)
சென்னை தண்டையார்பேட்டையில் தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு வணிகர்க சங்க பேரமைப்பின் சார்பாக வடசென்னை கிழக்கு மாவட்டத்தின் புதிய நிர்வாகிகள் இன்று பொறுப்பேற்கும் நிகழ்வு நடைபெற்றது.
இதில் வணிகர் சங்க பேரமைப்பின் தலைவரான விக்ரம் ராஜா கலந்து கொண்டு பொறுப்பேற்ற புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி வாழ்த்து கூறி இந்த மாவட்டத்தில் வலிமை பெற வேண்டும் என்று உரையாற்றினார்.
இதனை தொடர்ந்து செய்தியாளரை சந்தித்த அவர், கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆன்லைன் வர்த்தகம் மற்றும் டி மார்ட் போன்ற நிறுவனங்களுக்கு எதிராக வருகின்ற 30 ஆம் தேதி அன்று திருச்சி நடைபெறவிருக்கும் போராட்டத்திற்கு மாவட்ட ரீதியிலிருந்து பொறுப்பாளர்கள் கீழ் உள்ள நிர்வாகிகள் ஆயிரம் பேரைத் திரட்டி அழைத்து வர வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
காவல்துறை உதவி ஆய்வாளர் படுகொலை செய்யப்பட்டது தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு கண்டித்து இருக்கிறது அதேபோல் காவல்துறை அதிகாரிகள் சமூக வலைத்தளங்களில் வருவதை அச்சப்படாமல் துரிதமாக செயல்பட வேண்டும் என்றும் காவல்துறை அதிகாரிகளை தாக்கக் கூடியவர்களை சுட்டு பிடிக்க கூடிய நிலையை அதிகாரிகள் உயர்த்திப் பிடிக்க வேண்டும் என்றும் காவல்துறையினருக்கு எந்த சோதனை ஏற்பட்டாலும் அதற்கு தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை துணை நிற்கும் என்று கூறினார்.
தமிழ்நாடு முழுவதும் இருக்கும் அனைத்து வியாபாரிகளை பாதுகாப்பதற்கு மத்திய மாநில அரசுகள் இணைந்து கொண்டு சிறப்பு பாதுகாப்பு சட்டத்தை விரைவாக இயற்றப்பட வேண்டும் என்று கோரிக்கையை முன் வைத்தார்.
வருகின்ற 30 ஆம் தேதி அன்று திருச்சியில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிராக நடைபெறும் போராட்டத்திற்கு தமிழ்நாடு முழுவதும் இருந்து லட்சம் கணக்கில் வியாபாரிகள் பங்கேற்க இருக்கிறார்கள் எங்களது வாழ்வுரிமையையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க அந்தப் போராட்டம் அமையும் தனி ஒரு மனிதன் வாழ்வதற்கு பல லட்சம் மனிதர்கள் வீழ்வதா என்று எங்களுடைய கேள்வியாக இருக்கிறது.
குறிப்பாக டி மார்ட் முதலாளி மும்பையில் இருக்கிறார் அவருடைய வாக்கு தமிழகத்தில் போட முடியாது ஆனால் தமிழகத்தில் இருக்கக்கூடிய சாமானிய வியாபாரிகள் தான் வாக்குரிமை பெற்றவர்கள் அதனை தமிழ்நாடு முதலமைச்சர் கவனத்திற்கு எடுத்துச் சென்று இருக்கின்றோம் விரைவாக நல்ல தீர்வு ஏற்படும் என நம்புகிறோம்.
அமெரிக்கா நாடு ஏற்கனவே 25 சதவீதம் இந்தியாவிற்கு வரி உயர்வு இருக்கும் நிலையில் மீண்டும் 25 சதவீதம் வரி உயர்வு ஆக மொத்தம் 50% வரி உயர்வு செய்த டிரம்ப் அவர்களுக்கு கண்டனத்தை தெரிவித்திருக்கிறார்.
தமிழ்நாடு மக்கள் மட்டுமில்லாமல் இந்திய தேசத்தில் உள்ள அனைத்து மக்களும் அமெரிக்கா பொருட்களை வாங்காமல் புறக்கணிக்க வேண்டும் என்றும் நம் நாட்டு மக்கள் உள்நாட்டு வணிகத்தை பாதுகாக்க வேண்டும் என்றும் உள்நாட்டு உற்பத்தியை வாங்குவதற்கும் உள்ளூர் வணிகர்களிடம் வணிகம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு பேரவை கேட்டுக்கொள்கிறேன்.
காவல்துறை ஊடகத்தையும் சமூக வலைத்தளங்களில் வரும் செய்திகளையும் விமர்சனங்களை வைத்த அச்சப்படுகிறார்கள் எனவும் காவல்துறையினருக்கு சோதனைகள் வரும்போது வணிகர்கள் காவல்துறையினருக்கு ஒரு துணையாக இருப்பார்கள் எனவும் ரவுடிசம் கட்டப்பஞ்சாயத்து கலாச்சாரத்தை வேரோடு அழிக்க வேண்டும் காவல்துறையினர் துப்பாக்கியை கையில் ஏந்தி செயல்பட வேண்டும் என்று கூறினார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ