தொடரும் வரதட்சணை கொடுமை.. திருமணமான 4வது நாளிலேயே இளம்பெண் எடுத்த சோக முடிவு!

பொன்னேரி அருகே திருமணமான 4வது நாளில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

Written by - R Balaji | Last Updated : Jul 1, 2025, 05:25 PM IST
  • பொன்னேரியில் வரதட்சணை கொடுமை
  • இளம்பெண் தற்கொலை
தொடரும் வரதட்சணை கொடுமை.. திருமணமான 4வது நாளிலேயே இளம்பெண் எடுத்த சோக முடிவு!

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த முஸ்லிம் நகரை சேர்ந்தவர் லோகேஸ்வரி (24). பட்டதாரி பெண்ணான இவருக்கும் காட்டாவூர் கிராமத்தை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் பன்னீர் (37) என்பவருக்கும் அண்மையில் திருமணம் நிச்சயிக்கப்பட்டு கடந்த 27ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. 4 நாட்களுக்கு முன் திருமணம் நடைபெற்ற நிலையில், இளம்பெண் லோகேஸ்வரியை அவரது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. 

Add Zee News as a Preferred Source

10 சவரன் வரதட்சனை கேட்டு, 5 சவரன் கொடுப்பதாக ஒப்புக்கொண்ட நிலையில், 4 சவரன் நகை வரதட்சணையாக கொடுக்கப்பட்டுள்ளது. சீர்வரிசை பொருட்களும், பைக் ஒன்றும் சீதனமாக கொடுக்கப்பட்டுள்ளது. குடும்பத்தின் மூத்த மருமகள் 12 சவரன் வரதட்சணை கொண்டு வந்ததாகவும் பாக்கியுள்ள 1 சவரன் நகையை வாங்கி வருமாறு கணவர் குடும்பத்தினர் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. 

மறுவீட்டுக்காக நேற்று (ஜூன் 30) தாய் வீட்டிற்கு வந்திருந்த லோகேஸ்வரி, தமது பெற்றோரிடம் இதுகுறித்து வேதனை தெரிவித்துள்ளார். மேலும் வீட்டு வேலைகளை செய்யுமாறு வற்புறுத்தியதாகவும், காலை எழுந்தவுடன் துணி துவைக்க வேண்டும், பாத்திரங்களை தூய்மைப்படுத்த வேண்டும், சோபாவில அமர கூடாது என கூறி மாமியார் குடும்பத்தார் கொடுமைப்படுத்தியதாக தாய் மற்றும் தங்கையிடம் கூறி அழுதுள்ளார். பெரிய மருமகள் அதிக நகைக் கொண்டு வந்ததையும், பாக்கி 1 சவரன் நகையை வாங்கி வருமாறும், வீட்டிற்கு ஏசி வாங்கி கொடுக்குமாறும் தொந்தரவு செய்ததாக கூறியுள்ளார். 

இந்நிலையில் நேற்று (ஜூன் 30) இரவு வீட்டின் கழிவறையில் லோகேஸ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நீண்ட நேரம் லோகேஸ்வரி வராததை கண்ட அவரது குடும்பத்தினர் சென்று பார்த்தபோது கழிவறையிலிருந்து தூக்கிட்ட நிலையில் இருந்து அவரை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் லோகேஸ்வரி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

இதனைத் தொடர்ந்து பிரேத  பரிசோதனைக்காக அனுப்பி வைத்து பொன்னேரி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இளம் பெண்ணின் கணவர் பன்னீர் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் பொன்னேரி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 1 சவரன் நகையை வரதட்சணையாக கேட்டு கொடுமைப்படுத்தியதால் திருமணமான 4வது நாளிலேயே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

(வாசகர்கள் கவனத்திற்கு: தற்கொலைக்கு முயல்வது எதற்கும் முடிவல்ல: தற்கொலை எண்ணங்கள் எழுந்தால், சினேகா அமைப்பின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்புக் கொள்ளலாம். மேலும், தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104 க்கும் தொடர்புகொண்டு நீங்கள் பேசலாம்)

மேலும் படிங்க: அஜித்குமார் லாக்கப் மரணம்: மானாமதுரை டிஎஸ்பி பணியிடை நீக்கம் - காவல்துறை உத்தரவு

மேலும் படிங்க: தமிழ்நாடு அரசு கொடுக்கும் ரூ.25 ஆயிரம்... மாணவர்கள் விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிப்பு - எப்போது வரை?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News