விஜய்யை எதிர்த்து போட்டியிடுவேன்.. எனக்கும் ரசிகர்கள் இருக்காங்க - பவர் ஸ்டார் சீனிவாசன் அதிரடி

Power Star Srinivasan Slams Vijay: விஜய் எந்த தொகுதியில் நின்றாலும் அவரை எதிர்த்து நான் போட்டியிடுவேன் என பவர் ஸ்டார் சீனிவாசன் கூறியுள்ளார். 

Written by - R Balaji | Last Updated : Mar 31, 2025, 05:20 PM IST
  • தவெக தலைவர் விஜய்யை நடிகர் பவர் ஸ்டார் விமர்சித்துள்ளார்
  • அவரை எதிர்த்து போட்டியிட போவதாக கூறினார்
விஜய்யை எதிர்த்து போட்டியிடுவேன்.. எனக்கும் ரசிகர்கள் இருக்காங்க - பவர் ஸ்டார் சீனிவாசன் அதிரடி

தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் என கூறப்பட்ட நடிகர் விஜய் தற்போது அரசியல் களத்தில் குதித்துள்ளார். கடந்த ஆண்டு தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி தற்போது அவர் 2026ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட உள்ளார். அவர் தனது கடைசி படமான ஜன நாயகன் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் 2026 பொங்களுக்கு வெளியாக இருக்கிறது. கடைசி படம் என்பதால் இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. 

Add Zee News as a Preferred Source

விஜய் அரசியலுக்கு வந்தது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தாலும்,. அவர் சினிமாவில் இருந்து விலகுவது அவரது ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இருப்பினும் அவரை எப்படியாவது தேர்தலில் வெற்றி பெற செய்திட வேண்டும் என அவரது ரசிகர்கள் கடுமையாக உழைத்து வருகின்றனர். விஜய்யும் ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் முழுமையாக களத்தில் இறங்கி தேர்தலை சந்திப்பதற்கான வேலையை தொடங்கிவிடுவார். 

மேலும் படிங்க: 2026-ல் தமிழக முதல்வர் ஆவது யார்? சி வோட்டர் கணக்கெடுப்பில் மக்கள் சொன்ன பெயர்!!

 

விஜய் விக்கிரவாண்டியில் நடத்திய முதல் மாநாட்டில் இருந்தே நேரடியாகவும் மறைமுகமாகவும் திமுகாவை கடுமையாக விமர்சித்து வருக்கிறார். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் திமுகாவை விமர்சிக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பாக கூட, திருவள்ளூரில் தமிழக வெற்றிக் கழக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதிலும் திமுகாவை கடுமையாக சாடி இருந்தார். இந்த நிலையில்தான், பவர் ஸ்டார் சீனிவாசன் விஜய் குறித்து பேசி இருக்கிறார். 

நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் சென்னை வடபழனியில் திரைப்பட பூஜை ஓன்றில் கலந்து கொண்டார். அப்போது பேட்டி அளித்த பவர் ஸ்டார் சீனிவாசன், விஜய் முதலில் களத்திற்கு வர வேண்டும். மேடையில் பஞ்சு டயலாக் பேசுகிறார். பாரம்பரிய கட்சியான திமுகாவை விமர்சினம் செய்யக்கூடாது. 

நான் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீது பெரிய மரியாதை வைத்திருக்கிறேன். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மக்களுக்கு என்ன செய்யப்போகிறார் என்பதைதான் கூற வேண்டும். அதை விட்டுவிட்டு, தனக்கு கூட்டம் இருக்கிறது என்பதற்காக எடுத்தோம் கவிழ்த்தோம் என மேடையில் பேசக்கூடாது. விஜய் தமிழ்நாட்டின் எந்த தொகுதியில் நின்றாலும் அவரை எதிர்த்து நான் போட்டியிடுவேன். எனக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். போட்டியிட நான் தயார் என பேசினார். 

மேலும் படிங்க: டேனியல் பாலாஜி நடித்த கடைசி படம்! RPM படத்தின் ரிலீஸ் தேதி இதுதான்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News