சேலத்தில் இருந்து சென்னை ரிசர்வ் வங்கிக்கு ரெயிலில் கொண்டுவரப்பட்ட பணம் கொள்ளையடிக்கபட்டு உள்ளது. சேலம் -சென்னை ரெயிலின் மேற்கூரையை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை காட்டி உள்ளனர்.  ரூ342 கோடி பழைய ரூபாய் நோட்டுகள் ஒரு ரெயில் பெட்டியில் கொண்டுவரபட்டு உள்ளது. ரெயில் பெட்டியில் இருந்த் 228 பணப்பெட்டிகளை உடைத்து பணம் கொள்ளையடிக்கபட்டு உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ்நாட்டில் ஓடும் ரயிலில் பணம் கொள்ளையடிக்கப்பட்டது இதுவே முதல் முறை. சம்பவம் தொடர்பாக ரிசர்வ் வங்கி அதிகாரிகள் போலீசில் புகார் அளித்துள்ளனர். பணம் ரயிலில் கொண்டு வருவதை முன்பே அறிந்த சிலரே பணத்தை கொள்ளையடித்திருக்கலாம் எனக்கூறப்படுகிறது.


இது குறித்து ரெயில்வே எஸ்.பி. விஜயகுமார் தலைமையில் போலீசார் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. தடயவியல் நிபுணர்கள் ரெயில் பெட்டியில் ஆய்வுந் நடத்தி வருகிறார்கள்.