பாலிடெக்னிக் Arrear-ஐ கிளியர் பண்ண நல்ல வாய்ப்பு... துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு!

Special Supplementary Exam: பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு சிறப்பு துணைத் தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வின் அட்டவணை, தேர்வுக் கட்டணம், தேர்வு முடிவுகள் வெளியாகும் நாள் என அனைத்தையும் இங்கு காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Jun 9, 2025, 04:36 PM IST
  • இந்த ஜூன், ஜூலை மாதங்களில் துணை தேர்வுகள் நடைபெறுகின்றன.
  • இந்த தேர்வுகளில் வெற்றி பெற்றால் அரியரை நீக்கலாம்.
  • மாணவர்கள் இதன்மூலம் பயன்பெறலாம்.
பாலிடெக்னிக் Arrear-ஐ கிளியர் பண்ண நல்ல வாய்ப்பு... துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு!

TN Polytechnic College Special Supplementary Exam: பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு சிறப்பு துணைத் தேர்வு குறித்து உயர்க் கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார். பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் தங்களின் வாழ்வில் அடுத்த நிலைக்கு செல்ல வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு அவர்களும் வாழ்வில் முன்னேற்றம் பெறுவதற்கு உயர்க்கல்வித்துறை ஒரு முக்கிய முன்னெடுப்பை எடுத்துள்ளது. 

Add Zee News as a Preferred Source

குறிப்பாக, மேல்நிலை இரண்டாமாண்டு (12ஆம் வகுப்பு) மாணவர்களுக்கு சிறப்பு துணைத் தேர்வு நடத்துவது  சில பாடங்களில் தேர்ச்சி பெறாத பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கும் நடப்பு 2025ஆம் ஆண்டின் ஜூன் / ஜூலை மாதங்களில் சிறப்பு துணைத் தேர்வு நடத்த ஏற்பாடு செய்துள்ளது.

Special Supplementary Exam: எதற்கு சிறப்பு துணை தேர்வுகள்...?

இதுகுறித்து உயர்க் கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன், "தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு, தமிழ்நாட்டு மக்களின் பொருளாதார தேவையை அறிந்து அரசின் அனைத்து துறைகளின் சார்பாக பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. தமிழ்நாட்டின் மாணவச் செல்வங்களின் எதிர்கால நலன் கருதி, மாணவர்களின் மீது தனி அக்கறை கொண்டு உயர் கல்வித் துறையில் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி மாணாக்கர்களின் கல்வித் தரத்தை செம்மைபடுத்தி வருகிறது. 

ஏழை, எளிய மாணவர்கள் கல்வி பயின்று, தகுந்த வேலை வாய்ப்பினைப் பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் 'நான் முதல்வன்; திட்டத்தின் மூலம் பல்வேறு நிலையில் தொழிற்சார் பயிற்சியினை வழங்கி வருகிறது. 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற பட்டயத் தேர்வுகளில் இறுதி பருவம் / துணைத் தேர்வினை எழுதிய பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் சில பாடங்களில் தேர்ச்சி அடையாமல் நிலுவை (Arrear) வைத்துள்ளனர். 

அம்மாணவர்கள் அடுத்த நிலையான உயர் கல்வி பயிலவோ அல்லது வேலை வாய்ப்பிற்கோ செல்ல இயலாமல் இருக்கும் சூழ்நிலையினை போக்க தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அந்த குறிப்பிட்ட மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பினை வழங்க ஏதுவாக 2025ஆம் ஆண்டு ஜூன் / ஜூலை சிறப்பு துணைத் தேர்வின் (Special Supplementary Examination) மூலம் தேர்ச்சி பெறாமல் உள்ள நிலுவைப் பாடங்களை எழுத வாய்ப்பு வழங்கிட அறிவுறுத்தி உள்ளார். அதன்படி இம்மாணவர்களுக்கு தற்பொழுது ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது" என தெரிவித்துள்ளார்.

Special Supplementary Exam: இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்

இதுகுறித்த விவரங்கள் அனைத்தும் https://dte.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இணையதளத்தின் வாயிலாக மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, மேலும், 2025ஆம் ஆண்டு ஜூன் / ஜூலை சிறப்பு துணைத் தேர்வுகளுக்கு கால அட்டவணையும் வெளியாகி உள்ளது. அதன்படி, மாணவர்கள் துணைத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

Special Supplementary Exam: துணைத் தேர்வுகள் அட்டவணை

சிறப்பு துணைத் தேர்வுகளுக்காக இணைய வழியில் வரும் ஜூன் 18ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். தொடர்ந்து, ஜூன் 23ஆம் தேதி இரவு 11.59 மணிவரை நீங்கள் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். இதையடுத்து, ஜூன் 25ஆம் தேதி தேர்வு ஹால் டிக்கெட் பதிவேற்றம் செய்யப்படும். தொடர்ந்து, ஜூன் 30ஆம் தேதி முதல் ஜூலை 16ஆம் தேதி வரை கருத்தியல் தேர்வுகளும், ஜூலை 17ஆம் தேதி முதல் ஜூன் 25ஆம் தேதி செய்முறைத் தேர்வுகளும் நடைபெறுகின்றன. தேர்வு முடிவுகள் ஜூலை 30ஆம் தேதி அன்று வெளியிடப்படும். 

Special Supplementary Exam: தேர்வு கட்டணம் எவ்வளவு தெரியுமா?

பாலிடெக்னிக் மாணவர்களுக்கான சிறப்பு துணைத் தேர்வுகளுக்கு விண்ணப்பக் கட்டணம ரூ.30 ஆகும். ஒரு பாடத்திற்கான தேர்வுக்கட்டணம் ரூ.65 ஆகும். இந்த சிறப்பான வாய்ப்பை மாணவர்கள் பயன்படுத்தி தங்களின் எதிர்காலத்தை வளமாக்க வேண்டும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | கிராமப்புற மக்களே நோட் பண்ணுங்க... தமிழக அரசின் இந்த சிறப்பு முகாமை மிஸ் பண்ணாதீங்க!

மேலும் படிக்க | ஜூன் மாதம் டூர் போக... தமிழ்நாட்டின் தவறவிடக்கூடாத 7 இடங்கள்!

மேலும் படிக்க | குளுகுளு நீலகிரியில் தங்கும் விடுதிகள் இலவசம் - மாணவ, மாணவிகள் உடனே விண்ணப்பிக்கவும்..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News