)
Central universities scholarship 2025 : மத்திய அரசு கல்வி நிறுவனங்களான IT, IM, IIT, NIT மற்றும் மத்திய பல்கலைக் கழகங்களில் பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிறப்படுத்தப்பட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர் (IC MIC/DNC) மாணவ மாணவிகள் 2025-2026 ஆம் கல்வி ஆண்டிற்கான புதியது மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவித் தொகை (Fresh and Renewal Applications) பெற விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப விதிமுறைகளை முழுமையாக தெரிந்து கொண்டு, கொடுக்கப்பட்டுள்ள காலவகாசத்துக்குள் விண்ணப்பிக்குமாறு மாணவ, மாணவிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். யாருக்கெல்லாம் கல்வி உதவித்தொகை ரூ. 2 லட்சம் கிடைக்கும்?, அதற்கான தகுதிகள், விண்ணப்பிக்கும் முகவரி அகியவை குறித்து இங்கே தெரிந்து கொள்ளுங்கள்,
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள பட்டியலிடப்பட்ட மத்திய அரசு கல்வி நிறுவனங்களான IT.IM.IIT.NIT மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் (Central Universities) பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிறப்படுத்தப்பட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர் (BC/MBC/DNC) சார்ந்த, மாணவியர்கள் இந்த கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2. 50 லட்சத்திற்கு மிகாமல் உள்ள மாணவ, மாணவிகள் மட்டுமே இந்த கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க முடியும். குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கிடைக்கும்.
கல்வி உதவித்தொகை விண்ணப்பம்
கல்வி உதவித்தொகையாக கற்ப்பிப்பு கட்டணம், சிறப்பு கட்டணம், தேர்வு கட்டணம் மற்றும் இதர கட்டணங்களுக்காக மாணாக்கரால் செலுத்திய தொகை அல்லது ஆண்டிற்கு அதிகப்பட்சம் ரூ.2.00 இலட்சம் வரை கல்வி உதவித்தொகையாக வழங்குவதற்கு கட்டாய கட்டணம் ஆகிய தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.மேற்படிகல்வி உதவித்தொகைக்கு, 2025-26ம் கல்வியாண்டில் புதியது மற்றும் புதுப்பித்தல் (Fresh and Renewal Applications) விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான மாணாக்கர்கள் கீழ்கண்ட முகவரியிலுள்ள பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம், சென்னை-5/ மிகப்பிற்படுத்தப்பட்டோர் (ம) சீர்மரபினர் நல இயக்ககம், சென்னை-5/ மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகியோ அல்லது https://bcmbcmw.tn.gov.in/welfschemes.htm#scholarshipschemes என்ற இணையதள
முகவரியிலிருந்தோ விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
யாரெல்லாம் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள்?
மத்திய மற்றும் மாநில அரசின் இதர கல்வி உதவித்தொகைத் திட்டங்களின் கீழ் பயன்பெறும் மாணவர்கள், இக்கல்வி உதவித்தொகை பெற தகுதியற்றவராகிறார்.
விண்ணப்பிக்க கடைசி தேதி
மேலும், 202526ம் நிதியாண்டிற்கான புறியது (FRESH) மற்றும் புதுப்பித்தல் (RENEWAL) கல்வி உதவித்தொகை விண்ணப்பத்தினை, பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள், தங்களது சான்றொப்பத்துடன் (with Bonafide Certificate) தகுதியான விண்ணப்பத்தினை பிற்படுத்தப்பட்டோர் வகுப்பு இனத்தவருக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கும்.மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பு இனத்தவருக்கு மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறைக்கும், பரிந்துரை செய்து கீழ்கண்ட முகவரிக்கு பூர்த்தி செய்த புதுப்பித்தல் (Renewal) விண்ணப்பங்களை 30.09.2025-க்குள் மற்றும் புதியது (Fresh) விண்ணப்பங்களை 31.10.2025-க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
பிற்படுத்தப்பட்டோர் வகுப்பு மாணவ மாணவியர் விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி
ஆணையர், பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம், எழிலகம் இணைப்பு கட்டடம், 2வது தளம். சேப்பாக்கம், சென்னை-5, தொலைபேசி. எண்.044-29515942 மின்னஞ்சல் முகவரி - tngovtiitscholarship@gmail.com
மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பு மாணவ / மாணவியர் விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி -
ஆணையர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்ககம், எழிலகம் இணைப்பு கட்டடம், 2வது தளம், சேப்பாக்கம், சென்னை-5, தொலைபேசி எண்.9445477817மின்னஞ்சல் முகவரி. mbcdnciitscholarship@gmail.com
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ