)
மாநில அரசு அல்லது மத்திய அரசு பணியில் சேர விரும்புவோர் பலரும் வங்கியிலும் பணி புரிய ஆர்வம் காட்டுகின்றனர். அந்த வகையில், வங்கி துறையில் நிரந்தர வேலைவாய்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு ஒரு அறிய வாய்ப்பு வந்துள்ளது. இந்திய அரசின் பொதுத்துறை வங்கியான பஞ்சாப் & சிந்து வங்கி, நாடு முழுவதும் உள்ள தனது கிளைகளில் காலியாக உள்ள 750 உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டிலும் காலிப்பணியிடங்கள் உள்ளது.
இந்த பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் அதிகாரிகளுக்கு ஆரம்ப அடிப்படை சம்பளமாக ரூ.48,480 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், கூட்டு ஒப்பந்தத்தின்படி 3 ஊதிய உயர்வுகள் சேர்க்கப்பட்டு, தொடக்க அடிப்படை சம்பளம் ரூ.56,480 ஆக இருக்கும். இந்த அடிப்படை சம்பளத்துடன் அகவிலைப்படி, வீட்டு வாடகைப்படி, போக்குவரத்து படி மற்றும் வங்கியின் கொள்கைகளின் படியான பிற சலுகைகளும் வழங்கப்படும். அதன்படி சம்பள விகிதம் ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை இருக்கும்.
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 20 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் மாநிலத்தின் உள்ளூர் மொழியில் சரளமாக பேச, எழுத மற்றும் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். தமிழ்நாட்டிற்கு விண்ணப்பிப்பவர்களுக்கு தமிழ் மொழி அறிவு கட்டாயமாகும். 10 அல்லது 12 ஆம் வகுப்பில் தமிழ் மொழி படித்தவர்களுக்கு மொழித் திறன் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.
இந்த பணிக்கு விண்ணப்பதாரர்கள் மூன்று கட்டங்களாக தேர்வு செய்யப்படுவார்கள். முதலில் எழுத்துத தேர்வு 120 மதிப்பெண்களுக்கு 2 மணி நேரம் நடைபெறும். இதில் ஆங்கிலம், வங்கி சேவை, பொது அறிவு/பொருளாதாரம் மற்றும் கணினி திறன் ஆகிய பிரிவுகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். அடுத்ததாக எழுத்து தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். இது 50 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். நேர்காணலின் போது மொழி திறன் சோதிக்கப்படும். எழுத்து தேர்வில் பெற்ற மதிப்பெண்களில் 70% மற்றும் நேர்காணலில் பெற்ற மதிப்பெண்களில் 30% அடிப்படையில் இறுதி முடிவு எடுக்கப்படும்.
இந்த பணிக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஆகஸ்ட் 20 முதல் செப்டம்பர் 4 வரை விண்ணப்பங்கள் ஏற்கப்படும். பொதுப் பிரிவினருக்கு ரூ.850 + ஜிஎஸ்டி, மற்ற பிரிவினருக்கு ரூ.100 + ஜிஎஸ்டி கட்டணம் செலுத்த வேண்டும். வங்கி துறையில் ஒரு நிலையான மற்றும் சவாலான வேலையை தேடும் தகுதியுள்ள பட்டதாரிகள், பஞ்சாப் & சிந்து வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான punjabandsindbank.co.in மூலம் மேலும் விவரங்களை அறிந்து விண்ணப்பிக்கலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ