)
Purattasi 2025 Spiritual Temple Tour Tamil Nadu: புரட்டாசி மாதம் வைணவ திருகோவில்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இலவச ஆன்மீக சுற்றுலா பயணம் ஏற்பாடு செய்யப்படுள்ளது. இதில் மூத்த குடிமக்கள் மட்டும் சென்றுவர முடியும். மற்றவர்களுக்காக, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மூலம், புரட்டாசி மாதத்தில் ஒருநாள் பெருமாள் கோவில்கள் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 17.09.2025 முதல் புதன், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த சுற்றுலா அழைத்துச் செல்லப்படும்.
ஆடி மாதத்தில் ஒரு நாள் அம்மன் கோவில் சுற்றுலா நடத்தப்பட்டது. இந்த சுற்றுலாவானது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, சென்னை, மதுரை, திருச்சி மற்றும் தஞ்சாவூர் ஆகிய நகரங்களில் உள்ள பிரசித்தி பெற்ற பெருமாள் திருக்கோவில்களை தரிசனம் செய்யும் வகையில் காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை ஒரு நாள் புரட்டாசி பெருமாள் கோவில்கள் தொகுப்பு சுற்றுலா 17.09.2025 அன்று முதல் புதன், சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இயக்கப்பட உள்ளது.
ஒருநாள் வைணவ திருக்கோவில் சுற்றுலா சென்னை-1 (ஒரே நாளில் 6 பெருமாள் திருக்கோவில்கள்)
சென்னை திருவல்லிகேணி சுற்றுலா வளாகத்திலிருந்து காலை 8.30 மணிக்கு புறப்பட்டு அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோவில், திருவல்லிக்கேணி அருள்மிகு அஷ்டலக்ஷ்மி கோவில் திருக்கோவில், பெசண்ட் நகர் - அருள்மிகு நித்தியகல்யாண பெருமாள் திருக்கோவில், திருவிடந்தை - அருள்மிகு ஸ்தல சயன பெருமாள் திருக்கோவில், மாமல்லபுரம் அருள்மிகு பாடலாத்ரி நரசிம்மர் திருக்கோவில், சிங்கபெருமாள் கோவில் அருள்மிகு நீர்வண்ணப் பெருமாள் திருக்கோவில், திருநீர்மலை ஆகிய திருக்கோவில்களை கண்டு தரிசனம் செய்து வரும் வகையில் சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சுற்றுலாவிற்கான கட்டணம் ரூ.1000/- மேலும், மதிய உணவு, கோவில்களின் பிரசாதம் மற்றும் சிறப்பு விரைவு தரிசனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஒருநாள் வைணவ திருக்கோவில் சுற்றுலா சென்னை-2 (ஒரே நாளில் 7 பெருமாள் திருக்கோவில்கள்)
சென்னை திருவல்லிகேணி சுற்றுலா வளாகத்திலிருந்து காலை 8.30 மணிக்கு புறப்பட்டு அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோவில், திருவல்லிக்கேணி அருள்மிகு நீர்வண்ணப் பெருமாள் திருக்கோவில், திருநீர்மலை பொன்னுசாமி பெருமாள் திருக்கோவில், திருமுல்லைவாயில் வைத்திய வீர ராகவ பெருமாள் திருக்கோவில், திருவள்ளூர் அருள்மிகு ஆதிகேசவப் பெருமாள் திருக்கோவில், ஸ்ரீபெரும்புதூர் - அருள்மிகு வரதராஜப் பெருமாள் திருக்கோவில், பூந்தமல்லி ஆகிய திருக்கோவில்களை கண்டு தரிசனம் செய்து வரும்வகையில் சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சுற்றுலாவிற்கான கட்டணம் ரூ.1000/- மேலும், மதிய உணவு, கோவில்களின் பிரசாதம் மற்றும் சிறப்பு விரைவு தரிசனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஒருநாள் வைணவ திருக்கோவில் சுற்றுலா - மதுரை
மதுரை, ஓட்டல் தமிழ்நாடு, அழகர் கோயில் சாலையிலிருந்து புறப்பட்டு, அருள்மிகு கள்ளழகர் திருக்கோவில், அழகர் கோவில்- அருள்மிகு ஸ்ரீ யோக நரசிம்மர் பெருமாள் திருக்கோவில், ஒத்தகடை அருள்மிகு காளமேகப் பெருமாள் திருக்கோவில், திருமோகூர் அருள்மிகு சௌம்ய நாராயண பெருமாள் திருக்கோவில், திருகோஷ்டியூர் அருள்மிகு வீர ராகவ பெருமாள், வண்டியூர்- அருள்மிகு கூடலழகர் பெருமாள் திருக்கோவில், மதுரை ஆகிய திருக்கோவில்களை கண்டு தரிசனம் செய்து வரும் வகையில் சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சுற்றுலாவிற்கான கட்டணம் ரூ.1400/- மேலும், மதிய உணவு, கோவில்களின் பிரசாதம் மற்றும் சிறப்பு விரைவு தரிசனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஒருநாள் வைணவ திருக்கோவில் சுற்றுலா - திருச்சி
ஓட்டல் தமிழ்நாடு, திருச்சியிலிருந்து புறப்பட்டு, அருள்மிகு அழகிய மணவாளன் பெருமாள் திருக்கோவில், உறையூர் - அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோவில், ஸ்ரீரங்கம் - அருள்மிகு புருஷோத்தம பெருமாள் திருக்கோவில், உத்தமர் கோவில் - அருள்மிகு பிரசன்ன வெங்கடாசல பெருமாள் திருக்கோவில், குணசீலம் அருள்மிகு பெருமாள் திருக்கோவில், தான்தோன்றிமலை ஆகிய திருக்கோவில்களை கண்டு தரிசனம் செய்து வரும் வகையில் சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சுற்றுலாவிற்கான கட்டணம் ரூ.1100/- மேலும், மதிய உணவு, கோவில்களின் பிரசாதம் மற்றும் சிறப்பு விரைவு தரிசனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஒருநாள் வைணவ திருக்கோவில் சுற்றுலா - தஞ்சாவூர்
ஓட்டல் தமிழ்நாடு, தஞ்சாவூரிலிருந்து புறப்பட்டு. சாபவிமோசன பெருமாள் திருக்கோவில், திருகண்டியூர் - அருள்மிகு சாரங்கபாணி பெருமாள் திருக்கோவில், கும்பகோணம் அருள்மிகு உப்பிலியப்பன் பெருமாள் திருக்கோவில், திருநாகேஸ்வரம் அருள்மிகு சீனிவாச பெருமாள் திருக்கோவில், நாச்சியார் கோவில் - அருள்மிகு சாரநாத பெருமாள் திருக்கோவில், திருச்சேறை - அருள்மிகு இராஜகோபாலசுவாமி திருக்கோவில், மன்னார்குடி அருள்மிகு கோதண்டராமர் திருக்கோவில், வடுவூர் ஆகிய திருக்கோவில்களை கண்டு தரிசனம் செய்து வரும் வகையில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இச்சுற்றுலாவிற்கான கட்டணம் ரூ.1400/- மேலும், மதிய உணவு. கோவில்களின் பிரசாதம் மற்றும் சிறப்பு விரைவு தரிசனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இச்சுற்றுலாக்களில் பயணிக்கும் அனைவருக்கும் மதிய உணவு, அனைத்து கோவில்களின் பிரசாதம் மற்றும் சிறப்பு விரைவு தரிசனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே சுற்றுலா பயணிகள், ஆன்மீக அன்பர்கள் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேற்கண்ட இந்த சுற்றுலாக்களுக்கு Mww.ttdconline.com என்ற இணையத்தில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு 180042531111, 044-
25333333, 044-25333444 என்ற தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ