சென்னையில் நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்! கலந்து கொண்ட முக்கிய சங்கங்கள்!

வேலையை இழந்து தவிக்கும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர் நலன் காத்திட சென்னையில் இன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு சங்கங்கள் கலந்து கொண்டன.

Written by - RK Spark | Last Updated : May 21, 2025, 03:00 PM IST
  • சென்னையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.
  • பல்வேறு சங்கங்கள் கலந்து கொண்டன.
  • ஆலைகளை திறக்க கோரி ஆர்ப்பாட்டம்.
சென்னையில் நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்! கலந்து கொண்ட முக்கிய சங்கங்கள்!

சென்னை இராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் இன்று தோழர் தனசேகரன் தலைமையில் வேலையை இழந்து தவிக்கும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர் நலன் காத்திட கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதால் அதனை மட்டுமே நம்பியிருந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்து வாழ்வாதாரமின்றி தவித்து வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் உற்பத்தியை பெருக்கி தொழிலாளர்களின் வாழ்க்கையை மேம்படுத்த வேண்டிய அரசு வீண் வதந்திகளையும், தவறான தகவல்களையும்  நம்பி  ஆலைகளை மூடுவதால் சமூக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டது தொழிலதிபர்களல்ல; அப்பாவி தொழிலாளர்கள் தான்.  

மேலும் படிக்க | புதிய வீடு கட்டுபவர்களுக்கு தமிழ்நாடு அரசு வெளியிட்ட மிகப்பெரிய குட்நியூஸ்..!

நாடு முழுவதும் பல பஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன. தூத்துக்குடியிலும் மதுரா கோட்ஸ் கூட்டுறவு நூற்பாலை, ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை ஆகிய ஆலைகளும், உப்பு உற்பத்தி குறைந்ததால் அதை  சார்ந்து இருந்த  தொழிலாளர்களும்  வேலை வாய்ப்பை இழந்து பெருநகரங்களை நோக்கி வேலை தேடிச் செல்வதால் சமூகப் பொருளாதார நெருக்கடி முற்றுகிறது. தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையை நம்பி கிட்டத்தட்ட 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வாழ்வாதாரம் இழந்து பாதிப்படைந்துள்ளனர். துறைமுகத்தில் சரக்குகளை கையாளக்கூடிய பலநூறு கூலி தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக சிறு, குறு வணிகங்களும் பெருமளவில் பாதிப்படைந்துள்ளன.

எனவே தமிழகம் முழுவதும் மூடப்பட்ட பல்வேறு ஆலைகளைத் திறக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வாழ்வாதாரமின்றி தவிக்கும் தொழிலாளர்கள் நலனை மீட்டெடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் வேலையை இழந்த பல தொழிலாளர்கள், ஸ்டெர்லைட் ஆலை பகுதி கிராம மக்கள், தூத்துக்குடி கடலோர பகுதி வாழ் மீனவ மக்கள், தொழிற்சங்கங்களின் கூட்டமைப்புகள், தமிழ்நாடு சந்தை சாலையோர சிறுவியாபாரத் தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு இந்து வியாபாரிகள் சங்கம், பரமத்தி வேலூர் தாலுக்கா லாரி உரிமையாளர்கள் சங்கம், நாமக்கல் தாலுக்கா லாரி உரிமையாளர்கள் சங்கம், ஸ்டெர்லைட் ஆலை ஒப்பந்தக்காரர்கள் மற்றும் உதிரி பாகங்கள் விற்பனையாளர்கள் சங்கம், அகில இந்திய நாடார்கள் சங்கம் உள்பட பல்வேறு சங்கங்கள் கலந்து கொண்டன.

மேலும் படிக்க | மாணவர்கள் Scholarship பெற... இதுதான் கடைசி நாள்... விண்ணப்பிப்பது எப்படி? - தமிழக அரசு அறிவிப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News