

Pollachi Sexual Assault Case: குற்றவாளிகளுக்கான அபராதம்

9 குற்றவாளிகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. சபரிராஜன் (A1) ரூ.40 ஆயிரம், திருநாவுக்கரசு (A2) ரூ. 30 ஆயிரத்து 500, சதீஷ் (A3) ரூ. 18 ஆயிரத்து 500, வசந்தகுமார் (A4) ரூ. 13 ஆயிரத்து 500, மணிவண்ணன் (A5) ரூ. 18 ஆயிரம், பாபு (A6) ரூ. 10 ஆயிரத்து 500, ஹெரான் பால் (A7) ரூ. 14 ஆயிரம், அருளானந்தம் (A8) ரூ. 5,500, அருண்குமார் (A9) ரூ.5,500 என அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

Pollachi Sexual Assault Case: பாதிக்கப்பட்ட பெண்களுக்கான இழப்பீடு

பாதிக்கப்பட்ட 8 பெண்களில், 7 பேருக்கு மட்டும் இழப்பீடாக மொத்தம் ரூ.85 லட்சம் வழங்கப்படுகிறது. 7 பெண்களின் அடையாளங்கள் தெரியக்கூடாது என்பது அவர்களுக்கு A முதல் H வரை பெயரிடப்பட்டுள்ளது. A பெண்ணுக்கு ரூ. 2 லட்சம், B - ரூ. 15 லட்சம், C மற்றும் D - தலா ரூ.10 லட்சம், E - ரூ.8 லட்சம், G - ரூ.15 லட்சம், H - ரூ.25 லட்சம் என இழப்பீடு பிரித்து வழங்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட மற்றொரு பெண் சாட்டு சொல்ல வரவில்லை என்பதால் அவருக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை.

மேலும் படிக்க | கடந்த 6 வருடமாக பொள்ளாச்சி வழக்கு கடந்து வந்த பாதை! முழு விவரம்!

Pollachi Sexual Assault Case: காவல்துறை முதல் சிபிஐ வரை

தீர்ப்பு வழங்கியதை அடுத்து இந்த வழக்கில் ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர் சுந்தரமோகன்  செய்தியாளர்களிடம் பேசியபோது, "முதலில் 2019ஆம் ஆண்டில் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் விசாரணை செய்யப்படுகிறது. அதன்பிறகு இந்த வழக்கு 20 நாட்களில் சிபிசிஐடிக்கு மாற்றப்படுகிறது. அதன் பிறகு 40 நாட்களில் சிபிஐ வசம் ஒப்படைக்கப்படுகிறது.  சிபிஐக்கு வழக்கு மாறியதும், எந்தப் பெண்ணும் இதில் புகார் கொடுக்க முன் வராததால், சிபிஐ குற்றவாளிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட மின்னணு சாதனங்கள் அடிப்படையில், புலன் விசாரணை மேற்கொண்டனர். 

Pollachi Sexual Assault Case: பிறழ் சாட்சியே கிடையாது

தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண்களை கண்டறிந்து, அதன் அடிப்படையில் சிபிஐ தொடர்ந்து விசாரணை செய்தனர். இந்த வழக்கை பொறுத்தவரை அரசு தரப்பில் இருந்து 48 சாட்சிகள் விசாரிக்கப்பட்டன. இதில் கடைசி வரை ஒரு சாட்சி கூட பிறழ் சாட்சியாக மாறவில்லை. பாதிக்கப்பட்ட அனைத்து பெண்களும் பயமின்றி சுதந்திரமாக வந்து சாட்சியங்களை பதிவு செய்துள்ளனர்.

Pollachi Sexual Assault Case: முக்கிய சாட்சியங்கள்

வழக்கை நிரூபிக்க மின்னணு கருவிகளான லேப்டாப், ஐபோன் போன்ற சாட்சியங்கள், மிக முக்கியமானவையாக இருந்தது. பாதிக்கப்பட்டவர்களை கண்டறியவே அதுதான் முக்கியமாக இருந்தது. வீடியோ எடுக்கப்பட்ட தேதி, இடங்கள் அனைத்தும் தெளிவாக விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. அதை நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டு இருக்கிறது" என்றார். 

மேலும், அழிக்கப்பட்ட சாட்சிகள் அனைத்தும் தரமான முறையில் தொழில்நுட்பத்தின் உதவியுடன் மீட்டெடுக்கப்பட்டது என்றும் அதன் அடிப்படையில் பாதிக்கப்பட்ட பெண்களை அடையாளம் கண்டு இருக்கிறோம் என்றும் இந்த தொழில்நுட்ப ரீதியிலான உதவி மிகவும் நன்றாக இருந்தது என்றும் வழக்கறிஞர் கூறியிருந்தார்.

மேலும் படிக்க | இந்த ஊர்களில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை இருக்கும் - வானிலை மையம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News