நாளை ரேஷன் கார்டு குறைதீர் முகாம் - எந்தெந்த மாவட்டங்களில் நடக்கிறது தெரியுமா?

Ration Card, Grievance Camp, Tamil Nadu : சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் ரேஷன் கார்டு குறைதீர் முகாம் நாளை நடக்கிறது. இதன் முழு விவரத்தையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள். 

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 13, 2025, 01:33 PM IST
  • ரேஷன் கார்டு குறைதீர் முகாம்
  • சென்னையில் நாளை நடக்கிறது
  • திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடக்கும்
நாளை ரேஷன் கார்டு குறைதீர் முகாம் - எந்தெந்த மாவட்டங்களில் நடக்கிறது தெரியுமா?

Ration Card, Grievance Camp, Tamil Nadu : சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் ரேஷன் கார்டு குறைதீர் முகாம் நாளை நடக்கிறது. இதன் முழு விவரத்தையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள். 

சென்னை

சென்னையிலுள்ள 19 மண்டலங்களில் வருகின்ற 14.06.2025 அன்று பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடக்க உள்ளது. பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை குடும்ப அட்டைதாரர்கள் எளிதில் பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும், சென்னையை பொறுத்தவரை மண்டல அலுவலகங்களிலும் மக்கள் குறைதீர் முகாம் பிரதி மாதமும் இரண்டாம் சனிக்கிழமை நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி ஜீன் 2025 மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் 14.06.2025 அன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறவுள்ளது.

குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு / மாற்றம் செய்தல் மற்றும் அங்கீகாரச்சான்று உள்ளிட்ட பொது விநியோகத் திட்டம் தொடர்பான சேவைகள் மேற்கொள்ளப்படும். மேலும், பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இம்முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சென்னையிலுள்ள 19 மண்டல அலுவலகப் பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இச்சேவையினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

காஞ்சிபுரம் 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் எதிர்வரும் 14.06.2025 (சனிக்கிழமை) அன்று காலை 10.00 மணிக்கு பொது விநியோகத்திட்ட குறை தீர் முகாம்கள் நடைபெற
உள்ளன. காஞ்சிபுரம் வட்டத்தில் மேல்ஒட்டிவாக்கம், உத்திரமேரூர் வட்டத்தில் சாலவாக்கம், வாலாஜாபாத் வட்டத்தில் ஊத்துக்காடு, திருப்பெரும்புதூர் வட்டத்தில் காரந்தாங்கல், குன்றத்தூர் வட்டத்தில் செரப்பணஞ்சேரி ஆகிய கிராமங்களில் பொது விநியோகத்திட்ட குறை தீர் முகாம்கள் நடைபெற உள்ளன.

மேற்கண்ட கிராமங்களில் வசித்துவரும் பொது மக்கள் தங்கள் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை / நகல் குடும்ப அட்டை, கைப்பேசி பதிவு / மாற்றம் செய்தலுக்கான கோரிக்கை மனுக்களை அளிக்கலாம். மேற்படி மனுக்கள் மீது உடன் தீர்வு காணப்படும். மேலும், மூன்றாம் பாலினத்தவர், பழங்குடியினர் மற்றும் நரிக்குறவர் சமுதாயத்தினை சேர்ந்தவர்கள் ஏதும் விடுபட்டிருப்பின் அவர்களும் புதிய குடும்ப அட்டைகள் பெறுவதற்குரிய மனுக்களை அளிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர்

உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை இயக்குநர் அவர்களின் கடிதத்தில், பிரதிமாதம் இரண்டாவது சனிக்கிழமைகளில் ஒவ்வொரு வட்டங்களிலும் பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம்கள் நடத்தப்பட வேண்டும் என்ற அறிவுரைகளின்படி, குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் தொடர்பான 14.06.2025 சனிக்கிழமை அன்று வட்ட அளவில், திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் நடைபெறவுள்ளது. மேற்படி வட்ட அளவில் நடைபெறும் குறைதீர் முகாமில் பொதுமக்கள் தங்கள் மின்னணு குடும்ப அட்டையில் திருத்தங்கள் மற்றும் புகைப்படம் பதிவு செய்தல் தொடர்பான ஜூன் 2025 மாதத்திற்கான குறைதீர் முகாமில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பங்களை அளித்து பயன்பெறுமாறு தெரிவிக்கப்படுகிறது.

மேலும் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பயன்பெறும் முன்னுரிமை குடும்ப அட்டைகள் (PHH) மற்றும் அந்த்யோதயா அன்ன யோஜனா (PHH-AAY) குடும்ப அட்டை வைத்திருக்கும் குடும்ப அட்டைதாரர்கள், அக்குடும்ப அட்டையில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் தங்களது விரல்ரேகையை (Biometric) பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் இதுவரை விரல் ரேகையை பதிவு செய்யாதவர்கள் தாங்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகில் உள்ள நியாயவிலைக் கடைகளில் 27/06/2025-க்குள் தங்களது விரல்ரேகையை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

திண்டுக்கல்

பொது விநியோகத்திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்குவதன் பொருட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலக வளாகங்களில் செயல்பட்டு வரும் தனி வட்டாட்சியர்(கு.பொ.)/வட்ட வழங்கல் அலுவலகங்களில் 14.06.2025 (சனிக்கிழமை) அன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை பொது விநியோகத்திட்டம் தொடர்பாக சிறப்பு குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது.

இந்த முகாம்களில், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை / நகல் அட்டை கோரிக்கை, கைபேசி எண் பதிவு / மாற்றம் செய்தல் தொடர்பாக மனு அளிக்கலாம். மேலும், பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார் மனு அளிக்கலாம். தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்து புகார் மனு அளிக்கலாம்.

எனவே, பொதுமக்கள் அனைவரும் இந்த முகாம்களில் கலந்து கொண்டு மேற்காணும் கோரிக்கை தொடர்பான மனுக்களை அளித்து தீர்வு கண்டு பயன்பெறலாம். மேலும், PHH மற்றும் AAY குடும்ப அட்டையிலுள்ள குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் நியாய விலைக்கடைகளுக்குச் சென்று நியாய விலைக்கடை பணியாளர்களிடம் கைரேகை பதிவு இயந்திரத்தில் தங்கள் கைரேகையை பதிவு செய்திட வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர்

ஜூன் 2025 மாதத்திற்கான பொதுவிநியோகத்திட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், எதிர்வரும் 14.06.2025 சனிக்கிழமை அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரைதஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களிலும் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்களுக்கு குறைகள் ஏதும் இருப்பின் தொடர்புடைய வட்ட வழங்கல் அலுவலகத்தில் வட்ட வழங்கல் அலுவலரிடம் மனுக்கள் அளித்து பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி

பொதுவிநியோகத்திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்குவதன் பொருட்டு ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமையன்று திருநெல்வேலி மாவட்டத்தின் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் பொதுவிநியோகத்திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்படுகிறது. அதன்படி ஜூன் 2025 மாதம் இரண்டாவது சனிக்கிழமை 14.06.2025 அன்று நடைபெறும் இக்குறைதீர் முகாமில் கீழ்கண்ட சேவைகளை மக்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

1. புதிதாக குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை / நகல்அட்டை கோரி விண்ணப்பித்தல்,
2. குடும்ப அட்டையில் கைபேசி எண் பதிவு / மாற்றம் செய்தல்.
3. பொதுவிநியோகத்திட்ட கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தரம் குறித்து புகார் அளித்தல்.
4. தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார் அளித்தல்.

குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல் முகவரி மாற்றம் மற்றும் புதிய குடும்ப அட்டை / நகல் குடும்ப அட்டை பெற விண்ணப்பிக்கச் செல்லும் பயனாளர் உரிய ஆவணங்களான ஆதார் அட்டை, பிறப்பு / இறப்புச் சான்று குடியிருப்பு முகவரிக்கு ஆதாரமான ஆவணங்கள் ஆகியவற்றினை எடுத்து செல்ல வேண்டும். கைபேசி எண் பதிவு / மாற்றம் செய்வதற்கு ஏதுவாக சம்பந்தப்பட்ட கைபேசியினை கொண்டு செல்ல வேண்டும்.

மேற்படி முகாம் மற்றும் பொதுவிநியோகத்திட்ட செயல்பாடுகள் குறித்த புகார்களுக்கு திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக பொது விநியோகத்திட்ட கட்டுப்பாட்டு அறை எண்: 9342471314 மற்றும் சென்னை உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அலுவலக கட்டணமில்லா தொலைபேசி எண்கள்.1967 மற்றும் 18004255901 ஆகிய எண்கள் வாயிலாக தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கரூர் 

கரூர் மாவட்டத்தில் பொது விநியோகத்திட்டத்தில் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், பெயர் திருத்தம், புதிய குடும்ப அட்டை கோருதல், கைபேசி எண் பதிவு மற்றும் பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தரம் குறித்த புகார்கள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார்களை நுகர்வோர் பாதுகாப்புச்சட்டம் 2013-இன் படி மேற்கொள்ள பொது விநியோகத்திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்க குறை நிவர்த்தி செய்யும் பொருட்டு பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர் நாள் கூட்டம் 14.06.2025 ஆம் தேதி காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை கரூர், அரவக்குறிச்சி, மண்மங்கலம், புகளூர், குளித்தலை, கிருஷ்ணராயபுரம் மற்றும் கடவூர் வட்ட வழங்கல் அலுவலக சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது.

எனவே, பொதுமக்கள் மேற்படி குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புச்சட்டம் -2013 தொடர்பான தங்களது குறைகளை தீர்வு செய்து கொள்வதற்கு இக்கூட்டத்தினை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்

இதேபோல் திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் ரேஷன் கார்டு குறைதீர் முகாம் நடக்க உள்ளது. அந்தந்த மாவட்டங்களில் உள்ள தாலுகா அலுவலகத்துக்கு சென்று கூடுதல் தகவல்களை கேட்டுத் தெரிந்து கொள்ளவும். 

மேலும் படிக்க | தமிழ்நாடு அரசு வழங்கும் இலவச தையல் இயந்திரம் - உடனே விண்ணப்பிக்கவும்

மேலும் படிக்க | நான் முதல்வன் திட்டம் : சென்னை மக்களுக்கு தமிழ்நாடு அரசு வெளியிட்ட குட்நியூஸ்...!

மேலும் படிக்க | தமிழ்நாடு முழுவதும் கோவில்களில் பணியாற்ற விருப்பமா? தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News