TN Weather Update: கடந்த 24 மணி நேரத்தில் கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. புதுவையில் வறண்ட வானிலை நிலவியது.
பதிவான மழை அளவு
தூத்துக்குடி விமான நிலையத்தில் அதிகபட்சமாக 7 செ. மீ மழை பதிவாகி உள்ளது. தூத்துக்குடி நகர் பகுதியில் 4 செ. மீ மழையும், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பழைய தாலுகா அலுவகம் பகுதியில் 3 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது. அதேபோல் ராமநாதபுரத்திலும் 3 செ.மீ மழை பதிவாகி உள்ளது.
காரைக்கால், தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் பகுதியில் தலா 2 செ.மீ மழை பதிவாகி உள்ளது. தூத்துக்குடி ரயில் நிலையம் ARG (தூத்துக்குடி), அய்யம்பேட்டை (தஞ்சாவூர்), சாத்தான்குளம் (தூத்துக்குடி), நன்னிலம் (திருவாரூர்), கீழ் அணைக்கட்டு (தஞ்சாவூர்), ஒட்டப்பிடாரம் (தூத்துக்குடி), குருங்குளம் (தஞ்சாவூர்), ஊத்து (திருநெல்வேலி), திருக்காட்டுப்பள்ளி (தஞ்சாவூர்), பூதலூர் (தஞ்சாவூர்), ஒரத்தநாடு (தஞ்சாவூர்), கீரனூர் (புதுக்கோட்டை), வெட்டிக்காடு (தஞ்சாவூர்), நீடாமங்கலம் (திருவாரூர்), நாங்குனேரி, நாலுமுக்கு (திருநெல்வேலி) ஆகிய பகுதிகளில் தலா 1 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது.
Chennai Meteorological Department: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
TN Rain Alert: இந்த நிலையில், மார்ச் 16 ஆம் தேதி வரை தென்தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மார்ச் 16 வரை மழை தொடரும்
இது தொடர்பாக வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று மார்ச் 11 மற்றும் நாளை மார்ச் 12, தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
நாளை மறுநாள் மார்ச் 13 ஆம் தேதி முதல் மார்ச் 16 வரை தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
மார்ச் 17 ஆம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு
24 மணி நேர அதிகபட்ச வெப்பநிலை மாறுதல்: 11-03-2026: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு.
12-03-2026 முதல் 15-03-2026 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 2° செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும்.
இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு: 11-03-2026: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டி இருக்கக்கூடும்.
12-03-2026 முதல் 15-03-2026 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
குறைந்தபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு
24 மணி நேர குறைந்தபட்ச வெப்பநிலை மாறுதல்: 11-03-2026 முதல் 15-03-2026 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு, எனினும் சற்று உயரக்கூடும்.
இயல்பு நிலையிலிருந்து குறைந்தபட்ச வெப்ப அளவின் வேறுபாடு: 11-03-2026 முதல் 15-03-2026 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டி இருக்கக்கூடும்.
Chennai Weather Latest Update: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு
இன்று (மார்ச் 11) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை (மார்ச் 12): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: NDA கூட்டணியில் தவெக? சிபிஐ மூலம் விஜய்-க்கு அழுத்தம்! அதிமுக முன்னாள் அமைச்சர் பதில்
மேலும் படிக்க: கூட்டணி உறுதியாகியும் சிக்கல்! இழுபறியில் காங்கிரஸ் - திமுக! என்ன காரணம்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









