Tn Weather Update: தமிழகத்தில் கடந்த 10 நாட்களாகவே டித்வா புயல் காரணமாக நல்ல மழை பெய்து வந்தது. குறிப்பாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் நல்ல மழை அளவே பதிவாகி இருக்கிறது. ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்) 9 செ.மீ. மண்டலம் 15 ஒக்கியம் துரைபாக்கம் (சென்னை), VIT சென்னை AWS (செங்கல்பட்டு) தலா 7, சத்யபாமா பல்கலைக்கழகம் ARG (செங்கல்பட்டு), மண்டலம் 03 புழல் (சென்னை) தலா 6, மண்டலம் 15 சோழிங்கநல்லூர் (சென்னை), மண்டலம் 15 உத்தண்டி (சென்னை), சோழிங்கநல்லூர் (சென்னை), சோழவரம் (திருவள்ளூர்) தலா 5, கோத்தகிரி (நீலகிரி), பொன்னேரி (திருவள்ளூர்), செங்குன்றம் (திருவள்ளூர்), DSCL திருப்பாலபந்தல் (கள்ளக்குறிச்சி), பெலாந்துறை (கடலூர்) தலா 4,செ.மீ மழை பதிவாகி உள்ளது.
TN Rain Alert: இன்று முதல் 6 நாட்களுக்கு மழை
இந்த சூழலில், நேற்று முதல் வரண்ட வானிலையாக இருந்து வருகிறது. தென் மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், அடுத்த 6 நாட்களுக்கு தமிழகத்தில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (06-12-2025) தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை 07-12-2025 முதல் 11-12-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
Chennai Weather Today: சென்னையில் வானிலை எப்படி?
சென்னையை பொறுத்தவரையில் இன்று (06-12-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
Rain Aert For 8 Districts: இன்று காலை 10 மணி வரைக்கான மழை அறிவிப்பு
இன்று காலை 10 மணி வரை கோயம்புத்தூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம்,தேனி, நீலகிரி, திருவாரூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் இடி, மின்னலுடம் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க: இன்றைய ராசிபலன்: இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட நாள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









