வேலூர் மாவட்டம் அரக்கோணம் தாலுகாவை சேர்ந்த கிராமத்தில் உள்ள மேய்கால் புறம்போக்கு நிலத்தில், அனுமதி பெறாமல் அம்பேத்கர் சிலை வைக்கப்பட்டதை அடுத்து, சிலையை அகற்ற தாசில்தார் உத்தரவு பிறப்பித்தார் . இதை எதிர்த்து அந்த கிராமத்தை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையில், முக்கிய தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகம் முழுவதும் பொது இடங்கள், நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட இடங்களில் உள்ள சிலைகளை 3 மாதங்களில் அகற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொது இடங்கள்,சாலைகளில் சிலைகள் வைப்பதை கட்டுக்குள் கொண்டு வர வேண்டிய அவசியம் உள்ளதையும் நீதிபதி குறிப்பிட்டார்.


ALSO READ | ISIS-க்கு ஆதரவு; மதுரையை சேர்ந்தவர் மீது NIA குற்றப் பத்திரிக்கை தாக்கல்..!!


மேலும், நெடுஞ்சாலைகளில் சிலைகள் வைக்க கூடாது என உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் சிலையை அகற்றியதில் எந்த தவறும் இல்லை என்றும், சட்ட விதிகள் மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை பின்பற்ற வேண்டியது அவசியம் என்றும் நீதிபதி தெரித்தார். 


தமிழகம் முழுவதும் பொது இடங்கள், நெடுஞ்சாலைகள், அரசு நிலங்கள், புறம்போக்கு நிலங்கள் ஆகியவற்றில் உள்ள சிலைகளை 3 மாதங்களில் அடையாளம் கண்டு அதனை அகற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டார். 


மேலும், வரும் காலத்தில், பொதுமக்கள் உரிமைகளை பாதிக்காத வகையில் சிலைகள் மற்றும் கட்டுமானங்களை அமைக்க அனுமதி வழங்குவது தொடர்பாக விரிவான விதி முறைகளை வகுக்கவும் அரசுக்கு உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் தலைவர் பூங்கா என ஒன்றைஒ உருவாக்கி சாலைகள் மற்றும் பொது இடங்களில் இருக்கும் தலைவர் சிலைகளை பூங்காவில் வைத்து பாரமரிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, சிலைகள் பராமரிப்பதற்கான செலவை சிலை வைக்க அனுமதி பெற்றவர்களிடம் வசூலிக்க வேண்டும், பராமரிப்பு செலவை தர மறுப்பவர்கள் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு இந்த உத்தரவுகளை அமல்படுத்தியது தொடர்பாக 6 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டார். 


ALSO READ | விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு புத்துயிர் அளிக்கும் முயற்சி முறியடிப்பு


அரசியல் கட்சிகள், மதம், சாதி,மொழி சார்ந்த அமைப்புகள் தங்கள் விருப்பப்படி சிலைகளை அமைப்பதாக குற்றம் சாட்டிய நீதிபதி, தலைவர்கள் சிலைகளை வைக்க அனைவருக்கும் உரிமை உண்டு அதே சமயம் பொது இடங்களில் சிலைகளை வைக்கக்கூடாது என தெரிவித்தார். மேலும், சமுதாயத்திற்காக தியாகம் செய்த தலைவர்களை எந்த ஒரு தருணத்திலும் சாதி ரீதியாக அடையாளப்படுத்த கூடாது என்றும் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார். 


பல இடங்களில் சிலைகள் சேதப்படுத்தப்படுத்துதல், அவமரியாதை செய்தல் போன்ற செயல்களால் வன்முறை வெடிப்பதாகவும், இதை அனுமதிக்க கூடாது என்றும் நீதிபதி தெரித்தார்.


Read Also | 42 லட்சம் மதிப்புள்ள தங்க பேஸ்ட் மலக்குடலில் வைத்து கடத்தல்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR