)
Heavy Rain In Nilgris: நீலகிரிக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் அரக்கோணத்திலிருந்து 25 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் உதகை வந்தடைந்தனர். இந்த மாவட்டத்தில் அதி கன மழையால் ஏற்படும் பாதிப்புகளை உடனடியாக சீரமைக்க தயார் நிலையில் உள்ள தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டத்திற்கு இன்று மிக அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்ட முழுவதும் 283 இடங்கள் அபாயகரமாக கண்டறியப்பட்டுள்ளன.
42 மண்டல குழுக்கள் 24 மணி நேரமும் மழை பாதிப்புகளை கண்காணித்து சீரமைக்கும் பணிகளில் ஈடுபடும் வகையில் தயாராக உள்ளனர்.
மாவட்டத்தில் மிக அதி கன மழை எச்சரிக்கையால் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளன. ஆனால் குறிப்பாக கனமழை பாதிப்புகளை சரி செய்ய அரக்கோணத்தில் இருந்து 25 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் நேற்று புறப்பட்ட நிலையில் இன்று அவர்கள் உதகை வந்தடைந்தனர்.
கனரக லாரியில் அனைத்து மீட்பு உபகரணங்களுடன் உதகையில் உள்ள தனியார் மண்டபம் வந்தடைந்த தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மாவட்டம் முழுவதும் மலை பாதிப்புகள் ஏற்படும் பகுதிகளில் தகவல் பெறப்பட்டு தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் அந்தந்த பகுதிகளுக்கு செல்லும் வகையில் தயார் நிலையில் உள்ளனர்.
இதனிடையே இன்றைய தினம் ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டதால் அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் அனைத்து சுற்றுலா தளங்களும் மூடப்படுவதாகவும் அறிவிப்புகள் வெளியாகி இருந்தது. அதனுடன் கர்நாடகா பூங்கா இன்று காலை முதல் திறக்கப்பட்ட நிலையில் சுற்றுலா பயணிகளின் வருகை இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் படகு இல்லம் இன்று மூடப்பட்டுள்ளது. பல்வேறு சுற்றுலா தளங்களும் மூடப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ