ரேஷன் கார்டு கைவிரல் ரேகை பதிவு செய்ய கடைசி தேதி அறிவிப்பு!

Ration card : ரேஷன் கார்டு கைவிரல் ரேகை பதிவு செய்யாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. முழு விவரம்  

Written by - Karthikeyan Sekar | Last Updated : Sep 12, 2025, 07:56 AM IST
  • ரேஷன் கார்டு கைவிரல் ரேகை பதிவு
  • செப்டம்பர் 25 க்குள் பதிவு செய்ய வேண்டும்
  • பொதுமக்களுக்கான முக்கிய அறிவிப்பு
ரேஷன் கார்டு கைவிரல் ரேகை பதிவு செய்ய கடைசி தேதி அறிவிப்பு!

Ration card : ரேஷன் கார்டு குறைதீர் முகாம்கள் வரும் சனிக்கிழமை சென்னை, திருப்பத்தூர், நாமக்க, திருவள்ளூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நடக்கிறது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு ரேஷன் கார்டுகளில் உள்ள பிரச்சனைகளை தீர்க்க மனு கொடுக்கலாம். ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், ரேஷன் கார்டு வகை மாற்றம் உள்ளிட்டவைகளுக்கு இந்த குறைதீர் முகாம் கூட்டத்தில் தீர்வு காணப்படும். அதேநேரத்தில் ரேஷன் கார்டு கைவிரல் ரேகை பதிவு செய்யாதவர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. செப்டம்பர் 25 ஆம் தேதிக்குள் இதுவரை கைவிரல் ரேகை பதிவு செய்யாதவர்கள் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Add Zee News as a Preferred Source

திருவள்ளூர்

உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை இயக்குநர் அவர்களின் கடிதத்தில், பிரதிமாதம் இரண்டாவது சனிக்கிழமைகளில் ஒவ்வொரு வட்டங்களிலும், பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம்கள் நடத்தப்பட வேண்டும் என்ற அறிவுரைகளின்படி, குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் தொடர்பான செப்டம்பர் 2025 மாதத்திற்கான குறைதீர் முகாம் 13.09.2025 சனிக்கிழமை அன்று வட்ட அளவில், திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் நடைபெறவுள்ளது. மேற்படி வட்ட அளவில் நடைபெறும் குறைதீர் முகாமில் பொதுமக்கள் தங்கள் மின்னணு குடும்ப அட்டையில் திருத்தங்கள் மற்றும் புகைப்படம் பதிவு செய்தல் தொடர்பான விண்ணப்பங்களை உரிய அளித்து பயன்பெறுமாறு
ஆவணங்களுடன் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பயன்பெறும் முன்னுரிமை குடும்ப அட்டைகள் (PHH) மற்றும் அந்த்யோதயா அன்ன யோஜனா
(PHH-AAY) குடும்ப அட்டை அக்குடும்ப அட்டையில் உள்ள வைத்திருக்கும் குடும்ப அட்டைதாரர்கள், அனைத்து உறுப்பினர்களும் தங்களது
விரல்ரேகையை (Biometric) பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், இதுவரை விரல் ரேகையை பதிவு செய்யாதவர்கள் தாங்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகில் உள்ள நியாயவிலைக் கடைகளில் 25.09.2025-க்குள் தங்களது விரல்ரேகையை பதிவு செய்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், பெயர் திருத்தம், புதிய குடும்ப அட்டை கோருதல், கைபேசி எண் பதிவு மற்றும் பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் குறித்த புகார்களை நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019-ன்படி மேற்கொள்ள பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்கவும், குடும்ப அட்டையில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டும் பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர் நாள் முகாம் வரும் 13.09.2025--ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணிவரை நாமக்கல், இராசிபுரம், மோகனூர், சேந்தமங்கலம், கொல்லிமலை, திருச்செங்கோடு, பரமத்திவேலூர் மற்றும் குமாரபாளையம் வட்டாட்சியர் அலுவலகங்களில் உள்ள வட்ட வழங்கல் பிரிவில் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.

எனவே, பொதுமக்கள் மேற்படி குறைதீர்க்கும் நாள் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019 தொடர்பான தங்கள் குறைகளை தீர்வு செய்து கொள்வதற்கு இம்முகாமினைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

கரூர் 

கரூர் மாவட்டத்தில் பொது விநியோகத்திட்டத்தில் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், பெயர் திருத்தம், புதிய குடும்ப அட்டை கோருதல், கைபேசி எண் பதிவு மற்றும் பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தரம் குறித்த புகார்கள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார்களை நுகர்வோர் பாதுகாப்புச்சட்டம் 2013-இன் படி மேற்கொள்ள பொது விநியோகத்திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்க குறை நிவர்த்தி செய்யும் பொருட்டு பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர் நாள் கூட்டம் 13.09.2025 ஆம் தேதி காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை நடக்க உள்ளது. 

கரூர், அரவக்குறிச்சி, மண்மங்கலம், புகளூர், குளித்தலை, கிருஷ்ணராயபுரம் மற்றும் கடவூர் வட்ட வழங்கல் அலுவலகங்களில் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது. எனவே, பொதுமக்கள் மேற்படி குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புச்சட்டம் -2013 தொடர்பான தங்களது குறைகளை தீர்வு செய்து கொள்வதற்கு இக்கூட்டத்தினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் படிக்க | புதிய ரேஷன் கார்டு, நகல் குடும்ப அட்டை விண்ணப்பிக்க நல்ல வாய்ப்பு!

மேலும் படிக்க | கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வாங்க முடியாதா? காத்திருக்கும் பெண்கள்

மேலும் படிக்க | அரசு வேலைவாய்ப்பு : மகளிர் சுய உதவிக் குழு பெண்களுக்கான முக்கிய அறிவிப்பு

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

...Read More

Trending News