)
Tamil Nadu Government : தமிழ்நாடு அரசு, பள்ளி மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்தும் வகையில் பல திட்டங்களை உதவித்தொகையுடன் செயல்படுத்தி வருகிறது. அதன் ஒருபகுதியாக 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாதம் தோறும் 1500 ரூபாய் வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு பள்ளிக் கல்வித்துறை மூலம் வழங்கப்படும். இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலவகாசம் நெருங்கிவிட்டது. செப்டம்பர் 4 ஆம் தேதிக்குள் தகுதியான மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். எப்படி விண்ணப்பிப்பது? எங்கு விண்ணப்பிப்பது? உள்ளிட்டதகவல்களை அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்...
தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு
பள்ளி மாணவ, மாணவியர்கள் அறிவியல், கணிதம் சார்ந்த ஒலிம்பியாய்டு தேர்வுகளுக்கு பெருமளவில் தயாராகி பங்கு பெறுவதைப் போன்று தமிழ் மொழி இலக்கியத் திறனை மாணவர்கள் மேம்படுத்திக் கொள்ளும் வகையில் "தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு" நடத்தப்பட்டு வருகிறது. 2025-2026-ஆம் கல்வியாண்டிற்கான "தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு" 11.10.2025 (சனிக்கிழமை) அன்று நடத்தப்படவுள்ளது. இத்தேர்வில் 1500 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை வழியாக மாதம் ரூ.1500/- வீதம் இரண்டு வருடங்களுக்கு வழங்கப்படும்.
தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு பாடத்திட்டம்
தமிழ்நாடு அரசின் 2025-2026 கல்வியாண்டில் வெளியிடப்பட்ட திருத்தியமைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு தமிழ் பாட புத்தகத்தில் உள்ள ஏழு(7) இயல்களில் கடந்த ஆண்டில் மாணவர்கள் பயிலாத "இயல் 2-ல் உள்ள மேகம், பிரும்மம்; இயல் 6-ல் முத்தொள்ளாயிரம்; மற்றும் இயல் 7-ல் அக்கறை" ஆகிய 4 தலைப்புகளைத் தவிர ஏனைய பகுதிகளிலிருந்து வினாக்கள் கேட்கப்படும். இத்தேர்வு கொள்குறி வகையில் நடத்தப்படும். அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டத் தலைநகரங்களில் இத்தேர்வு நடத்தப்படும்.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
2025-2026-ம் கல்வியாண்டில் தமிழகத்தில் உள்ள அங்கீகாரம் பெற்ற அனைத்து வகை பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பு பயிலும் (மெட்ரிக்/CBSE / ICSE / உட்பட) மாணவர்கள், 11:10-2025 (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ள இத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்படுகிறது. இத்தேர்வில் 50 விழுக்காடு அரசுப் பள்ளி மாணவர்களும், மீதமுள்ள 50 விழுக்காட்டிற்கு அரசுப் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பிற தனியார் பள்ளி மாணவர்களும் தெரிவு செய்யப்படுவார்கள்.
எப்படி விண்ணபிப்பது? கடைசி தேதி விவரம் ;
மாணவர்கள் விண்ணப்பங்களை www.dga.th.gov.h என்ற இணையதளம் மூலம் 22.08.2025 முதல் 04.09.2025 வரை பதிவிறக்கம் செய்து. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணத் தொகை ரூ.50/- சேர்த்து சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியரிடம் / முதல்வரிடம் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் - 04.09.2025.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ