பொங்கல் பரிசு அறிவிப்பு... குஷியில் பொதுமக்கள் - எப்போது விநியோகம்?

Pongal Gift 2026: அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் ரூ.750 மதிப்பிலான பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Dec 10, 2025, 01:33 PM IST
பொங்கல் பரிசு அறிவிப்பு... குஷியில் பொதுமக்கள் - எப்போது விநியோகம்?

Puducherry Pongal Gift 2026: அனைத்து ரேஷன் அட்டைத்தாரர்களுக்கும் ரூ.750 மதிப்புள்ள 5 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பை வழங்க உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Add Zee News as a Preferred Source

பச்சரிசி, நாட்டு சர்க்கரை, பாசி பருப்பு, நெய், சூரிய காந்தி எண்ணெய் ஆகிய பொருள்கள் பொங்கல் பரிசு தொகுப்பில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜனவரி 3ஆம் தேதி முதல் இந்த பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகிக்கப்படும் என்றும் புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.

Pongal Gift 2026: 3.5 ரேசன் அட்டைகளுக்கு...

தமிழர் பண்டிகையான பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 14ஆம் தேதி முதல் ஜனவரி 17ஆம் தேதிவரை கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசு மற்றும் புதுச்சேரி அரசு, ரேசன் கடைகள் மூலம் பொங்கல் பரிசு தொகுப்புகளை விநியோகித்து வருகின்றன. தமிழ்நாடு அரசு இன்னும் பொங்கல் பரிசு தொகுப்பு குறித்த அறிவிப்பை வெளியிடாத நிலையில், என். ரங்கசாமி தலைமையிலான புதுச்சேரி அரசு பொங்கல் பரிசு தொகுப்பை அறிவித்திருக்கிறது. புதுச்சேரி அரசு வழங்கும் 5 பொருள்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு 3.5 லட்சம் ரேஷன் அட்டைகளுக்கு வழங்கப்பட உள்ளது. அனைத்து அரசு ஊழியர்கள், கவுரவ ரேஷன் அட்டைதாரர்கள் ஆகியோருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படமாட்டாது.

Pongal Gift 2026: என்னென்ன பொருள்கள்?

இதில் பச்சரிசி 4 கிலோ, நாட்டு சர்க்கரை 1 கிலோ, பாசி பருப்பு 1 கிலோ, நெய் 300 கிராம் மற்றும் சூரிய காந்தி எண்ணெய் 1 லிட்டர் ஆகியவை ஒரு பொங்கல் தொகுப்பு பையில் வைத்து கொடுக்கப்பட இருக்கிறது. இது புதுச்சேரி அரசின் கூட்டுறவு நிறுவனமான கான்பெட் மூலம் செயல்படுதத்ப்படுகிறது. புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய பகுதிகளில் உள்ள ரேசன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Pongal Gift 2026: ஆன்லைன் டெண்டர் மூலம் கொள்முதல்

புதுச்சேரி அரசு வழங்கும் பொங்கல் பரிசு தொகுப்பில் நெய்யை தவிர மற்ற அனைத்து பொருள்களும் ஆன்லைன் டெண்டர் செயல்முறை மூலம் கொள்முதல் செய்ய தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கான்பெட் நிறுவனத்திற்கு குடிமை பொருள் வழங்கல்துறை மூலம் புதுச்சேரி அரசு உத்தரவிட்டிருக்கிறது. நெய் மட்டும் புதுச்சேரி கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் (பாண்லே) இருந்து கொள்முதல் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும், பொருள்களை கொள்முதல் செய்வதற்கான ஆன்லைன் டெண்டர் வரும் டிசம்பர் 29ஆம் தேதி அன்று நடைபெறும் என கான்பெட் நிறுவன அதிகாரி ஒருவர் தகவல் அளித்துள்ளார். 

மேலும் படிக்க | பொங்கல் பரிசு மட்டும் இல்லை! மக்களுக்கு கிடைக்கப்போகும் கூடுதல் நன்மை!

மேலும் படிக்க | சட்டமன்றத் தேர்தல் இலக்கு... முதல்வரின் மாஸ்டர் பிளான்!

மேலும் படிக்க | புதிய ரேஷன் கார்டு : பொங்கல் பரிசு கிடைக்கும், மகளிர் உரிமைத் தொகை இல்லை - முக்கிய தகவல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News