)
Railway Police Saves Kid : குழந்தையின் தொண்டையில் சிக்கிய மிட்டாயை துரிதமாக செயல்பட்டு வெளியே எடுத்து உயிரைக் காப்பாற்றிய ரயில்வே காவலர்களின் செயல் பாராட்டுகளை பெற்று வருகிறது.
மேட்டுப்பாளையம் – போத்தனூர் இடையேயான ரயிலில் ஒரு பெண் அவரது 2 வயது மகனுடன் பயணம் செய்துள்ளார். அப்போது அந்த குழந்தை மிட்டாய் சாப்பிட்டு கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக அதனை விழுங்கியதால் மிட்டாய் தொண்டையில் சிக்கியுள்ளது. அதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயக்கம் அடையும் நிலைக்கு குழந்தை சென்றுள்ளான். மேலும் குழந்தைக்கு மூக்கில் இருந்து ரத்தம் வந்துள்ளது. அதனை பார்த்து அதிர்ச்சியடைந்த தாய் அலறி அழுதுள்ளார்.
இந்நிலையில் அதே ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த கோயம்புத்தூர் பிரிவு ரயில்வே பாதுகாப்பு படை காவலர்கள் துரிதமாக செயல்பட்டு மிட்டாயை குழந்தையின் தொண்டையில் இருந்து வெளியே எடுத்தனர். பின்னர் ரயில் கோவை வந்தடைந்ததும் குழந்தையை உடல் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுவன் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து துரிதமாக செயல்பட்டு சிறுவனின் உயிரை காப்பாற்றிய ரயில்வே போலிசாரின் செயல் அனைவராலும் வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது.
இதே போல, அனைத்து ரெயில்வே ஊழியர்களும் சீக்கிரமாக யோசித்து, உயிர்களை காப்பாற்ற வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ