Ration Card : தீபாவளிப் பண்டிகை இம்மாதம், அதாவது அக்டோபர் 20 ஆம் தேதி கொண்டாடப்படுவதையொட்டி தாயுமானவர் திட்டத்தின் கீழ் ரேஷன் பொருட்களை முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்கூட்டியே கொடுக்குமாறு உணவுப் பொருள் வழங்கல் துறை உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் அக்டோபர் 5, 6 ஆம் தேதிகளில் தகுதியானவர்களுக்கு ரேஷன் பொருட்கள் வீடுகளுக்கே வந்து விநியோகம் செய்யப்படும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் அறிவித்தனர்.
அதன்படி தாயுமானவர் திட்டத்தின் கீழ் இல்லம் தேடி ரேஷன் பொருட்கள் திட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இன்று வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்குவது தொடங்கப்பட்டது. அரிசி, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன. நாளையும் தகுதியான பயனாளிகளுக்கு ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது.
ரேஷன் பொருட்கள் வாங்காதவர்கள் என்ன செய்ய வேண்டும்?
ரேஷன் கடை ஊழியர்கள் ரேஷன் பொருட்கள் வழங்க வீடுகளுக்கு வரும்போது பயனாளிகள் வீட்டில் இருக்க வேண்டும். ஒருவேளை பயனாளிகள் இல்லாமல் வீடு பூட்டியிருந்தால் ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்படாது. அதனால், உங்களுக்கு இம்மாதம் ரேஷன் பொருட்கள் கிடைக்காது என அர்த்தமில்லை. பயனாளிகள் அல்லது பயனாளிகளின் குடும்பத்தினர் ரேஷன் கடைகளுக்கு நேரடியாக சென்று இம்மாத ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்.
ரேஷன் பொருட்கள் வீடு தேடி வர விண்ணப்பிக்க முடியுமா?
ரேஷன் பொருட்கள் எல்லோருக்கும் வீடு தேடி வராது. மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியுடையவர்கள். இத்திட்டத்தில் பயன்பெற உங்கள் பகுதியில் நடக்கும் உங்களுடன் ஸ்டாலின் முகாம், பொதுவிநியோக திட்டத்தின் நுகர்வோர் குறைதீர்ப்பு முகாம், மாவட்ட ஆட்சியரின் தலைமையில் நடக்கும் குறைதீர்ப்பு முகாம்களில் இத்திட்டத்துக்காக மனு கொடுக்கலாம். அரசு அதிகாரிகள் பரிசீலித்து அனைத்து தகவல்களும் உண்மையாக இருப்பின் இல்லாம் தேடி ரேஷன் பொருட்கள் திட்டத்தின் கீழ் பயனாளியாக சேர்க்க அனுமதி கொடுப்பார்கள்.
இல்லம் தேடி ரேஷன் பொருட்கள் திட்டம்
தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் சிறப்பான திட்டங்களில் ஒன்றாக இத்திட்டமும் இடம்பிடித்துள்ளது. மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். பயனாளிகளின் வீடுகளுக்கே நேரடியாக ரேஷன் கடை ஊழியர்கள் வந்து பொருட்களை விநியோகிப்பார்கள். ஒருவேளை குறிப்பிட்ட தேதியில் ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்படவில்லை என்றால் மாற்றுத் தேதி அறிவிக்கப்பட்டு அந்த தேதியில் பொருட்கள் விநியோகம் செய்யப்படும்.
மேலும் படிக்க | ரேஷன் கார்டு அப்டேட்! அக்டோபர் 5,6 ஆம் தேதிகளில் வீடு தேடி வரும் ரேஷன்
மேலும் படிக்க | Ration Card : புதிய ரேஷன் கார்டு தனி நபர் பெறுவது எப்படி? 2 முக்கிய ஆவணங்கள் தேவை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









