)
Pongal Gift 2026 Latest News Updates: திண்டுக்கல் சுற்றுலா மாளிகையில் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "இந்த வருடம் 3 மடங்கு அதிகமாக நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்ற கூட்டத்தில் ஆகஸ்ட் 18ஆம் தேதியே செறிவூட்டப்பட்ட அரிசி கொள்முதல் செய்ய மத்திய அரசு அனுமதி பெறப்பட்டதாக கூறினார்.
இதே தகவலை சென்னையில், அதிமுக முன்னாள் அமைச்சர் காமராசும் கூறினர். அவர்களிடம் மத்திய அரசு கொடுத்த கடிதத்தை கேட்டோம். தற்போது வரை அதற்கான பதில் இல்லை. மத்திய பாஜக உடன் கூட்டணியில் இருக்கும் அதிமுக இதற்கான அனுமதியை பெற்று தரலாம். ஆனால் இதுவரை பெற்று தரவில்லை. மேலும் பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர். செறிவூட்டப்பட்ட அரிசி கொள்முதல் செய்ய மத்திய அரசு இடம் அனுமதி கேட்டுள்ளோம்.
எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் 10 ஆண்டுகால ஆட்சிக் காலத்தில் 1,79,81,152 மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் 2024-25 ஆண்டு மட்டும் 47,99,184 மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது, இதுவே தமிழகத்தில் நெல் அதிகம் கொள்முதல் செய்யப்பட்டது ஆகும். திமுக ஆட்சியில் 2020-2025 தற்போது வரை 54 மாதங்களில் 1,96,37,499 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தவறான தகவல்களை கூறி முதல்வர் குறித்து அவதூறு பரப்புகிறார். சணல் இல்லை, சாக்கு இல்லை என எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார். ஆனால், கொல்கத்தாவில் இருந்து சணல், சாக்கு ஆகியவை கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
சன்ன ரக நெல்லுக்கு ரூ.156, பொது ரகத்துக்கு ரூ.131 வீதம் திமுக, அரசு கூடுதல் ஊக்கத் தொகை வழங்கி வருகிறது. நாள்தோறும் 35 ஆயிரம் டன், வெளிமாநிலங்களுக்கு நகர்வு செய்யப்படுகிறது.
இதில் கால தாமதம் ஏற்படும்பட்சத்தில், 25 இடங்களில் திறந்தவெளி சேமிப்பு கிடங்குகளை அமைத்து நெல்லை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
டெல்டா மாவட்டத்தை சேர்ந்த பூங்கொடி என்பவர் நெல் மழையில் நனைந்ததாக தவறான தகவல்களை கூறியுள்ளார். பூங்கொடி 5 ஏக்கர் குத்தகையை எடுத்து விவசாயம் செய்கிறார். தற்போது வரை நெல் அறுவடை செய்யவில்லை. அதிமுக கட்சிக்காரர்கள் இது போன்று தவறான தகவலை பரப்பி டெல்டா விவசாயிகள் இடையே பதற்றத்தை ஏற்படுத்துகின்றனர்.
தமிழ்நாட்கள் பல்வேறு பகுதியில் 183 இடங்களில் 2 எடை மிஷின் மூலம் நெல் கொள்முதல் நடைபெறுகிறது. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் குறைகளை சுட்டி காட்டலாம், தவறான தகவலை தெரிவிக்கக் கூடாது. தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் அதிகப்படியான நெல் விளைச்சல் நடந்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி ஆட்சி காலத்தை விட தற்போது அதிகப்படியான விலை கொடுத்து வருகிறோம்" என்றார்.
மேலும், ஆந்திரா மற்றும் பீகார் மாநிலங்களில் நெல் மூட்டைக்கு தமிழ்நாட்டை விட அதிக விலை கொடுக்கப்படுகிறது என்பது குறித்த கேள்விக்கு, "பாஜக ஆளுகின்ற அல்லது கூட்டணியில் இருக்கும் மாநிலத்திற்கு தேவையான நிதியை மத்திய அரசு கொடுக்கிறது. தமிழ்நாட்டில் கொடுப்பது இல்லை" என்றார். மேலும், பொங்கல் பரிசு தொகுப்பு குறித்த கேள்விக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் பொங்கல் பரிசு குறித்து அறிவிப்பார் என பதிலளித்தார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ