தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்திருக்க அவசியமில்லை: ஆர்.பி.ஐ அதிகாரிகள் வாக்குவாதம்

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்திருக்க அவசியமில்லை என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக ஆர் பிஐ அதிகாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் .

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 26, 2022, 01:49 PM IST
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்திருக்க அவசியமில்லை: ஆர்.பி.ஐ அதிகாரிகள் வாக்குவாதம்  title=

சென்னை: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்திருக்க அவசியமில்லை என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக ஆர் பிஐ அதிகாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் இன்று காலை குடியரசு தின விழா (Republic Day) நடைபெற்றது. இந்த விழாவில் ரிசர்வ் வங்கி மண்டல இயக்குனர் எஸ்.எம்.என்.சுவாமி தேசியக்கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார்.

 இதன்பிறகு நிறைவாக தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்டது. ஆனால் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது அங்கிருந்த பலர் எழுந்து நின்று மரியாதை செலுத்தவில்லை.

 இதுதொடர்பாக நிகழ்ச்சி முடிந்த பிறகு ஒரு சிலர் ஏன் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்கவில்லை என்று கேள்வி எழுப்பினர். 

ALSO READ | 10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி மாதத்தில் பள்ளிகளை திறக்கப் பரிந்துரை: அன்பில் மகேஷ்

இதற்கு பதிலளித்த ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க வேண்டிய அவசியம் இல்லை என்று உயர் நீதிமன்றம் (High Court) உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தனர். இதனால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது.

சிறிது நேரத்திற்கு பிறகு ரிசர்வ் வங்கி உயரதிகாரிகள் இதில் தலையிட்டு தமிழ்த்தாய் வாழ்த்திற்கு எழுந்து நிற்பது உறுதி செய்யப்படும் என்று உத்தரவாதம் அளித்தனர்.  இதன் பிறகு அங்கிருந்தவர்கள் கலைந்து சென்றனர்.

குடியரசு தின விழா நிகழ்வில் இப்படி ஒரு சம்பவம் நடந்தது அங்கு குழுமியிருந்த பலருக்கு ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் அளித்தது.

தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும்போது, மாற்றுத் திறனாளி, கர்ப்பிணித் தாய்மார்கள் தவிர அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என்ற விதிமுறைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், உரிய புகார் அளிக்கும் பட்சத்தில், வீடியோ, ஆதாரங்களை ஆய்வு செய்து, தமிழக அரசு ஆணைப்படி விசாரணை நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.

 இது தொடர்பாக சட்டபூர்வமான ஆலோசனை கேட்கப்பட்டுள்ளது என சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

ALSO READ | உண்ணாவிரத போராட்டத்தின் இடையே பேட்டி அளித்த பாஜக தலைவர் அண்ணாமலை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News