Rain Alert: தமிழகத்தில் அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்தது. அதிலும் வட மாவட்டங்கள், டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் நல்ல மழை பதிவானது. இதையடுத்து நவம்பர் இறுதியில் டித்வா புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. இந்த புயலானது இலங்கையில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. சுமார் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
டெல்டா வெதர்மேன் அப்டேட்
தமிழகத்தில் டெல்டா, வட மற்றும் தென் மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. இந்த சூழலில், கடந்த சில நாட்களான வறண்ட வானிலையாக காணப்படுகிறது. இந்த நிலையில், மீண்டும் நாளை முதல் மழை தொடங்க உள்ளதாக டெல்டா வெதர்மேன் ஹேம்ச்சந்தர் கூறி உள்ளார். இது தொடர்பான கணிப்பை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில், தெற்கு மத்திய வங்ககடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு நிலை நீடிக்கிறது. அடுத்த 24 மணி நேரத்தில் இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்ககடல் நோக்கி இந்த தாழ்வு நிலை நகரக்கூடும்.
Today Weather: இன்றைய வானிலை (08.12.2025)
தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் இன்று (08.12.2025) வறண்ட வானிலையே நிலவும். இன்று விவசாயிகள் அனைத்து விதமான வேளாண்மை பணிகளையும் மேற்கொள்ளலாம். பூச்சிக்கட்டுப்பாடு, களைக்கட்டுப்பாடு பணிகளை மேற்கொள்வதற்கு சிறந்த நாளாக அமையும்.
Rain Starts From Tomorrow: நாளை முதல் தொடங்கும் மழை
நாளை (09.12.2025) பிற்பகலில் காவிரி டெல்டா கடலோர பகுதிகளில் மழை துவங்கி இரவு நேரத்தில் பரவலாகும். குறிப்பாக மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் டிசம் 10,11 விட்டு விட்டு மழை பதிவாகும். ஒருசில இடங்களில் கனமழையும், கடலோரத்தின் ஒரிரு இடங்களில் மிக கனமழையும் எதிர்ப்பார்க்கப்படுவதால், வேளாண்மை பணிகளை தள்ளி வைப்பது நல்லது.
15ஆம் தேதி வரை பெரிய மழைக்கு வாய்ப்பில்லை
வடமாவாட்டங்கள், உள் மாவட்டங்களில் வேளாண்மை பணிகளை பாதிக்கும் அளவிற்கு டிசம் 15 வரை மழை வாய்ப்பு இல்லை. அனைத்து விதமான வேளாண் பணிகளையும் திட்டமிடலாம் என தெரிவித்துள்ளார்.
வானிலை ஆய்வு மையம்
வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 07-12-2025 முதல் 09-12-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
10-12-2025 முதல் 13-12-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
Chennai Weather Update: இன்றைய சென்னை வானிலை
சென்னையை பொறுத்தவரையில், நாளை (08-12-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க: டிசம்பர் இன்னும் முடியல.. உருவாகும் இன்னொரு புயல்? சென்னை மக்களே.. வெதர்மேன் அலர்ட்!
மேலும் படிக்க: Shutdown: மக்களே அலெர்ட்! நாளை திங்கட்கிழமை இந்த இடங்களில் மின்தடை இருக்கும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









