பொங்கல் பரிசு: டோக்கன் கிடைக்காதவர்கள் என்ன செய்யலாம்? அரசின் செம்ம அப்டேட்!

Pongal Parisu Latest Update: பொங்கல் பரிசு தொகுப்பு, ரூ.3,000 அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில், பொங்கல் பரிசு டோக்கன் கிடைக்காதவர்கள் என்ன செய்யலாம் என்பது குறித்து இங்கு பார்ப்போம்.    

Written by - Umabarkavi K | Last Updated : Jan 10, 2026, 03:55 PM IST
  • பொங்கல் பரிசு அப்டேட் 2026
  • டோக்கன் பெறாதவர்கள் என்ன செய்யலாம்?
  • முழு விவரம் இதோ
பொங்கல் பரிசு: டோக்கன் கிடைக்காதவர்கள் என்ன செய்யலாம்? அரசின் செம்ம அப்டேட்!

Tamil Nadu Government Pongal Parisu Latest Update: தமிழ்நாடு முதவ்லர் மு.க.ஸ்டாலின் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடும் வகையில், பொது விநியோகத் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத்தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசாக பச்சரிசி, சர்க்கரை, ஏலக்காய், கரும்பு மற்றும் ரொக்க பரிசாக ரூ.3,000 வழங்கப்படும் என அறிவித்தார். 

Add Zee News as a Preferred Source

பொங்கல் பரிசுத் தொகுப்பு

பொங்கல் பரிசு தொகுப்பு ஜனவரி 8ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் துவங்கி வைத்தார். எனவே, ஜனவரி 8ஆம் தேதி முதல் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.3,000 வழங்கப்பட்டு வருகிறது. டோக்கன் கொடுத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அனைத்து நியாய விலைக் கடைகளிலும் ரேஷன் அட்டைதாரர்கள் டோக்கனில் குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்திற்கு வந்து, பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற்று வருகின்றனர். 

கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 84,77,462 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகையாக ரூ.2543.23 கோடி விநியோகம் செய்யப்பட்டுள்ளது.  அதே நேரத்தில், சில இடங்களில் ரேஷன் கடை ஊழியர்கள் வழங்க வந்தபோது, வீட்டில் யாரும் இல்லாததால், சில ரேஷன் அட்டைதாரர்களுக்கு   டோக்கன் கிடைக்காமல் இருக்கலாம். எனவே, டோக்கன் கிடைக்காதவர்கள் என்ன செய்யலாம் என்பது குறித்து பார்ப்போம்.

டோக்கன் கிடைக்காதவர்கள் என்ன செய்யலாம்?

பொங்கல் பரிசு டோக்கன் கிடைக்காதவர்கள் தங்களது ரேஷன் கடைகளுக்கு சென்று, இதுபற்றி கூறி, பொங்கல் பரிசை பெற்றுக் கொள்ளலாம். மேலும், டோக்கன் பெறாதவர்களுக்கு தனியாக ஒரு சிறப்பு விநியோக நாள் அறிவிக்கப்படும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். அந்த நாளில் டோக்கன் கிடைக்காதவர்கள் தங்களின் ரேஷன் கடைகளுக்கு சென்று, பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்க பணத்தை பெற்றுக் கொள்ளலாம். எனவே, டோக்கன் கிடைக்காதவர்கள் கவலைப்படவில்லை. அரிசி குடும்ப அட்டை இருந்தால் உங்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ.3000 ரொக்கம் வழங்கப்படும் என தமிழக அரசு உறுதி அளித்துள்ளது. 

பொங்கல் பரிசு டோக்கன் பெறுவது எப்படி?

பொங்கல் பரிசு டோக்கன்  தகுதியுள்ள குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கே வரும். இல்லையெனில் உங்களுக்கு சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளுக்கு சென்று உங்களுக்கான டோக்கனை பெற்றுக் கொள்ளுங்கள். அதில் குறிப்பிட்ட தேதி மற்றும் நாளில் உங்களுக்கான   பொங்கல் பரிசு மற்றும் ரூ.3,000 ரொக்க பணத்தை பெற்றுக் கொள்ளலாம். 

யாருக்கெல்லாம் கிடைக்கும்?

ரேஷன் கடைகளில் அரிசிக்கு பதிலாக சர்க்கரை மட்டும் வாங்கும்  குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படாது. ரேஷனில் எந்த பொருளும் வாங்காமல்  வெறும் அடையாள சான்றுககாக மட்டும் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கும் பொங்கல் பரிசு கிடையாது. மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவன ஊழியர்கள், வரி செலுத்துபவர்களில் பொங்கல் பரிசுத் தொகுப்பு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: போரூர் - பூந்தமல்லி மெட்ரோ! வந்தது கிரீன் சிக்னல்.. சென்னை வாசிகளுக்கு செம்ம அப்டேட்

மேலும் படிக்க: வேலையில்லாதவர்களுக்கு உதவித்தொகை! அள்ளிக்கொடுக்கும் தமிழக அரசு.. விண்ணப்பிப்பது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

 

 

 

 

 

 

 

About the Author

Trending News