)
Reason Behind Cuddalore School Van Train Accident : கடலூர் மாவட்டம் செம்மகுப்பம் பகுதியில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் பள்ளி மாணவர்கள் 3 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து நடக்க யார் காரணம் என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
ரெயில் மீது வேன் மோதி விபத்து:
ஜூலை 8ஆம் தேதியான இன்று காலை 8 மணி அளவில் பள்ளி வேன் கடலூர் அருகே செம்மகுப்பம் பகுதியில் ரயில்வே கேட்டை கடக்க முயன்றுள்ளது. அப்போது விழுப்புரம் - மயிலாடுதுறை பயணிகள் ரயில் பள்ளி வேனில் மோதியது. இதில் பள்ளி வேன் தூக்கி வீசப்பட்டு சுக்கு நூறாக நொறுங்கியது. இந்த விபத்து தமிழகத்தையே உலுக்கியுள்ளது. விபத்து தொடர்பாக கேட் கீப்ப்ர் பங்கஜ் சர்மா கைது செய்யப்பட்டுள்ளார். உத்தர பிரதேசத்தை சேர்ந்த பங்கஜ் சர்மாவுக்கு தமிழ் தெரியாது என்பதும் தற்போது சர்ச்சையாகி உள்ளது. பங்கஜ் சர்மா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
வாக்குமூலங்கள்..
ரயில்வே கேட் திறந்து இருந்ததால் பள்ளி வேன் தண்டவாளத்தை கடந்து சென்ற போது விபத்து நடந்ததாகவும் இந்த விபத்துக்கு கேட் கீப்பரின் அலட்சியம் தான் காரணம் எனவும் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பார் தெரிவித்துள்ளார். கேட் கீப்பர் போலீஸாரிடம் பேசுகையில், வேன் டிரைவர்தான் ஹாரன் அடித்து கேட்டை திறந்து விட சொன்னதாக கூறினார். ஆனால், விபத்தில் சிக்கிய வேன் டிரைவரோ, தான் அப்படி சொல்லவே இல்லை என்று கூறியிருக்கிறார். விபத்தில் சிக்கி உயிர்த்தப்பிய இன்னொரு மாணவரோ வேன் அந்த இடத்தை கடக்கும் போதும் விபத்து நிகழ்ந்த போதும் கேட் கீப்பர் அங்கு இல்லவே இல்லை என்று கூறியிருக்கிறார். இந்த விபத்து தொடர்பாக ரயில்வே அதிகாரிகளும் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே ரயில் விபத்துக்கு மாவட்ட ஆட்சியரும் ஒரு காரணம் என ரயில்வே தரப்பு தெரிவித்துள்ளது. செம்மங்குப்பத்தில் சுரங்கப்பாதை அமைக்க ஒரு வருடமாக ஆட்சியர் அனுமதி கொடுக்கவில்லை என்று தெற்கு ரயில்வே கூறியுள்ளது. சுரங்கப்பாதை அமைக்க ரயில்வே தரப்பில் நிதி ஒதுக்கீடு செய்தும் அனுமதி வரவில்லை என்றும் தெற்கு ரயில்வே குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆதித்யா செந்தில் குமார் விளக்கமளித்துள்ளார். ரயில்வே அளித்த அறிக்கையை முழுமையாக பார்த்துவிட்டு விளக்கமளிக்கப்படும் எனவும் கடலூர் மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.
அதோடு அதிக ரயில் போக்குவரத்து உள்ள பகுதிகளில் இண்டர் லாக்கிங் தொழில்நுட்பம் பயன்பாட்டில் இருக்கும். இண்டர் லாக்கிங் முறையில் ரயில்வே கேட் திறந்திருந்தால் இரு புறமும் ரயில்களுக்கு சிக்னல் சிவப்பில் இருக்கும். இதனால் ரயிலை ரயில்வே கேட் வரும் முன்னே ரயில் ஓட்டுநர் நிறுத்திவிடுவார். ஆனால் செம்மங்குப்பம் பகுதியில் இண்டர் லாக்கிங் தொழில்நுட்பம் இல்லை என்று கூறப்படுகிறது. இதற்கு ரயில்வே துறை தான் பொருப்பு என்று பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
யார் காரணம்?
கேட் திறந்திருக்கும்போது அந்தப் பாதையில் வரும் ரயிலுக்கு சிக்னல் அனுமதி கிடைத்திருக்கக் கூடாது. அப்படியிருக்க, கேட் திறந்த நிலையில் ரயில் எப்படி வந்தது? இந்த விபத்துக்கு முழுமையான காரணம் சிக்னல் அமைப்பில் ஏற்பட்ட கோளாறு மட்டுமே என்று சமூக வலைதளத்தில் ஒருவர் எழுதியுள்ளார். சிக்னல் தொழில்நுட்பம் சரியாக இயங்கவில்லை. ரயில்வே துறையின் இந்த அலட்சியத்தையும் கவனக்குறைவையும் மறைக்க, கேட் கீப்பர் மற்றும் வேன் டிரைவர் மீது பழி சுமத்தி, அவர்களைப் பலிகடாவாக்க முயற்சிக்கின்றனர் என்றும், இது ஒன்றிய ரயில்வே நிர்வாகத்தின் பொறுப்பற்ற தன்மையையும் தெளிவாக வெளிப்படுத்துகிறது என்றும் நெட்டிசன்கள் எழுதி வருகின்றனர்.
ரயில்வே அமைச்சகத்தின் தரவுகளின்படி, கடந்த 10 ஆண்டுகளில் நடந்த 638 ரயில் விபத்துகளில் 748 பேர் பலியாகியுள்ளனர். இவற்றுக்கு மனித தவறுகள், சிக்னல் கோளாறுகள், பராமரிப்பு குறைபாடுகள் மற்றும் ஆளில்லாத கிராசிங்குகள் முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன, இவை அனைத்தும் ரயில்வே துறையின் தொடர்ச்சியான அலட்சியத்தை பிரதிபலிப்பதாக கூறப்படுகிறது. ரயில் விபத்துகளை தடுக்க ஒவ்வொரு முறையும் விபத்து நடக்கும் போது மட்டும் பேசிவிட்டு, அதன்பிறகு அமைதியாகும் அதிகாரிகளே விபத்துகள் தொடர காரணமாக உள்ளனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ