)
Pudhumai Penn Scheme: பள்ளி செல்லும் மாணவிகள், கல்லூரி படிப்பை தொடர வேண்டும் என்ற சமூக அக்கறையோடு தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் திட்டம் தான், கல்லூரி மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 கொடுக்கும் புதுமைப் பெண் திட்டம். இத்திட்டத்தை 2022 ஆம் ஆண்டு மார்ச் 18 ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதே ஆண்டு செப்டம்பர் 5, 2022ல் அதிகாரப்பூர்மாக தொடங்கி வைத்தார். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்த மாணவிகள் கல்லூரிகளில் சேர்ந்தால், இத்திட்டத்தில் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொள்ளலாம்.
புதுமைப் பெண் திட்டத்தின் சிறப்பு
இத்திட்டத்தின் இன்னொரு சிறப்பு என்னவென்றால் கல்லூரி மாணவிகள் வேறு எந்த கல்வி உதவித்தொகை பெற்றாலும் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 பெறலாம். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் இருந்தாலும் இத்திட்டத்தின் கீழ் பயனடையலாம். அதாவது, அரசு பள்ளிகளில் படித்து கல்லூரி படிப்பை படிக்கும் ஒவ்வொரு மாணவிக்கும் இத்திட்டத்தின் கீழ் மாதாந்திர நிதியுதவி அவர்களது வங்கிக் கணக்குகளிலேயே நேரடியாக வரவு வைக்கப்படும். இப்போது வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் இத்திட்டம் குறித்து தமிழ்நாடு அரசின் மாநில திட்டக்குழு ஆய்வு நடத்தி, அதனை வெளியிட்டுள்ளது.
புதுமைப் பெண் திட்டம் - டாப் 5 மாவட்டங்கள்
2023 ஆம் ஆண்டு மே மாதம் அடிப்படையில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த ஆய்வின் முடிவுகளில் பல முக்கிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. புதுமைப் பெண் திட்டம் நடைமுறைக்கு வந்தபிறகு கல்லூரி படிப்புக்கு செல்லும் மாணவிகளின் எண்ணிக்கை பெருமளவு உயர்ந்திருக்கிறது. மே 2023 ஆய்வறிக்கையின்படி, தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களிலும் சேர்த்து 2,30, 820 மாணவிகள் இத்திட்டத்தின் பயனாளிகளாக இருந்துள்ளனர். அதில் டாப் 5 மாவட்டங்கள் பட்டியலில் சேலம், நாமக்கல், தருமபுரி, சென்னை, திருவண்ணாமலை மாவட்டங்கள் உள்ளன. கோயம்புத்தூர் 6வது இடத்தில் உள்ளது.
கிராமப்புற மாணவிகள் எண்ணிக்கை அதிகரிப்பு
மேலே சொல்லப்பட்டுள்ள மாவட்டங்கள் புதுமைப் பெண் திட்டத்தில் அதிக மாணவிகள் பயன்பெறும் மாவட்டங்களாக தமிழ்நாடு அரசின் மாநில திட்டக்குழு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும், ஈரோடு, திருவள்ளூர், தென்காசி, விழுப்புரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் உள்ள மிகவும் வறிய நிலையில் உள்ள கிராமப்புறங்களைச் சேர்ந்த மாணவிகள் கல்லூரி படிப்புக்கு செல்லும் எண்ணிக்கையும் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்திருப்பதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இது புதுமைப் பெண் திட்டம் மாணவிகள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கும் மாற்றத்தையும், சமூக தாக்கங்களையும் பிரதிபலிப்பதாகவும், இதுவே இத்திட்டத்தின் வெற்றிக்கான ஆதாரங்கள் என்று குறிப்பிடலாம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு கல்லூரிகளில் அதிக மாணவிகள்
புதுமைப் பெண் திட்டத்தில் பயனாளிகளாக இருப்பவர்களில் அதிகமானோர், அதாவது 45 விழுக்காடு அரசு கல்லூரிகளில் படிப்பவர்களாகவும், 28 விழுக்காடு சுயநிதிக் கல்லூரிகளில் படிப்பவர்களாகவும், 22 விழுக்காடு அரசு உதவி பெறும் கல்லூரிகளில் படிப்பவர்களாகவும் இருப்பதாகவும் தமிழ்நாடு அரசின் மாநில திட்டக்குழு கூறியுள்ளது.
புதுமைப் பெண் திட்டம் ஏற்படுத்தியுள்ள தாக்கம்
* புதுமைப் பெண் திட்டம் மூலம் கிடைக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் உயர்கல்வியில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கையை உயர்த்தியுள்ளது
* இந்த நிதியுதவி கல்விச் செலவுக்கு தேவையான செலவுகளையும், இதர குடும்பச் செலவுக்கும் உதவுவதால், மாணவிகள் கல்லூரி படிப்பை எந்தவித சிக்கலும் இல்லாமல் தொடர வழிவகை செய்கிறது.
* புதுமைப் பெண் திட்டம் மூலம் கிடைக்கும் ஆயிரம் ரூபாய் மாணவிகளின் கல்லூரி படிப்பை உறுதி செய்வதுடன், அவர்கள் முன்கூட்டியே திருமணம் செய்வதையும் தடுத்து, வாழ்க்கையில் எதிர்கால கனவுகளை நிறைவேற்றிக் கொள்ளவும் வழிவகை செய்கிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ