திருப்பத்தூர் கோவிலில் கண்டுபிடிக்கப்பட்ட அரிய பொக்கிஷம் - தமிழ்நாடு அரசு போட்ட அதிரடி உத்தரவு

Tamil Nadu Government : திருப்பத்தூர் கோவிலில் அரிய பொக்கிஷ ஓலைச் சுவடிகளை ஆய்வு செய்து அறிக்கை அளித்த உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தின் சுவடியியல் துறைக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.   

Written by - Karthikeyan Sekar | Last Updated : Mar 21, 2025, 09:12 AM IST
  • திருப்பத்தூர் கோயிலில் கண்டுபிடிக்கப்பட்ட பொக்கிஷம்
  • பழங்கால ஓலைச்சுவடிகளை மீட்ட தமிழ்நாடு அரசு
  • இந்துசமய அறநிலையத்துறை போட்ட பரபரப்பு உத்தரவு
திருப்பத்தூர் கோவிலில் கண்டுபிடிக்கப்பட்ட அரிய பொக்கிஷம் - தமிழ்நாடு அரசு போட்ட அதிரடி உத்தரவு

Tamil Nadu Government News : திருப்பத்தூர் மாவட்டம், கொரட்டி, அருள்மிகு காளத்தீஸ்வரர் திருக்கோயிலில் அரிய பொக்கிஷ ஓலைச்சுவடிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அந்த ஓலைச்சுவடிகள் அப்போதைய ஸ்பதியால் திருடப்பட்ட நிலையில், இவற்றை மீட்டு தனிநபர் ஒருவர் பாதுகாத்து வந்தார். இதனையறிந்த தமிழ்நாடு அரசு 18 ஆம் தேதி திடீர் ஆய்வு மேற்கொண்டு, அந்த ஓலைச்சுவடிகள் எல்லாம் பெறப்பட்டு திருக்கோயில் செயல் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்த ஓலைச்சுவடிகளை ஆய்வு செய்து அறிக்கை அளித்த உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தின் சுவடியியல் துறைக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 

Add Zee News as a Preferred Source

இது தொடர்பாக இந்துசமய அறநிலையத்துறை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், திருப்பத்தூர் மாவட்டம், கொரட்டி, அருள்மிகு காளத்தீஸ்வரர் திருக்கோயிலில்
கண்டெடுக்கப்பட்ட ஓலைச்சுவடிகளை ஆய்வு செய்து அறிக்கை அளித்திட உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தின் சுவடியியல் துறைக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டுள்ளார். 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு திருப்பத்தூர் மாவட்டம் மற்றும் வட்டம், கொரட்டி, அருள்மிகு காளத்தீஸ்வரர் திருக்கோயிலில் கண்டெடுக்கப்பட்டு. தனி நபரால் பாதுகாக்கப்பட்டு தற்போது சுவாதீனம் பெறப்பட்ட ஓலைச் சுவடிகளை ஆய்வு செய்து அறிக்கை அளித்திட உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தின் சுவடியியல் துறை முதுநிலை ஆராய்ச்சியாளர் முனைவர் சு. தாமரைப்பாண்டியன தலைமையிலான குழுவினருக்கு உத்தரவிட்டார்.

நமது கலாச்சாரம், பண்பாடு மற்றும் தொன்மையின் அடையாளமாக திருக்கோயில்கள் திகழ்கின்றன. திருக்கோயில்களின் நிர்வாகம், மன்னர்கள் அளித்த கொடைகள், திருக்கோயில்களின் சொத்துகள் குறித்த விபரங்கள் போன்றவை காகித பயன்பாடு வருவதற்கு முன்பாக பனைவோலைகளே ஆவணங்களாக இருந்துள்ளன. இவ்விவரங்களை வருங்கால தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் தற்கால தமிழுக்கு மாற்றம் செய்து நூலாக்கம் செய்திட இந்து சமய அறநிலையத்துறையின் நிதியுதவியில் உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தின் சுவடியியல் துறை பேராசிரியர் முனைவர் சுதாமரைப்பாண்டியன் அவர்கள் தலைமையிலான வல்லுநர் குழுவினரால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு பொறுப்பேற்றபின், இதுவரை 979 திருக்கோயில்களில் கள ஆய்வு செய்யப்பட்டு, 31 திருக்கோயில்களிலிருந்து 212,585 ஓலைச்சுவடிகள், 22 செப்பேடுகள், 67 செப்பு பட்டயங்கள், 2 வெள்ளி ஏடுகள், ஒரு தங்க ஏடு மற்றும் 365 இலக்கிய சுவடிகள்
கண்டறியப்பட்டுள்ளன. இதில் 26.734 சுவடிகள் அறிவியல் முறைப்படி பராமரிக்கப்பட்டுள்ளதோடு, நூலாக்கம் செய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் மற்றும் வட்டம், கொரட்டி, அருள்மிகு காளத்தீஸ்வரர் கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற திருப்பணியின் போது இத்திருக்கோயிலின் இராஜகோபுரத்தில் இருந்த ஓலைச்சுவடிகள் கண்டுபிடிக்கப்பட்டு அப்போதைய ஸ்தபதியால் திருடப்பட்டுள்ளது. இவற்றை மீட்டு தனிநபர் ஒருவர் பாதுகாத்து வைத்திருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் திருப்பத்தூர் சரக ஆய்வாளரால் நேற்று (18.03.2025) மாலை திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, சுமார் 500 ஓலைகள் கொண்ட மூன்று ஓலைச்சுவடி கட்டுகளும், சுமார் 600 ஓலைகள் கொண்ட இரண்டு ஓலைச்சுவடி கட்டுகளும், புலி மற்றும் அரசன் உள்ள தனி ஓலை என ஆகமொத்தம் ஐந்து ஓலைச்சுவடி கட்டுகள் மற்றும் ஒரு ஓலை தனி ஓலை சுவாதீனம் பெறப்பட்டு திருக்கோயில் செயல் அலுவலர் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள், கண்டறியப்பட்ட ஓலைச்சுவடிகளை ஆய்வு செய்து அறிக்கை அளித்திட உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தின் சுவடியியல் துறை முதுநிலை ஆராய்ச்சியாளர் முனைவர் சு.தாமரைப்பாண்டியன் அவர்கள் தலைமையிலான வல்லுநர் குழுவினருக்கு உத்தரவிட்டார்.'

மேலும் படிக்க | சென்னையில் விருப்பம்போல் பயணம் செய்யும் மாதாந்திர பயண அட்டை பெறுவது எப்படி?

மேலும் படிக்க | இனி ரேஷன் கடைகளுக்கு போக தேவையில்லையா? வீடுகளுக்கே நேரடியாக வரும் பொருட்கள்?

மேலும் படிக்க | முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தில் ரூ.1 கோடி கடன் பெறலாம் - யாருக்கு கிடைக்கும்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

...Read More

Trending News