)
Tamil Nadu government : பெண்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், அவர்களை தொழில்முனைவோர்களாக மாற்றவும் தமிழ்நாடு அரசு பல முன்னோடி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. விடியல் பயணம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், புதுமைப் பெண் திட்டம் ஆகியவற்றின் வரிசையில், பெண்கள் வேளாண் விளைபொருட்களுக்கான மதிப்பு கூட்டும் மையங்கள் அமைக்கவும் தமிழ்நாடு அரசு கடனுதவி கொடுக்கிறது. இந்த திட்டத்தில் கூடுதல் சிறப்பு என்னவென்றால் 25 விழுக்காடு மானியம் பெண்களுக்கு கிடைக்கும். தமிழ்நாடு முழுவதும் உள்ள பெண்கள் இத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம். அந்தந்த மாவட்ட ஆட்சியர்களின் அறிவிப்பின் அடிப்படையில் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கவும். இப்போது செங்கல்பட்டு மாவட்ட பெண்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது ; செங்கல்பட்டு மாவட்டத்தில் "வேளாண் விளைபொருட்களுக்கான மதிப்பு கூட்டும் மையங்கள்" திட்டத்தின் கீழ் மதிப்புக் கூட்டும் மையங்கள் அமைக்க ஆர்வமுள்ள விவசாயிகள் வேளாண் தொழில் முனைவோர்கள், பெண்கள், பழங்குடியினர், ஆதி திராவிடர் தொழில் முன்னேற்றத்தில் பின் தங்கிய வட்டாரங்களில் தொழில் துவங்கும் தொழில் முனைவோர்கள் மற்றும் பொது பிரிவினர்கள் ஆகியோர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இத்திட்டத்தில் பயனடைய தனியுரிமை, கூட்டாண்மை உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் அல்லது கூட்டுறவு நிறுவனங்களும் விண்ணப்பிக்கலாம்.
என்னென்ன தொழில்கள் தொடங்கலாம்?
இத்திட்டத்தில் புதிய மதிப்புக் கூட்டும் அலகுகளை நிறுவுவதற்கு நிதி ஆதரவு வழங்கப்படுவதோடு தேர்ந்தெடுக்கப்படும் தகுதி வாய்ந்த தொழில்களான நவீன அரிசி ஆலை, வேர்கடலை மதிப்புக் கூட்டும் ஆலைகள், சமையல் எண்ணெய் தயாரிக்கும் ஆலைகள், பழக்கூழ் குழைமங்கள் தயாரிக்கும் ஆலைகள், காய்கறிகள் பதப்படுத்தும் கூடங்கள். ஜவ்வரிசி ஆலைகள் சமையல் மசாலாக்கள் தயாரிக்கும் ஆலைகள் போன்ற வேளாண்/தோட்டக்கலை விளைபொருட்களின் இரண்டாம் நிலை அல்லது மூன்றாம் நிலை பதப்படுத்தும் திட்டங்களாக இருக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசு கொடுக்கும் பயிற்சி
இத்திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட தொழில் முனைவோர்களுக்கு தொழில்நுட்பம் மற்றும் சந்தை வாய்ப்புகளுக்கான பயிற்சி மூன்றாண்டுகளுக்கு வழங்கப்படுவதோடு மதிப்புக் கூட்டும் அலகுகள் அமைப்பதற்குரிய உரிமங்கள் மற்றும் சான்றிதழ்கள் ஒற்றைச் சாளர அனுமதி (Single Window Clearance) முறையின் கீழ் பெற்றுத் தரப்படும்.
கடன் மற்றும் வட்டி மானியம் விவரம்
இத்திட்டமானது ரூபாய் 10 கோடி வரையிலான புதிய திட்டங்களுக்கு முதலீட்டு மானியம் 25 சதவீதம், பெண்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு கூடுதலாக 10 சதவீதம் ஆக மொத்தம் 35 சதவீதம் என அதிகபட்சமாக ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய், இதில் எது குறைவாக உள்ளதோ அவை மானியமாக வழங்கப்படும். இது தவிர அனைத்து பிரிவினருக்கும் 5 சதவீத வட்டி மானியம் 5 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். ஒன்றிய அரசின் கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ் ரூ. 200 கோடி வரை (CGTMSE) வழங்கப்படுகிறது. திட்ட மதிப்பீட்டில் பயனாளிகளின் பங்களிப்பு குறைந்தபட்சம் 5% ஆக இருக்க வேண்டும் மற்றும் மீதமுள்ள தொகை வங்கிக் கடனாக வழங்கப்படும். மேலும் ஒன்றிய மற்றும் மாநில அரசு திட்டங்களின் கீழ் ஏற்கனவே நிதி உதவி பெற்ற பயனாளிகளும் இத்திட்டத்தில் பயன்பெற தகுதியுடையவர்கள்.
எப்படி விண்ணபிப்பது?
கூடுதல் விபரங்களுக்கு செங்கல்பட்டு மாவட்ட வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் வட்டார உதவி வேளாண்மை அலுவலர்கள் அல்லது வேளாண்மை அலுவலர் (வேளாண் வணிகம்) செங்கல்பட்டு அவர்களை 9080640338 என்ற அலைபேசி எண்ணிலும் அல்லது ddab.chengalpattu2023@gmail.com என்ற மின்னஞ்சல் அல்லது செங்கல்பட்டு. மாவட்ட ஆட்சியர் அலுவலகம், 3.ஆம் தளம் B.பிளாக் இல் செயல்படும் வேளாண் துணை இயக்குநர் (வேளாண் வணிகம்), செங்கல்பட்டு அலுவலகத்தையும் தொடர்பு கொள்ளலாம். மற்ற மாவட்டத்தினர் உங்கள் மாவட்டத்தில் உள்ள வேளாண் அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ