சீமான் சொன்ன ஒரே வார்த்தை... தவெகவுக்கு தாவிய 150 நாதகவினர்... ஷாக்கான தம்பிகள்!

Tamil Nadu News: சாயல்குடி பகுதியை சார்ந்த நூற்றுக்கணக்கான நாம் தமிழர் கட்சியினர் அக்கட்சியில் இருந்து விலகி தவெகவில் இணைந்தனர். இணைந்த வேகத்தில் நாதகவின் அடையாள அட்டைகளை அந்த மேடையிலேயே வீசி எறிந்தனர்.

Written by - Sudharsan G | Last Updated : Apr 24, 2025, 04:27 PM IST
  • சீமான் பேச்சுக்கு பின் இந்த சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.
  • தவெகவில் மாற்றுக் கட்சியினர் இணையும் விழா ஏற்பாடு செய்யப்பட்டது.
  • இதில் நாதகவினர் பெரும்பாலானோர் இணைந்தனர்.
சீமான் சொன்ன ஒரே வார்த்தை... தவெகவுக்கு தாவிய 150 நாதகவினர்... ஷாக்கான தம்பிகள்!

Tamil Nadu News: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எப்போதும் நகைச்சுவையாகவும், அதிரடியாகவும் கருத்துகளை தெரிவிப்பதில் பெயர் பெற்றவர். இவர் பேச்சுகள் எப்போதும் இணையத்தில் அதிக பார்வையாளர்களை கவரும் எனலாம். அந்த வகையில், சீமான் சமீபத்தியே செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசியதும் வைரலாகியிருந்தது.

Add Zee News as a Preferred Source

Tamil Nadu News: நாதக தம்பிகளின் புலம்பல்

அதாவது,"நாம் தமிழரில் இருந்து வெளியேறுபவர்கள் வேறு கட்சிக்கு போவதற்கு பதில் தம்பி விஜய் கட்சியிலாவது போய் சேருங்க... அவன் சேர்த்துகொள்ள மாட்டான் என தெரிந்தே சொல்கிறேன்" என சீமான் பேசியிருந்தார். 

இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பகுதியில் தனியார் மகாலில் நடந்த நாம் தமிழர் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் 15க்கும் மேற்பட்ட பெண்கள், ஆண்கள் என நாதகவில் இருந்து விலகி நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். இது அப்பகுதியின் நாம் தமிழர் கட்சியினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 'எங்க அண்ணன் ஒரு பேச்சுக்கு சொன்னா, இப்படியா சாரை சாரையா போயி விஜய் கட்சியில் சேர்றது' என சில நாதக தம்பிகளின் புலம்பலை கேட்க முடிந்தது.

Tamil Nadu News: தவெகவில் இருந்த 150 பேர்

இதைத் தொடர்ந்து, சாயல்குடியில் உள்ள தனியார் திருமண மஹாலில் கடலாடி மேற்கு ஒன்றிய தமிழக வெற்றிக் கழக கட்சியின் கூட்டம் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 150 பேர் த.வெ.க.வில் இணைவதாக ஒலிபெருக்கியில் அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மேடை ஏறிய பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட செயலாளர் மன்மதன் சால்வை அணிவித்து வரவேற்றார். இதனைத்தொடர்ந்து தவெக-வில் இணைந்த பெண்கள் மற்றும் ஆண்கள் சிலர் தாங்கள் கையோடு கொண்டு வந்திருந்த நாம் தமிழர் கட்சியின் அடையாள அட்டையே மேடையில் இருந்தே வீசி சென்றனர். 

மேலும், தமிழக வெற்றிக் கழகத்தில் மாற்றுக் கட்சியினர் இணையும் நிகழ்ச்சி என அறிவிக்கப்பட்டாலும் அது என்னவோ விஜய் ரசிகர் மன்ற கூட்டம் போலவே தொண்டர்கள் நடந்து கொண்டனர் என்பது அவர்களது செயல்பாடுகளில் தெரிந்தது.

Tamil Nadu News: மன்மதனை துதி பாடிய பதாகைகள்

முன்னதாக ராமநாதபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் மன்மதனை வரவேற்று வைக்கப்பட்டிருந்த வரவேற்பு விளம்பர பதாகைகளில் பெரும்பாலும் மன்மதனை புகழ்ந்தே வாசகங்கள் இடம்பெற்று இருந்தன. மண்ணின் மைந்தர் எனவும் முகவை மாவட்டச் செல்லப் பிள்ளை எனவும் அவரை துதி பாடியே பதாகைகளில் வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. 

தவெக சார்பில் கிழக்கு மாவட்டம், மேற்கு மாவட்டம் என மாவட்டத்தை இரண்டாக பிரித்து, கிழக்கு மாவட்ட செயலாளராக 'மலர்விழி ஜெயபாலா' என்பவர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு போட்டியாக மேற்கு மாவட்ட பகுதிக்கு நியமிக்கப்பட்டுள்ள மன்மதனை ப்ரொமோட் செய்யும் வகையில் அக்கட்சி தொண்டர்கள் நடந்து கொண்டனர்.

Tamil Nadu News: பயிற்சி பட்டறைகள் தேவை

மேலும் கட்சி நிகழ்ச்சி போல் அல்லாமல் விஜய் பட ரிலீஸின் போது எவ்வாறு விசில் அடித்து கொண்டாடி மகிழ்வார்களோ அதே போன்று கட்சி கூட்டத்திலும் நடந்து கொண்டது அவர்கள் இன்னமும் ரசிக மனநிலையில் இருந்து தொண்டர்களாக மாறவில்லை என்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது.

எனவே, தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தனது தொண்டர்களுக்கு பயிற்சி பட்டறைகள் வகுப்புகள் நடத்தி அரசியல் முதிர்ச்சியுடன் நடந்துகொள்ள நடவடிக்கை எடுத்தால் மட்டுமே வருகின்ற தேர்தலில் களம் காண முடியும் என்பது அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக இருக்கிறது.

மேலும் படிக்க | நான் முதல்வன் திட்டம் விரிவாக்கம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட குட்நியூஸ்..!!

மேலும் படிக்க | புதிய ரேஷன் கார்டு விண்ணப்பத்தின் நிலையை 1 நிமிடத்தில் தெரிந்து கொள்வது எப்படி?

மேலும் படிக்க | பழனிசாமி அளித்த விருந்தை புறக்கணித்த செங்கோட்டையன்.. மீண்டும் மோதல்?
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News