ரூ.25 லட்சம் ரேஷன் கார்டு கடன் உண்மையா? எந்த மாவட்டத்தினர் விண்ணப்பிக்கலாம்?

Ration Card Loan Tamil Nadu : தமிழ்நாடு அரசு வழங்கும் ரூ.25 லட்சம் ரேஷன் கார்டு கடன் உண்மையாக யாருக்கு கிடைக்கும்?, எந்த மாவட்டத்தினர் விண்ணப்பிக்கலாம் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். 

Written by - Karthikeyan Sekar | Last Updated : Jul 6, 2025, 12:10 PM IST
  • தமிழ்நாடு ரேஷன் கார்டு லோன் உண்மையா?
  • யாருக்கெல்லாம் ரூ.25 லட்சம் கிடைக்கும்?
  • இப்போது உடனே விண்ணப்பிக்க அரசு அறிவுறுத்தல்
ரூ.25 லட்சம் ரேஷன் கார்டு கடன் உண்மையா? எந்த மாவட்டத்தினர் விண்ணப்பிக்கலாம்?

Ration Card Loan Tamil Nadu : தமிழ்நாடு அரசு தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் கடன் தொகுப்பு திட்டங்களை வைத்துள்ளது. அந்தவகையில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த தனிநபர்கள் இப்போது Tabcedco மூலம் லோன் பெற விண்ணப்பிக்கலாம். அதாவது tamil nadu backward classes economic development corporation limited என்பதன் சுருக்கமே Tabcedco ஆகும். இது பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் வகுப்பனரின் முன்னேற்றத்துக்காக செயல்படும் தமிழ்நாடு அரசின் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தின் கீழ் ரூ.25 லட்சம் தனிநபர் தொழில் கடன்பெற ரேஷன் கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் அவசியம். இது குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம். 

Add Zee News as a Preferred Source

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்கள் தங்களது பொருளாதார முன்னேற்றத்திற்காக சாத்தியக்கூறுள்ள சிறு தொழில்கள் மற்றும் வியாபாரம் செய்ய தனி நபர் கடன் மற்றும் குழுக்கடன் திட்டங்களுக்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் கடன் உதவி வழங்கி வருகிறது. இப்போது ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தனிநபர் கடன் பெற விண்ணப்பிக்கலாம். அதற்கான முழு அறிவிப்பு விவரம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்...

Tabcedco தனிநபர் கடன் வாங்குபவர்களுக்கான தகுதிகள்

1) விண்ணப்பதாரர் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தவராக இருத்தல் வேண்டும்.

2) குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3,00,000/- க்கு மிகாமல் இருக்க வேண்டும். 3) விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 60 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

4) ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும்.

5) தனிநபர் கடன் திட்டத்தின் கீழ் சிறுவர்த்தகம் / வணிகம், விவசாயம் மற்றும் அதனை சார்ந்த தொழில்கள், கைவினைப் பொருட்கள் மற்றும் மரபு வழி சார்ந்த தொழில்கள் செய்வதற்கு அதிக பட்சமாக ரூ.25.00 இலட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் ரூ.1.25 இலட்சம் வரை 7% மற்றும் ரூ.1.25 இலட்சம் முதல் ரூ.15.00 இலட்சம் வரை 8% கடனைத் திரும்ப செலுத்தும் காலம் 3 முதல் 5 ஆண்டுகள் வரை.

6) குழுக் கடன் திட்டத்தின் கீழ் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் சிறுதொழில் / வணிகம் செய்வதற்கு ஒருவருக்கு அதிக பட்சமாக ரூ.1.25 இலட்சம் வரையும் குழு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.25.00 இலட்சம் வரையும் ஆண்டிற்கு 7% வட்டி விகிதத்தில் கடனுதவி வழங்கப்படுகிறது. கடனைத் திரும்ப செலுத்தும் காலம் 3 ஆண்டுகள். சுய உதவிக் குழு துவங்கி ஆறு மாதங்கள் பூர்த்தியாகியிருக்க வேண்டும். திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) அவர்களால் தரம் (Grading) செய்யப்பட்டிருக்க வேண்டும். ஒரு குழுவில் அதிகபட்சம் 20 உறுப்பினர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இருபாலருக்கான சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கும் இக்கடனுதவி வழங்கப்படுகிறது.

7) பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக உள்ளவர்களுக்கு ஒரு கறவை மாட்டிற்கு ரூ.60,000/- வீதம் 2 கறவை மாடுகள் வாங்க அதிகபட்சம் ரூ.1,20,000/- வரை கடனுதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 7% திரும்ப செலுத்தும் காலம் 3 ஆண்டுகள்

8) ஈரோடு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக் கிளைகளிலும் கடன் விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம். மேலும் இக்கழக இணையதள முகவரியில் (www.tabcedco.tn.gov.in) பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.

9) விண்ணப்பதாரர்கள் கடன் விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து சாதி, வருமானம் மற்றும் பிறப்பிடச் சான்றிதழ், ரேஷன் கார்டு (Ration Card), ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை மற்றும் வங்கி கோரும் ஆவண நகல்களுடன் சம்பந்தப்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் சமர்ப்பிக்க வேண்டும்.

எனவே, ஈரோடு மாவட்டத்தில் வசிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்கள் கடன் விண்ணப்பங்களைப் பெற்று உரிய ஆவணங்களுடன் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கட்டிடத்தில் (4-வது தளம்) செயல்படும் மாவட்ட
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலஅலுவலகத்தை (தொலைபேசி எண். 0424-2260255 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விண்ணப்பங்களை சமர்ப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும் படிக்க | ரேஷன் கார்டு வகையை மாற்றிக் கொள்ளலாம் - தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு

மேலும் படிக்க | புதிய ரேஷன் கார்டு வாங்க வேண்டுமா? ஈஸியாக வாங்கலாம் - இதுவே சரியான நேரம்

மேலும் படிக்க | ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ரூ.25 லட்சம் கடன் - தமிழ்நாடு அரசின் சூப்பர் திட்டம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

...Read More

Trending News