)
puthumai pen thittam : திருச்சிராப்பள்ளி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி)-யின் 12-வது பட்டமளிப்பு விழா 28 ஆம் தேதி நடந்தது. இதில், உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் பங்கேற்று மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கி விழாப் பேருரையாற்றினார். அப்போது,புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் 7 லட்சம் கல்லூரி மாணவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருவதாக கூறினார். இதுதவிர தமிழ்நாடு அரசின் இன்னும் பிற திட்டங்களின் அப்டேட்டுகளையும் அமைச்சர் விளக்கமாக கூறினார்.
திருச்சிராப்பள்ளி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) 12-வது பட்டமளிப்பு விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் அவர்கள் தெரிவித்ததாவது: தமிழ்நாடு அரசின் நலத்திட்டத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் திறன் பயிற்சி பெறும் 1174 மாணாக்கர்களும், 1483 முதல் தலைமுறை பட்டதாரிகளும், 1619 BC, MBC கல்வி உதவித்தொகை பெறும் மாணவ மாணவிகளும், 1655 SC, ST கல்வி உதவித்தொகை பெறும் மாணவ, மாணவிகளும், தமிழ்வழியில் பயின்று ரூ.900 உதவித்தொகை பெறும் 3137 மாணவிகளும், புதுமைப்பெண் திட்டத்தில் 980 மாணவிகளும், தமிழ்ப்புதல்வன் திட்டத்தில் 988 மாணவர்களும், மாபெரும் தமிழ் கனவு மூலம் பயன்பெற்ற 200 மாணாக்கர்களும், தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் நீங்கள் பெற்று வருவது மிகவும் மகிழ்ச்சிக்குரியதாகும்.
இக்கல்லூரியானது தமிழ்நாடு முதல்வர் ஆராய்ச்சி நிதியாக ரூ.57.45 இலட்சம் பெற்றுள்ளது. மேலும் 266 இலட்சம் மதிப்பீட்டில் 14 புதிய வகுப்பறைகள் மற்றும் ரூ.12 இலட்சம் மதிப்பீட்டில் BCA உயிர் வேதியியல் துறைக்கு இணையதள வசதி ஆகியனவும், ரூ.95,500 மதிப்பில் மகளிர் ஓய்வறையும் மேம்படுத்தப்பட்டுள்ளது.
அடுப்பு ஊதும் பெண்ணுக்கு படிப்பு எதற்கு? என்ற காலம் போய்விட்டது. சட்டங்கள் செய்யவும், பட்டங்கள் ஆளவும் இன்று பாரினில் பெண்கள் வந்துவிட்டனர். இதற்கு யார் காரணம்? தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், முத்தமிழ் அறிஞர் கலைஞருமே இந்தப் பெண் விடுதலை மற்றும் உயர்வுக்கு காரணமாவர். குடும்பத்தையே பல்கலைக்கழகமாக நடத்தும் திறமை பெற்ற பெண்ணால் பொது வாழ்விலும் சமுதாயத்திலும் வெற்றி மேல் வெற்றிகளை குவிக்க முடியும் என்பதற்கு இக்கல்லூரியில் முதுநிலை பட்டம் பெற்றுள்ள மாணவியர்களே எடுத்துக்காட்டாகும்.
இக்கல்லூரியில் முதல் தலைமுறை பட்டதாரிகளாக 1,483 மாணாக்கர்கள் பயின்றுள்ளது பெருமைக்குரியது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் பெண்கள் உயர்கல்வி பெற எந்த தடையும் இருக்கக்கூடாது என்பதற்காகவே புதுமைப்பெண்" திட்டத்தினை செயல்படுத்தியுள்ளார்கள். இதுவரை இத்திட்டத்தின் கீழ் சுமார் 7 இலட்சம் மாணவியர்கள் பயன் பெற்றுள்ளனர்.
மாணாக்கர்கள் படித்து முடித்தவுடன் வேலை வாய்ப்பினைப் பெறவும் தொழில் முனைவோராக திகழவும் நான் முதல்வன்” என்ற முத்தான திட்டத்தினையும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் செயல்படுத்தி வருகிறார்கள். இதன் மூலம் மாணாக்கர்கள் படிக்கும்போதே பல்வேறு திறன்களை பெற்றிட பல்வேறு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. வருடத்திற்கு 10 இலட்சம் மாணாக்கர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கோடு தொடங்கப்பட்டு, தற்போது மூன்று ஆண்டுகளில் மட்டும் 41 இலட்சம் மாணாக்கர்கள் இத்திட்டத்தின் மூலம் திறன்மேம்பாட்டுப் பயிற்சி பெற்றுள்ளனர்.
இன்று நடைபெற்ற இந்த பட்டமளிப்பு விழாவில் 411 மாணவர்கள், 208 மாணவியர் என மொத்தம் 619 மாணாக்கர்களுக்கு இளநிலை பட்டமும், 112 மாணவர், 112 மாணவியர் என மொத்தம் 224 மாணாக்கர்களுக்கு முதுநிலை பட்டமும் வழங்கப்பட்டுள்ளது. பட்டங்களை பெற்ற மாணாக்கர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மாணாக்கர்கள் "நான் முதல்வன்" உள்ளிட்ட தமிழ்நாடு அரசின் பல்வேறு சிறப்புத் திட்டங்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். "நான் முதல்வன்" திட்டம் எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையைத் தரும். அதைத்தான் நம் மாணவர்களிடம் விதைத்திட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள் எனத் தெரிவித்தார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ